search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy S10"

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #GalaxyS10



    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.46,900 முதல் வாங்க முடியும். அந்த வகையில் பயனர்களுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

    சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.9,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மற்ற வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 கேஷ்பேக் பெறலாம். அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.9000 வரை கேஷ்பேக் பெறலாம்.



    கேலக்ஸி எஸ்10 (128 ஜி.பி.) வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 கேஷ்பேக்கும், மற்ற கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 வரை கேஷ்பேக் பெற முடியும். இதேபோன்று 512 ஜி.பி. மாடல் வாங்கும் போது ரூ.8,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. வேரியண்ட்களை வாங்கும் போது ரூ.9000 அப்கிரேடு போனஸ் மற்றும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்து்ம போது ரூ.6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இச்சலுகையின்றி கேல்கஸி எஸ்10 பிளஸ் 1000 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி எஸ்10 (512 ஜி.பி.) மாடல் ரூ.84,900 என்றும் 128 ஜி.பி. மாடல் விலை ரூ.66,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10இ 128 ஜி.பி. மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம். #GalaxyS10 #Smartphone



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான விழா அழைப்பிதழ்களை சாம்சங் வெளியிட்டிருக்கிறது. புதிய எஸ்10 சீரிசில் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ என மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. 

    இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 பேஸ் வேரியண்ட் விலை ரூ.66,900, கேலக்ஸி எஸ்10 பிளஸ் விலை ரூ.73,900 என்றும் கேலக்ஸி எஸ்10இ விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் விநியோகம் மார்ச் 8 ஆம் தேதி துவங்குகிறது. எனினும் ஸ்மார்ட்போனினை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு மார்ச் 6 ஆம் தேதியே விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க ஏர்டெல் எளிய மாத தவணை முறை வசதியை அறிவித்துள்ளது. #GalaxyS10 #Airtel



    சாம்சங் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு முன்பதிவும் துவங்கியிருக்கிறது.  

    இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு எளிய மாத தவணை சலுகையை அறிவித்துள்ளது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. வேரியண்ட், கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. வேரியண்ட் ஏர்டெல் தளத்தில் மாத தவணையில் வாங்கிட முடியும்.

    ஏர்டெல் சலுகையில் கேலக்ஸி எஸ்10 128 ஜி.பி. வேரியண்ட் வாங்க ரூ.9,099, 512 ஜி.பி. வேரியண்ட் வாங்க ரூ.13,809 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலுக்கு ரூ.15,799 முன்பணமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    முன்பணம் செலுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் 128 ஜி.பி. மாடலுக்கு மாதம் ரூ.2,999 தொகையை 24 மாதங்களுக்கும், 512 ஜி.பி. மாடலுக்கு ரூ.3,499 24 மாதங்களுக்கு தவணையாக செலுத்த வேண்டும். 



    அந்த வகையில் முன்பணம் மற்றும் தவணை தொகையை சேர்க்கும் போது கேலக்ஸி எஸ்10 128 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.81,075, கேலக்ஸி எஸ்10 512 ஜி.பி. விலை ரூ.97,785 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. விலை ரூ.87,775 செலுத்துவர். 

    புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.

    கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் முன்பதிவு பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என சாம்சங் அறிவித்துள்ளது. இவற்றின் விநியோகம் மார்ச் 6 ஆம் தேதி துவங்குகிறது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. #GalaxyS10 #Smartphone



    சாம்சங் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியும், 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி என இருவித மாடல்களில் கிடைக்கிறது.

    கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் வைட் மற்றும் ப்ரிஸ்ம் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. மெமரி என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. 

    கேலக்ஸி எஸ்10 பிளஸ் 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி மாடல்கள் லக்சூரியஸ் வைட், செராமிக் வைட் மற்றும் செராமிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் வைட் மற்றும் ப்ரிஸ்ம் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியில் கிடைக்கிறது.



    அறிமுக சலுகை:

    புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை அறிவிக்கப்பட்டிருப்பதோடு இவற்றுக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளன. கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

    புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #GalaxyS10 #Smartphone



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ என மூன்று ஸ்மார்ட்போன்களை சாம்சங் இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளது.

    மூன்று கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களிலும் புதிய பன்ச்-ஹோல் ரக செல்ஃபி கேமராக்களை வழங்கி இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பிராசஸர், டைனமிக் AMOLED டிஸ்ப்ளேக்கள், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் சான்று, ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்டவை மூன்று மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 சீரிசில் வைபை 802.11ax, டால்பி அட்மோஸ், வேப்பர் சேம்பர் கூலிங் சி்ஸ்டம் (கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் மட்டும்), ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0, வயர்லெஸ் பவர்ஷேர் (மற்ற சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் போன்றே கேலக்ஸி எஸ்10 மாடல்களிலும் IP68 தர சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி வேரியண்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 6.7 இன்ச் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 3டி டெப்த் கேமரா, 3 ஜி.பி. ரேம் மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
     


    கேலக்ஸி எஸ்10 சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
    - 8 ஜி.பி. ரேம்
    - 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS
    - 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
    - 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
    - 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. (இரு வேரியண்ட்கள்)
    - இரு வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
    - அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    கேலக்ஸி எஸ்10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
    - 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம்
    - 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS
    - 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
    - 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
    - 8 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2
    - 128 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. (மூன்று வேரியண்ட்கள்)
    - மூன்று வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
    - அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    கேலக்ஸி எஸ்10இ சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஃபிளாட் டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS
    - 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2
    - 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9
    - 128 ஜி.பி., மற்றும் 512 ஜி.பி. (இரு வேரியண்ட்கள்)
    - இரு வேரியண்ட்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஹோம் பட்டனில் கேபாசிட்டிவ் கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3100 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்பம்சங்கள்:

    சாம்சங் கேலக்ஸி எஸ் 10 5ஜி மாடலில் குவாட் ஹெச்.டி. பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் கேலக்ஸி எஸ்10 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அதே பிராசஸர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இதில் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க நான்கு கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மூன்று கேமரா சென்சார்கள் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்றும் நான்காவதாக 3டி டெப்த் சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. டூயல் பிக்சல் AF, f/1.9, இரண்டாவது செல்ஃபி கேமரா hQVGA ரெசல்யூஷன் வழங்கும் 3டி டெப்த் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி எஸ்10 5ஜி மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ விலை: 

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 விலை 899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.63,900) முதல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன் மற்றும் ப்ரிஸ்ம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்10 பிளஸ் விலை 999.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,000) முதல் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன், ப்ரிஸ்ம் வைட், செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

    கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விலை 749.99 டால்ர்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,300) முதல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன் ப்ரிஸ்ம் வைட் மற்றும் சேனரி எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. மூன்று கேலக்ஸி எஸ்10 மாடல்களும் மார்ச் 8 ஆம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியானது. #GalaxyS10 #Flipkart



    சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீட்டிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் பதிவிடப்பட்டது. கேலக்ஸி எஸ்10 அறிமுக நிகழ்வின் இந்திய நேரத்துடன் ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு பேனர் வெளியிடப்பட்டிருந்தது. இத்துடன் கேலக்ஸி எஸ்10 அறிமுக நிகழ்வுக்கான நோட்டிஃபை பட்டனும் இடம்பெற்றிருந்தது.

    புதிய டீசர் வெளியாகியிருப்பதையொட்டி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சர்வதேச வெளியீட்டுடன் அறிமுகமாகும் என்பதை உணர்த்துகிறது. இத்துடன் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் இயர்போன் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    கேலக்ஸி அன்பேக்டு 2019 விழா சான்பிரான்சிஸ்கோ நகரில் பிப்ரவரி 20, காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி பிப்ரவரி 21, நள்ளிரவு 12.30 மணி) துவங்குகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுக நிகழ்வுக்கான பேனரில் விழா அழைப்பிதழும் இடம்பெற்றிருந்தது.

    ப்ளிப்கார்ட்டில் மட்டும் விளம்பரப்படுத்தப்பட்டு இருப்பதால், கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமானதும் இந்தியாவில் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மார்ச் 8 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட சில சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. 

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போன்களுக்கான முன்பதிவுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி துவங்கும் என கூறப்பட்டது. இம்முறை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10இ, கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இவற்றின் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #SamSung #GalaxyS10
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இவற்றின் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

    அதன்படி புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களில் பன்ச்-ஹோல் செல்ஃபி கேமரா மற்றும் செக்யூர் க்ரிப்டோவாலெட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் முன்பக்க கேமராக்கள் வழங்கப்படுகிறது.

    இதனால் கேலக்ஸி எஸ்10 மாடலை விட கேலக்ஸி எஸ்10 பிளஸ் சற்றே அகலமான இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. வன்பொருள் அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே, எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: All About Samsung

    இருசாதனங்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் கிரில், பிரைமரி மைக்ரோபோன் வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ்கள், மூன்று பிரைமரி கேமரா, இரண்டு செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமரா, மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. எனினும், இரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை உறுதிசெய்யும் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சாம்சங் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான மாடல் நம்பர் இடம்பெற்றிருக்கும் நிலையில், புதிய கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல்களில் பெயர் குறிப்பிடப்படவில்லை.

    சாம்சங்கின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் 9820 சிப்செட், டிசை-கிளஸ்டர் சி.பி.யு., இன்டகிரேட்டெட் என்.பி.யு., எல்.டி.இ. அட்வான்ஸ்டு ப்ரோ மோடெம் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுகிறது. #SamSung #GalaxyS10
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அன்பேக்டு 2019 விழாவில் அறிமுகமாக இருக்கிறது. இதற்கான தேதியை சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #SamsungEvent #unpacked2019



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு 2019 விழா பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மற்ற நிறுவனங்கள் தங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், சாம்சங் முன்னதாக தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 25 ஆம் தேதி பார்சிலோனாவில் துவங்குகிறது. 



    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 சீரிசில் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் என மூன்று வித அளவுகளில் அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இன்ஃபினிட்டி ஓ ரக ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும், குவால்காம் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் எஸ்10 சீரிஸ் டாப் என்ட் மாடல்களில் வழங்கப்படுகிறது.

    இதில் கேலக்ஸி எஸ்10இ (லைட்) ஸ்மார்ட்போனில் மட்டும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாது என கூறப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் 9820 8 என்.எம். பிராசஸர், டிரை-கிளஸ்டர் சி.பி.யு., இன்டகிரேட் செய்யப்பட்ட என்.பி.யு. வழங்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு அவை அறிமுகம் செய்யப்படதும் துவங்கிவிடும் என்றும், விநியோகம் மார்ச் 8 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyS10 #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாக இருக்கின்றன. சாம்சங்கின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. எனினும், ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது.

    இந்த குறையை தீர்க்கும் வகையில் கேலக்ஸி எஸ்10 பியான்ட் 1 லைவ் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே எதிர்பார்க்கப்படுவதை போன்று கேலக்ஸி எஸ் 10 சீரிஸ் இன்ஃபினிட்டி ஒ ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் சிறு துளையினுள் செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இதனால் டிஸ்ப்ளேவுக்கு அதிக இடம் கிடைக்கிறது. ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ போன்று கேலக்ஸி எஸ்10 பியான்ட் 1 மாடலிலும் மற்ற கைப்பேசி அல்லது வாட்ச்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படலாம்.



    கேலக்ஸி எஸ் 10 சீரிசின் பேஸ் மாடலாக பியான்ட் 1 இருக்கும் என்பதால், இதில் ஒற்றை செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இதன் பிளஸ் வேரியன்ட்டில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் மேல்பக்கம் மற்றும் கீழ்புறங்களில் முந்தைய கேலக்ஸி எஸ்9 மற்றும் நோட் 9 மாடல்களை விட மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் என மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் குவால்காம் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் எக்சைனோஸ் 9820 சிப்செட், டிரை-கிளஸ்டர் சி.பி.யு, இன்டகிரேட் செய்யப்பட்ட என்.பி.யு., அதிகபட்சம் நொடிக்கு 2 ஜி.பி. (2Gbps) எல்.டி.இ. மேம்படுத்தப்பட்ட ப்ரோ மோடெம் வழங்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும்.
    சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு, விலை உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyS10 #Smartphones



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. 

    இந்நிலையில், கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் வெளியீடு, ஸ்டோரேஜ் விவரம், ஸ்கிரீன் அளவுகள், சில அம்சங்கள் மற்றும் லண்டன் விலை உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 

    அதன்படி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2019 மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன், அதாவது பிப்ரவரி 20ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தற்சமயம் லீக் ஆகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு அதே நாளில் துவங்கி, மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது.



    கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள்: வழக்கமான மாடல், பிளஸ் மற்றும் ஃபிளாட் என மூன்று வித வேரியன்ட்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இவற்றில் வழக்கமான 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படும் என்றும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஹூவாய் மேட் 20 ப்ரோ போன்றே கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனிலும் மற்ற சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.



    ஸ்கிரீன் அளவுகளை பொருத்த வரை கேலக்ஸி எஸ்10 மாடலில் 6.1 இன்ச், கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் 6.4 இன்ச் மற்றும் ஃபிளாட் வெர்ஷனில் 5.8 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான கேலக்ஸி எஸ்10 ஃபிளாட் வெர்ஷனில் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என்றும் இதன் விலை 669 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.60,730) என தெரிகிறது.

    இதேபோன்று 6.1 இன்ச் ஸ்கிரீன் கொண்ட கேலக்ஸி எஸ்10 வழக்கமான வளைந்த எடிஷன் 128 ஜி.பி. அல்லது 512 ஜி.பி. என இருவித ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இவற்றின் விலை முறையே 799 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.72,517) என்றும் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.90,668) என கூறப்படுகிறது. #GalaxyS10 #Smartphones
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் 12 ஜி.பி. டேட்டா, அதிகபட்சம் 1000 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. #GalaxyS10 #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் 5ஜி வேரியன்ட் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    5ஜி வேரியன்ட் ஸ்மார்ட்போன் பியான்ட் எக்ஸ் என அழைக்கப்படும் என்றும் இதில் அதிகபட்சம் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் ஆறு கேமராக்கள் வழங்கப்படும் என்றும் கேலக்ஸி எஸ்10 டாப்-என்ட் ஸ்மார்ட்போன் மற்ற மூன்று மாடல்களுடன் பிப்ரவரி 2018இல் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் 5ஜி வேரியன்ட், 5ஜி நெட்வொர்க் பொதுப்படியாக வெளியாகும் போது வெளியிடப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வைட், பிளாக், எல்லோ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் சில மாடல்களில் கிரேடியன்ட் நிற ஆப்ஷனும் கொண்டிருக்கலாம்.

    இதேபோன்று செராமிக் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பயனர்களுக்கு அதிசிறப்பான அனுபவத்தை வழங்கும் நோக்கில் எசென்ஷியல் போன் மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை செராமிக் மூலம் உருவாக்க துவங்கிவிட்டன.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களை SM-G973 மற்றும் SM-G975 என இருவித வேரியன்ட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.44 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் 5.8 இன்ச் வேரியன்ட் இரண்டு பிரைமரி கேமராக்களையும், 6.44 இன்ச் மாடல் மூன்று பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களையும், இரண்டு செல்ஃபி கேமரா லென்ஸ் என மொத்தம் ஆறு கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 

    இதனுடன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி மூலம் பயனர்கள் தங்களது வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட சாதனங்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

    மேலும் புதிய கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. #GalaxyS10 #smartphone
    சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன எக்சைனோஸ் பிராசஸரின் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Samsung



    சாம்சங் நிறுவனம் நவம்பர் 14ம் தேதி தனது புதிய எக்சைனோஸ் பிராசஸரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புது எக்சைனோஸ் பிராசஸரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

    நவம்பர் 14ம் தேதி சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய பிராசஸர் தற்போதைய கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் எக்சைனோஸ் 9810 பிராசஸரின் மேம்படுத்தப்பட்ட பிராசஸராக இருக்கும்.

    சாம்சங் முந்தைய வழக்கப்படி எண்ணியல் முறையில் பெயரிடும் பட்சத்தில் புதிய பிராசஸர் எக்சைனோஸ் 9820 என அழைக்கப்படலாம். புதிய பிராசஸர் சாம்சங் நிறுவனத்தின் முதல் 7 என்.எம். LPP வழிமுறையில் உருவாக்கப்பட்ட பிராசஸராக இருக்கும்.

    இந்த தொழில்நுட்பம் 50 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்தி, சாதனத்தின் செயல்திறனை 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.



    அறிமுக நிகழ்வு குறித்து சாம்சங் வெளியிட்டிருக்கும் டீசரில் “intelligence from within.” என எழுதப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய பிராசஸரில் நியூரல் பிராசஸிங் யூனிட் வழங்கப்படலாம். முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் கேலக்ஸி எஸ்10 பிராசஸரில் பிரத்யேக நியூரல் பிராசஸிங் யூனிட் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் புதிய பிராசஸர் டூயல்-கோர் செயற்கை நுண்ணறிவு சிப் கொண்டிருக்கும் என்றும் இதனால் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் கொண்டு கடினமான செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் அம்சங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய எக்சைனோஸ் பிராசஸரில் 5ஜி மோடெம் வசதிக்கான சப்போர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் தனது சாதனங்களில் 5ஜி வசதியை வழங்க எக்சைனோஸ் 5100 மோடெம் ஒன்றை சாம்சங் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் 5ஜி வசதி கொண்ட தனி கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ×