search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy Note 10"

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான மாடல்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஜாக் மற்றும் பட்டன்கள் நீக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மற்ற ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் சமீபகாலங்களில் நீக்கப்படும் பல்வேறு அம்சங்கள் இதுவரை வெளியான கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன.



    ஸ்மார்ட்போன்களில் மெமரியை நீட்டிக்கும் வசதி அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது. கேலக்ஸி நோட் 10 மாடலில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவது அந்நிறுவன வாடிக்கையாளர்களை பாதிக்கலாம். மற்றபடி ஸ்மார்ட்போனின் பட்டன்களை பொருத்தவரை பவர் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் போன்றவை நீக்கப்படும் என தெரிகிறது.

    ஏற்கனவே பலமுறை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இருவித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவை கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ரோ என அழைக்கப்படும் என தெரிகிறது.

    இதன் ஸ்டான்டர்டு மாடலில் 6.28 இன்ச் டிஸ்ப்ளேவும், ப்ரோ மாடலில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 சீரிசின் முன்புற பேனல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதன் ஒற்றை செல்ஃபி கேமரா பன்ச் ஹோல் முறையில் டிஸ்ப்ளேவின் மேல்புற மத்தியில் பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு நான்கு கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote10



    சாம்சங் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கேலக்ஸி எஸ் ஃபிளாக்‌ஷிப் சீரிசில் எஸ்10, எஸ்10 பிளஸ், எஸ்10இ மற்றும் எஸ்10 5ஜி என நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் இதே வழக்கத்தை பின்பற்றி நான்கு கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து கொரியாவில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 நான்கு வித அளவுகளில் வெளியாகும் என்றும் இதன் டாப்-எண்ட் மாடலில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இவற்றில் இரண்டு எல்.டி.இ. மாடல்கள் 6.28 இன்ச் மற்றும் 6.75 இன்ச் அளவுகளை கொண்டிருக்கும் என்றும் மற்ற இரண்டு மாடல்களில் வெவ்வேறு டிஸ்ப்ளேக்கள் ஒரே மாதிரியான கேமரா சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    கேலக்ஸி நோட் 10 டிஸ்ப்ளே அளவு பற்றிய தகவல்கள் வெளியாவது இதுவே முதல் முறையாகும். புதிய நோட் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இது கேலக்ஸி எஸ்10 சீரிசில் வழங்கப்பட்டிருப்பதை போன்றிருக்கும் என தெரிகிறது. 

    கேலக்ஸி எஸ்10 சீரிஸ் நான்கு மாடல்களை அறிமுகம் செய்வதன் மூலம் சந்தையில் குறிப்பிடத்தகுந்த வகையில் பிரிக்க முடியும் என தெரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விற்பனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலான கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3D டெப்த் சென்சார்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote10



    சாம்சங் நிறுவனத்தின் 2019 நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி நோட் 10 உருவாகி வருகிறது. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் சாம்சங் பல்வேறு மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    புதிய நோட் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இவற்றில் 12 எம்.பி. f/2.4 டெலிபோட்டோ லென்ஸ், OIS, இரண்டாவதாக 12 எம்.பி. f/1.5-f/2.4 டூயல் அப்ரேச்சர், OIS வசதி, மூன்றாவது 16 எம்.பி. f/2.2 அப்ரேச்சர் அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் நான்காவதாக 3D ToF சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் SM-N975F என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதன் 4ஜி வேரியண்ட் SM-N970 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்திருந்தது. 



    இதில் 6.4 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் மிகப்பெரிய டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.

    இதுதவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் சூப்பர் ஸ்லோ மோஷன் வீடியோ பதிவு செய்யும் வசதி, IP68 தர சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, டால்பி அட்மாஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. மென்பொருள் ரீதியாக புதிய நோட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், ஒன் யு.ஐ. கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. மெமரி என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கும்.
    ×