search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை கால விடுமுறையை முன்னிட்டு  நீச்சல் சிறப்பு பயிற்சி வகுப்பு
    X

    கோடை கால விடுமுறையை முன்னிட்டு நீச்சல் சிறப்பு பயிற்சி வகுப்பு

    • நீச்சல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை 2 பிரிவுகளாக நடக்கிறது.
    • நீர் நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நீச்சல் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பாளை அண்ணா விளையாட்டரங்கத்தில் கோடை கால விடுமுறையை முன்னிட்டு நீச்சல் கற்று கொள் திட்டத்தில் கோடை கால நீச்சல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை 2 பிரிவுகளாக நடக்கிறது.

    அதன்படி பயிற்சி நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை, 7.15 மணி முதல் 8.15 வரை, 8.30 மணி முதல் 9.30 மணி வரை, 9.45 முதல் 10.45 வரையும், 11 மணி முதல் 12 மணி வரை, (பெண்கள் மட்டும் ) பெண் பயிற்சியாளரால் பயிற்சி கொடுக்கப்படும். மேலும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை பயிற்சி கொடுக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் சிறுவர், சிறுமிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட 233 பேர் பயிற்சி பெற்றனர். நீர் நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நீச்சல் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

    எனவே நீச்சல் தெரியாதவர்கள் அடுத்த பயிற்சி முகாம் (கடந்த 1-ந்தேதி முதல் 14-ந்தேதி மற்றும் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை) அண்ணா விளையாட்டரங்கத்தின் நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று கொள் திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×