என் மலர்
நீங்கள் தேடியது "gang attack"
- வள்ளியம்மன் கோவிலில் இன்று 6-வது ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- தி.மு.க பிரமுகர் பிரபாகருக்கு ஆதரவாகவும் சிலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.
வடவள்ளி
கோவை மருதமலை அடிவார பகுதியில் வள்ளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் இன்று 6-வது ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு, பஸ் நிலைய பகுதி உள்பட சில இடங்களில் விழாவுக்கு வருபவர்களை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி ேகாவில் முன்பு பேனர் வைத்து விட்டு, மருதமலை அடிவார பஸ் நிலையத்திற்கு சென்ற அவர்கள், அங்கு பேனர் வைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு தி.மு.க. பிரமுகர் பிரபாகர் மற்றும் சிலர் வந்தனர். அவர்கள் இங்கு பேனர் வைக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும், அ.தி.மு.க. பிரமுகர் திவாகர் சம்பவ இடத்திற்கு வந்து, நாங்கள் பல முறை இங்கு பேனர் வைத்துள்ளோம். இங்கு வைப்போம் என தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் வடவள்ளி போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. பிரமுகர் திவாகர் என்பவர் தன்னை சிலர் தாக்கி விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் தாக்கப்பட்ட தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து ஏராளமான அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். இதேபோல் தி.மு.க பிரமுகர் பிரபாகருக்கு ஆதரவாகவும் சிலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இரு தரப்பிலும் ஏராளமனோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீஸ் நிலையத்திற்குள் போலீசார் திவாகரின் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க. பிரமுகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது போலீஸ் நிலைய வளாகத்திற்குள் 5 பேர் கும்பல் திடீரென கட்டையுடன் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு நின்றிருந்த அ.தி.மு.க.வினரை சரமாரியாக தாக்கினர். இதில் சிலர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக அ.தி.மு.கவினர் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அ.தி.மு.கவினரை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த அம்சராஜ்(38), சபரி(24), கார்த்திகேயன்(25), பேச்சியப்பன்(27), மணிகண்டன்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது. நிலைமையை கட்டுப்படுத்த அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பணம் தர மறுத்து தொழிலாளியை தாக்கிய கும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டனர்.
- புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கும்பலை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் பூதிப்புரம் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 43). இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார். சரிவர வேலை இல்லாததால் தனக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த இருளன் (43) என்பவரை அணுகியுள்ளார்.
அவரும் புலிக்குத்தியைச் சேர்ந்த செல்வம், அப்பிபட்டி முன்னாள் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் சேர்ந்து அல்லிநகரம் நகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி கருப்பசாமியிடம் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளனர்.
மேலும் அவரது கல்விச்சான்றிதழ், மருத்துவச்சான்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் அருகே வரச்சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர். தனக்கு வேலை கூட வேண்டாம். தாம் கொடுத்த பணத்தையாவது திருப்பி தருமாறு கருப்பசாமி கேட்டா ர்.
ஆனால் அதையும் தர மறுத்து கருப்பசாமியை தாக்கிய அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தேனி கோர்ட்டில் கருப்பசாமி புகார் அளித்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). இவர் போலீஸ்காரராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார்.
- தாக்குதல் தொடர்பாக டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). இவர் போலீஸ்காரராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார். நேற்று இவர் அங்குள்ள கல்மண்டபத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ராமையா மகன் குபேந்திரா, அவரது சகோதரர் வானுமாமலை, உறவினர் ஆனந்த் உள்பட 4 பேர், சரவணனிடம் இங்கு எப்படி படுக்கலாம் எனக் கேட்டு தகராறு செய்தனர்.
இதில் ஆத்திரம் அடைந்த குபேந்திரா உள்பட 4 பேரும் சேர்ந்து, சரவணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குபேந்திரா உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
- கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது.
- இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார்.
களக்காடு:
கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது. இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று தோட்டக்குடியை சேர்ந்த சுடலைக்கண்ணு, பத்மநேரியை சேர்ந்த பிச்சையா, வானுமாமலை, பாவநாசம் என்ற இசக்கிமுத்து மற்றும் 5 பேர் உள்பட 9 பேர் சேர்ந்து செந்தூரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
இதைப்பார்த்த கணபதிராமன் தட்டிக்கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் சுடலைக்கண்னு உள்பட 9 பேரும் சேர்ந்து, கணபதிராமனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுடலைக்கண்னு உள்பட 9 பேரை தேடி வருகின்றனர்.
- கூலித்தொழிலாளியை மர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
நத்தம் அருகே வலைய பட்டிைய சேர்ந்தவர் சின்னையா(45) . கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு தூங்கிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அரிவாளால் சின்னையாவை சரமாரியாக வெட்டினர். இதனால் வலி தாங்கமுடியாமல் அவர் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்க த்தினர் ஒன்றுகூடினர்.
இதை பார்த்ததும் அவரை வெட்டிய மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். படுகாயங்களுடன் சின்னை யாவை மீட்ட அக்கம்பக்க த்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசா ரணையில் முன்விரோதம் காரணமாக சின்னையாவை அந்த கும்பல் தாக்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கோஷ்டி மோதலில் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டதில் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசை பகுதியில் உள்ள பராசக்தி கோவிலை 75 ஆண்டுகளுக்கு மேல் இரு சமூகத்தினர் பராமரித்து வந்தனர். இதில் ஒரு தரப்பினர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோவில் முன்பு இருந்த காலி இடத்தில் கான்கிரீட் போட்டு கம்பிவேலி அமைத்தனர்.
ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அந்த கம்பி வேலியை அவர்கள் அகற்றினர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து பின்னர் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் பெண்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் உத்தரவுப்படி ஏ.எஸ்.பி மதுக்குமாரி, சின்னமனுர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்ல அறிவுறுத்தினர். இந்த தாக்குதலில் ஸ்ரீரங்கன், முருகன், தாமோதரன், தியாகராஜன், செந்தட்டி, செல்வக்குமார், செல்வி, முத்துக்குமார், அர்ச்சுணன், கலைவாணி, சீனியம்மாள், அழகுமலை, சிவா உள்பட 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் பார்த்திபன், நவீன், சிவா, கண்ணன் உள்பட 11 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்தெருவை சேர்ந்த பால்ராஜ் என்பவர் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து புறப்பட்டு நடுக்காவேரி மெயின்ரோட்டில் வரும்போது வெடி வெடிப்பதில் தகராறு ஏற்பட்டு அதே ஊரை சேர்ந்தவர்கள் 2 கோஷ்டியாக மோதி கொண்டனர்.
இது சம்மந்தமாக நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் மகன் திலீபன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் அதே ஊரை சேர்ந்த செந்தில், சிலம்பரசன், சுப்பிரமணியன், கிஷோர், கார்த்திகேயன், ஆகிய 5 மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் இதே போல் மொட்டையாண்டி மகன் செந்தில் கொடுத்த புகாரின்பேரில் தினேஷ், புதியவன், திலீபன்ராஜ், ராஜபாண்டி, சூர்யா ஆகிய 5 பேர் மீதும் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் அருகே மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன்(வயது 36).
இவர் செட்டிப்பாளையம் ரோட்டில் அப்பகுதியில் ஒலிம்பிக் என்ற பெயரில் கார்களை பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இன்று காலை இவரும், ஊழியர்கள் 4 பேரும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். மதியம் 12.30 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நிறுவனத்துக்குள் புகுந்தனர்.
நிறுவனத்தை சூறையாடிய அவர்கள் கண்காணிப்பு கேமிராக்களை அடித்து உடைத்தனர்.
இதனால் ஊழியர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு பரந்தாமன் அறைக்குள் இருந்து வெளியே வந்தார். அவரை அரிவாளால் கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தபடி பரந்தாமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகள் தப்பிச் செல்லும் போது பிழைக்க வந்தால் பிழைப்பை மட்டும் பார்க்க வேண்டும், அதை மீறினால் இது தான் கதி என்று ஆவேசமாக சத்தம் போட்டு விட்டு சென்றுள்ளனர். பரந்தாமன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த கும்பல் யார்? தொழில் ரீதியான விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூரில் தோட்டப்பாளையத்தில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தப்பிய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் பாபுராவ் தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28) ஆகியோர் நேற்று முன்தினம் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் அருகே காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுல் தரப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல் தரப்பினர் அங்கு சென்றனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. ஒருவருக்கொருவர் பீர் பாட்டில், கற்களை எடுத்து வீசி தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் இருந்த ஒரு விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களையும் அடித்துதுவம்சம் செய்தனர்.
இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பிரதாப், சசி, சின்னஅப்பு, ராஜி உள்பட 7 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை விசாரிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கை வெவ்வேறு கோணங்களில் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தோட்டப்பாளையம் அருகே உள்ள காட்பாடி சாலையில் வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கினர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
அவரை சோதனை செய்தபோது அவரிடம் 1½ அடி நீளமுள்ள 2 கத்திகள் இருந்தன. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அவர் நாகர்கோவிலை சேர்ந்த செல்வம் (33) என்பது தெரியவந்தது. இவருக்கு இந்த மோதல் சம்பவத்தில் தொடர்பு உள்ளது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #petrolbombing
வேலூர்:
வேலூர் பாபுராவ்தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28). இவர்கள் இருவரும் நேற்று இரவு 7.30 மணியளவில் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசினர். இதில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக காரை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
இதற்கிடையே காரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் நண்பர்கள், ஆதரவாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்களுடன் அப்பகுதிக்கு நடந்து சென்றனர்.
தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி தெருவில் சென்றபோது திடீரென 20-க்கும் மேற்பட்டோர் எதிரே வந்து மதுபாட்டில், பீர்பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை கோகுல் தரப்பினர் மீது வீசினர்.

கோகுல் தரப்பினர் பதிலடியாக அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட எதிர்தரப்பினர் உருட்டுக்கட்டையுடன் கோகுல் தரப்பினரை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கோகுல், தமிழ்மணி தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கோகுல் மற்றும் சிலர் அப்பகுதியில் உள்ள ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.செல்வத்துக்கு சொந்தமானதும், தற்போது தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் விடுதிக்குள் நுழைந்தனர்.
விடுதி காவலாளி நுழைவு வாயில் இரும்பு கேட்டை பூட்டினார். பின்னர் அவர் டாக்டர்கள் அனைவரையும் அறைக்குள் செல்லும்படி கூறிவிட்டு விடுதியின் நுழைவு கதவிற்கும் பூட்டு போட்டார்.
கோகுலை துரத்தி வந்த கும்பல் இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து உள்ளே வந்தனர். பின்னர் கதவை திறக்கும்படி காவலாளியிடம் கூறினர். ஆனால் அவர் திறக்காததால் விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை கற்கள், கட்டைகளால் அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் அடித்து துவம்சம் செய்தனர்.
விடுதி காவலாளி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் விடுதியை அடித்து நொறுக்கிய கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.
சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், விடுதி காவலாளி, அங்கு தங்கியிருந்த டாக்டர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து தங்கும் விடுதி அறையில் பதுங்கியிருந்த கோகுல் உள்பட 4 பேரை போலீசார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
ஜி.ஜி.ரவியின் மகன்களுடன் நாகர்கோவிலை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்களை பாதுகாவலராக வைத்திருப்பதாக ஜி.ஜி.ரவின் மகன்கள் கூறியுள்ளனர்.
நாகர்கோவிலை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மீது தென் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களுடன் தோட்டப்பாளையத்துக்குள் புகுந்துள்ளனர்.
காரில் குண்டுகளை வீசி, விடுதியை சூறையாடியது ரவுடி குப்பனின் கும்பல் என தெரியவந்துள்ளது. அவர்கள் தரப்பில் யாரையும் போலீசார் பிடிக்கவில்லை. அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.
முதலில் தாக்குதல் தொடங்கியது யார்? தோட்டப்பாளையத்தில் மது காலி பாட்டில்களுடன் கும்பல் தயாராக இருந்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #petrolbombing
செங்குன்றம்:
வியாசர்பாடி, பி.வி. காலனி, கரிமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் திவாகர் (வயது 24) ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை திவாகர் நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சோழவரம் ஏரியில் திவாகர், வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்து, மார்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டன. மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏரிக்கு மீன் பிடிக்க வந்தவர்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திவாகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
நேற்று மாலை வாலிபர்கள் சிலர் ஏரிக்கரையில் மது அருந்திவிட்டு காற்றாடி விட்டு கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர்.
எனவே திவாகருடன் வந்த நண்பர்கள் அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கடந்த ஆண்டு வியாசர்பாடியில் நடந்த சீனிவாசன் என்பவரது கொலையில் திவாகர் சம்பந்தப்பட்டு இருந்தார்.
எனவே அவரால் பாதிக்கப்பட்ட யாரேனும் கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த 7 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. ஏரிக்குள் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.