search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy Unpacked"

    • மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்கிறது.
    • சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்.

    சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில்- ஒருமுறை சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களும், மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

    இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், இந்த ஆண்டிற்கான அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி பாரிஸ் நகரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பார்டனராக சாம்சங் நிறுவனம் இருக்கிறது. அந்த வகையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இரு வாரங்களுக்கு முன்பு கேலக்ஸி அன்பேக்டு நிகவ்வை நடத்த சாம்சங் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    சாம்சங்கின் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் தவிர கேலக்ஸி Z ஃபோல்டு FE மற்றும் Z ஃப்ளிப் FE மாடல்கள் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவற்றுடன் கேலக்ஸி ரிங் சாதனத்தின் விலை விவரங்கள் இந்த நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த சாதனம் கேலக்ஸி S24 அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்பட்டு, 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×