என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Games"
- விளம்பரங்கள் இல்லா வீடியோக்களை பார்க்க முடியும்.
- யூடியூப் தளத்திற்குள் நேரடியாக விளையாடலாம்.
வீடியோக்களுக்கான உலகின் முன்னணி வலைதளமாக யூடியூப் செயல்படுகிறது. இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும் பிரீமியம் சந்தாவில் புதிய வசதிகளை செயல்படுத்தும் பணிகளில் யூடியூப் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில், யூடியூப் பிரீமியம் சந்தாவின் கீழ் கேமிங் செய்வதற்கான வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. புதிய அறிவிப்பின் படி பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தா வாங்கும் போது விளம்பரங்கள் இல்லா வீடியோக்களை பார்ப்பதோடு, கேமிங் சேவையை பயன்படுத்த முடியும்.
புதிய கேமிங் சேவை "யூடியூப் பிளேயபில்ஸ்" (Youtube Playables) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக யூடியூப் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளங்களில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில் பயனர்கள் விளையாடுவதற்காக நிறைய கேம்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை பயனர்கள் யூடியூப் தளத்திற்குள்ளேயே நேரடியாக விளையாட முடியும்.
யூடியூப் பிளேயபில்ஸ் சேவை பிரீமியம் சந்தா வைத்திருப்போருக்காக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேம்களை தற்போதைக்கு டெஸ்க்டாப்-இல் இலவசமாக விளையாட முடியும். மொபைல் செயலியிலும் யூடியூப் பிளேயபில்ஸ் கிடைக்கிறது. எனினும், யூடியூப் பிரீமியம் வைத்திருப்போர் கூட இதில் உள்ள கேம்களை விளையாட முடியாது. அந்த வகையில், இந்த சேவை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றே தெரிகிறது.
புதிய கேமிங் சேவையை பயன்படுத்த விரும்புவோர், யூடியூப் -- எக்ஸ்புளோர் -- யூடியூப் பிளேயபில்ஸ் போன்ற ஆப்ஷன்களில் இயக்க முடியும். இந்த சேவையில் கேம்கள் பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் எளிதான கேம்களும் உள்ளன. கடினமான கேம்களும் உள்ளன. முதற்கட்டமாக பயனர்கள் யூடியூப் பிளேயபில்ஸ்-இல் உள்ள கேம்களை இலவசமாக விளையாட முடியும்.
அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதிக்கு பிறகு கேம்களை யூடியூப் பிரீமியம் பயனர்களுக்கு தொடர்ந்து வழங்குவது பற்றி யூடியூப் முடிவு செய்ய உள்ளது. தற்போதைக்கு கேம்கள் இலவசமாக வழங்கப்படுவதால், பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தா செலுத்தாமலும் கேம்களை விளையாடி பார்க்க முடியும்.
- ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறை உள்ளது.
- அவர்களின் பாடங்களை உண்மையாக புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு நேரத்தை வழங்க வேண்டும்.
உங்கள் குழந்தையின் கற்றல்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் போராடலாம், மேலும் தன்னம்பிக்கையுடன் உணரலாம். நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. உங்கள் பிள்ளைக்கு குறிப்பாக எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும், இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிப்பது அவர்களின் நினைவாற்றலையும் மூளையையும் மேலும் கூர்மைப்படுத்த உதவும்.
ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் சவாலான வழி நினைவக விளையாட்டுகளை விளையாடுவதாகும். இவை எங்கும் விளையாடக்கூடிய சுயமாக உருவாக்கப்பட்ட கேம்களாக இருக்கலாம் அல்லது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடுவதற்கான போர்டு கேம்களாக இருக்கலாம், நண்பர்களுடன் விளையாடும் ஆன்லைன் கேம்களாக இருக்கலாம்.
விருப்பங்களும் யோசனைகளும் வரம்பற்றவை. உங்கள் குழந்தை வளரும் ஆண்டுகளில் இதுபோன்ற விளையாட்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அவர்களின் நினைவாற்றல் தசைகளுக்கு பயிற்சி அளித்து, விஷயங்களையும் தகவலையும் சரியாக நினைவுபடுத்தும் மற்றும் நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும். (உதாரணத்திற்கு விடுகதை, பொதுஅறிவு).
பள்ளி பாடங்களை கற்றுக்கொள்வதற்கு இது குறிப்பாக பொருந்தும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறை உள்ளது. அவர்களின் பாடங்களை உண்மையாக புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு நேரத்தை வழங்க வேண்டும். மேலும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும்போது அவர்கள் எந்தவித அழுத்தமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ உணரக்கூடாது. மாறாக, உங்கள் பிள்ளையின் ஆர்வத்தை ஊக்குவித்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இந்த மனப்பான்மை மிகவும் அவசியம், அதனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
நினைவகத்தை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் சுமார் 8-10 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வழக்கமான தூக்க அட்டவணையை வைத்திருப்பதும் முக்கியம். மேலும் அவர்கள் சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்வது முக்கியம்.
இதனால் அவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு எழுந்திருக்கும் முன் போதுமான ஓய்வு பெறலாம். குறிப்பாக இளம் வயது குழந்தைகளுக்கு தூக்க நேரமும் முக்கியமானது.
நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஆய்வில், காலையில் பார்த்த கார்ட்டூன் படங்களை நினைவுபடுத்தும் குழந்தைகளின் திறன் பிற்பகல் தூக்கத்திற்குப் பிறகு 10 சதவீதம் அதிகரிக்கிறது.
பச்சை இலை காய்கறிகள் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றின் வளமான மூலமாகும். ஏ, பி, சி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கடுகு இலைகள், கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை சேர்க்க வேண்டிய காய்கறிகள்.
உங்கள் குழந்தை தினமும் அவற்றை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கீரையுடன் சாலட்களையும் தயார் செய்யலாம். புதினா இலைகளை புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் சேர்க்கலாம், கொத்தமல்லி இலைகளை அனைத்து வகையான கறிகளையும் அலங்கரிக்க பயன்படுத்தலாம்.
குழந்தைகள் பெரும்பாலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். மேலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க அவர்களுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. அவர்களின் உணவில் கொட்டைகள் மற்றும் விதைகளை சேர்ப்பது ஆற்றலை வழங்குவதோடு அவர்களின் மூளையை திறனை அதிகரிக்கவும் உதவும். வால்நட்ஸ் மூளையின் வடிவத்தை ஒத்திருக்கிறது மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை வழங்குவதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
பாதாம் பருப்பை 28 நாட்களுக்கு உட்கொள்வது நினைவாற்றலை கணிசமாக மேம்படுத்தும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற ஆரோக்கியமான பருப்புகளில் நிலக்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை.
பூசணி விதை, சியா விதைகள், எள் விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகள் அழற்சி எதிர்ப்பு விளைவை கொண்டிருக்கின்றன, இது குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. இவற்றை நேரடியாக சாப்பிடலாம் அல்லது கேக், மில்க் ஷேக், கீர் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.
நமது மூளை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் டிஎச்ஏ போன்ற கொழுப்புகளால் ஆனது, அவை பெரும்பாலும் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சால்மன் போன்ற மீன்களில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் மூளை மற்றும் நரம்பு செல்களை உருவாக்கி, ஒருவரின் கற்றல் சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். உங்கள் பிள்ளை அசைவ உணவுகளை உட்கொண்டால், இது அவர்களின் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் விட்டமின் டி, பி6, பி12 போன்றவையும் நிறைந்துள்ளன.
- மாவட்ட அளவிலான கைப்பந்து, கால்பந்து என பலவகையான போட்டிகள் அன்னை சத்யா மைதானத்தில் நடந்தது.
- தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 25-ந் தேதி வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவ, மாணவி யர்கள், பொதுப்பிரிவி னர்கள், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கடந்த 18-ந் தேதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கரிகாற்சோ ழன் கலையரங்க த்தில் நடைப்பெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கியது. இந்த போட்டியானது அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. இப்போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த மாணவ- மாணவிகள், வீரர், வீராங்கனைகள் மொத்தம் 694 பேர் கலந்து கொள்கி ன்றனர். முதலாவதாக இன்று முதல் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகள் கபடி, வாலிபால் மற்றும் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கான சிலம்பம் விளையாட்டுப் போட்டிக ளிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இருந்து அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்க னைகள் நேற்று இரவு தஞ்சையில் இருந்து அரசு பஸ்களில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், மாவட்ட பயிற்றுனர்கள் ஆகியோரும் சென்றனர்.
சென்னை செல்லும் பஸ்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடி அசைத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். மேலும் சீருடையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சங்க உறுப்பினர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
- விழாவில் இசை நாற்காலி, வாளியில் பந்து போடுதல், பேச்சுப்போட்டி நடை பெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் வியாபாரிகள் சங்கத்தின் 90-வது ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு வியாபாரிகள் சங்க தலைவர் என்.முருகன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் எஸ்.ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜோவின் பார்ச்சுனேட் 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை வாசித்தார். சங்க ஆடிட்டர் சீராக் இசக்கியப்பன் சங்க கணக்குகள் முறையாக சரியாக இருப்பதாக அறிக்கை அளித்தார். ஆடிட்டர் சந்யானந்த சுப்பிர மணியன் அறிக்கை யை ஜோசப் வாசித்தார். பின்னர் நிர்வாகிகள் அருணா, பாலமுருகன், சிதம்பரகுமார், ஜீவா, கணேசன், கார்த்தீசன், செலின், ராஜேந்திரன், சேதுராமலிங்கம், சுரேஷ், சங்கரன், ரவிசங்கர் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குவது என தீர்மானி க்கப்பட்டது. வள்ளியூர் அரசு மருத்துவ மனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூர் வந்து செல்ல நடவடிக்கை எடுத்த சபாநாயகர் அப்பாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பஸ்நிலைய கட்டுமானப் பணியையும், சந்தை கட்டுமானப்பணியையும் விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளவது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக வியாபாரிகளின் குழந்தைகளில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மற்றும் 2-ம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கமும்,கேடயமும் வழங்கப்பட்டது. 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கமும் ,கேடயமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வியாபாரிகளின் குடும்ப விழா கொண்டாடப் பட்டது.
இவ்விழாவில் இசை நாற்காலி, வாளியில் பந்து போடுதல் மற்றும் பேச்சுப்போட்டி நடை பெற்றது. போட்டிகளை வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, பேரூராட்சி தலைவி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும், பங்கேற்ற அனை வருக்கும் பரிசு வழங்க ப்ப ட்டது. துணைத் தலை வர் ரா தா கிருஷ்ணன் வரவேற்றார். உதவி செய லாளர் எம்.காதர்மைதீன் நன்றி கூறினார்.
- இந்தபூங்காவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு பொருட்கள் உடைந்து உள்ளன.
- விளையாட்டு பொருட்களால் சிறுவர்களின் உயிரை காவு வாங்குவதற்கு தயாராகவே விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டது
கடலூர்:
கடலூர் பாரதி சாலையில் மிகவும் பிரபலமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்கா சுற்றி நடப்பதற்கு நடை பாதைகள் மற்றும் பூங்காவிற்குள் அனைவரும் இளைப்பாற மரங்கள் நடப்பட்டு உள்ளன.
தற்போது இந்தபூங்காவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு பொருட்கள் உடைந்து உள்ளன. அதோடு நடைபாதைகளில் உள்ள கற்கள் முழுவதும் சிதைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகின்றன.
இது மட்டும் இன்றி பூங்காவில் உள்ள கட்டிடம் சிதலமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லும் போது 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் கட்டணம் வசூலிப்பது ஏற்றவாறு உள்ளே எந்த வித வசதியும் ஏற்படுத்தவில்லை. அது மட்டும் இன்றி தினந் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பூங்கா விற்கு வந்து விளையாட்டுப் பொருட்களில் விளையாட செல்ல நேர்ந்தால் அங்கு உடைந்திருக்கும் விளையாட்டு பொருட்களால் சிறுவர்களின் உயிரை காவு வாங்குவதற்கு தயாராகவே விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டது போல் உள்ளது என பெற்றோர்கள் குமுறி வருகின்றனர்.
இதற்காக விளையாட்டுப் பொருட்களில் விளையாடாமல் பூங்காவில் ஓடிப் பிடித்தும், கண்ணாம்பூச்சி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கட்டணம் செலுத்தி சிறுவர்கள் விளையாடுவதோடு உடைந்த விளையாட்டுப் பொருட்களில் பெற்றோர்களின் பாதுகாப்புடன் சிறிது நேரம் மனம் நொந்தபடி விளையாடி செல்வதை காண முடிந்தது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில் நடக்கும் போது அடிக்கடி கீழே விழுவதும், பெரியோர்களுக்கு மூட்டு வலி ஏற்படுவதும், விழுவதால் உடலில் காயம் ஏற்படுவதும் அடிக்கடி நிகழும் சம்பவமாக உள்ளது இது தொடர்பாக அங்குள்ள நபர்களிடம் இது தொடர்பாக கேட்டால் 5 ரூபாய்க்கு இந்த வசதி தான் செய்ய முடியும். விருப்பம் இருந்தால் வரவும் இல்லை என்றால் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என கறாராக கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் கடலூர் மையப் பகுதியில் அமைந்துள்ள கட்டண வசூலிக்கப்படும் பூங்காவில் அடிப்படை வசதிகளான சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், அனைவரும் நடந்து செல்லும் வகையிலான நடைபாதைகள் மற்றும் அவசர தேவைக்காக கழிவறை வசதி எதுவும் இல்லாமல் இது போன்ற பூங்காக்களால் ஏதேனும் சிறுவர்களுக்கு உயிர் பலி நேரிட்டால் இதற்கு யார் பதில் கூறுவார்கள்? உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு அதிகாரிகள் வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வு நடக்காது? இதற்கான முழு நடவடிக்கை எடுப்போம் என வாசகங்களை அடுக்கிக் கொண்டு சொல்வதோடு அனைவரின் உயிரும் மிக முக்கியம் என கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பூங்காவை ஆய்வு செய்து இதற்கான நிரந்தர நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஆனால் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என பொதுமக்கள் ஒருபுறம் தெரிவித்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை ஆகும் .
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
- பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைவினை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன.
- திருமண மாலைகள், கார்த்திகை பூ சுற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பம்பரம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் கீரின்நீடா என்ற சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் பனை திருவிழா நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழா அரங்கில் பனையில் இருந்து தயாரிக்கப்பட்டபனை அல்வா உள்ளிட்ட பொருட்கள், மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன.
பனை திருவிழாவினை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் நாராயணன் தொடங்கி வைத்து பேசுகையில் பனைமரம் தமிழகத்தின் பாரம்பரிய மரம்.
பனைமரம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கிறது. நாம் அனைவரும் வீடுகளில் பனை மரம் வளர்க்க வேண்டும். பனைமரத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது என்றார்.
மேலும் பனைத் திருவிழாவில் நாம் மறந்துபோன பனை ஓலை காத்தாடி, பனங்காய் நுங்கு வண்டி, பனங் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் பனை அல்வா, பனை குல்பி, பனை ஓலையில் செய்யப்பட்ட கைப்பை , திருமண மாலைகள், கார்த்திகை பூ சுற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பம்பரம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.
இதுதவிர கவியரங்கம், கருத்தரங்கம், நாட்டுப்புறப் பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
- இந்திய அணியில் பங்கேற்ற கோவில்பட்டி ஆக்கி வீரர்களுக்கு பாராட்டு விழா கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா சார்பில் நடைபெற்றது.
- நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
இந்தோனேசியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இதில் கோவில்பட்டி வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் மற்றும் கார்த்தி செல்வம் ஆகிய இருவரும் இந்திய அணிக்காக விளையாடினர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பில் பள்ளித் தாளாளர் நாகமுத்து தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மூத்த துணைத்தலைவர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளி முதல்வர் மலர்க்கொடி வரவேற்று பேசினார். பள்ளி சார்பில் மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் செல்வம், ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இருவரையும் பாராட்டி பள்ளி தாளாளர் நாகமுத்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார். பள்ளி மாணவர்களுடன் சர்வதேச வீரர்கள் இருவரும் கலந்துரையாடி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குருசித்ர சண்முகபாரதி, காளிமுத்து, பாண்டியராஜா,
உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்திரன், ஜெய்கணேஷ், முருகன், சந்தனராஜ், வேல்முருகன், உதயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- நீச்சல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை 2 பிரிவுகளாக நடக்கிறது.
- நீர் நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நீச்சல் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்
நெல்லை:
நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பாளை அண்ணா விளையாட்டரங்கத்தில் கோடை கால விடுமுறையை முன்னிட்டு நீச்சல் கற்று கொள் திட்டத்தில் கோடை கால நீச்சல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை 2 பிரிவுகளாக நடக்கிறது.
அதன்படி பயிற்சி நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை, 7.15 மணி முதல் 8.15 வரை, 8.30 மணி முதல் 9.30 மணி வரை, 9.45 முதல் 10.45 வரையும், 11 மணி முதல் 12 மணி வரை, (பெண்கள் மட்டும் ) பெண் பயிற்சியாளரால் பயிற்சி கொடுக்கப்படும். மேலும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை பயிற்சி கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சிறுவர், சிறுமிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட 233 பேர் பயிற்சி பெற்றனர். நீர் நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நீச்சல் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.
எனவே நீச்சல் தெரியாதவர்கள் அடுத்த பயிற்சி முகாம் (கடந்த 1-ந்தேதி முதல் 14-ந்தேதி மற்றும் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை) அண்ணா விளையாட்டரங்கத்தின் நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று கொள் திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக கிராமங்களில் உள்ள அனைத்து இளைஞர்களிடையே விளையாட்டின் சிறப்புகளை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி அவர்களுக்கு உரிய பயிற்சியும் ஊக்கமும் அளித்து, அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளிலும் பங்கு பெறும் வண்ணம் தமிழக வீரர்கள் உருவாக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டினை மேம்படுத்திட கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் நான்காம் ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2016-2017ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் 28.6.2018 முதல் 30.6.2018 வரை பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள கிராம ஊராட்சி பள்ளிகள் - சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.
முதல் நாள் குழுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள்- தனித்திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் பெயர் மற்றும் இருப்பிட விவரங்கள் கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி செயலரிடம் பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் நாள் அனைத்து குழுப்போட்டிகளும் நடத்தப்படும். மூன்றாம் நாள் தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்,
இவ்விளையாட்டு போட்டிகள் ஆண், பெண், இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட உள்ளது. தடகளப் போட்டிகள் (ஆண்,பெண் இருபாலருக்கும்) 100மீ, 200மீ, 400மீ நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. குழுப்போட்டிகள் பிரிவில் கையுந்துப்பந்து, கபாடி ஆகிய விளையாடடுகளில் ஆண் பெண் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. கால்பந்து விளையாட்டு ஆண்களுக்கு மட்டும் நடத்தப்பட உள்ளது. தனித் திறன் மற்றும் குழுப் போட்டிகளில் மூன்று இடத்தினைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அவர்களுக்கென தேர்வு செய்யப்பட்ட இரண்டு விளையாட்டில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சி விளையாட்டுகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் பதக்கங்களாக வழங்கப்பட உள்ளது. எனவே கிராம ஊராட்சியில் அமைந்துள்ள சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளிகள்- கல்லூரிகளில் பயிலும் வீரர்கள் -வீராங்கனைகள் உள்ளடக்கிய அனைவரும் அவரவர் கிராம ஊராட்சிகளில் இப்போட்டிகளில முழுமையாக பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்