என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » garbine muguruza
நீங்கள் தேடியது "Garbine Muguruza"
மான்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். #Muguruza #MonterreyOpenTitle
மான்டெர்ரி:
மான்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகளான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்)-விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) ஆகியோர் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கார்பின் முகுருஜா 6-1, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது விக்டோரியா அஸரென்கா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் கார்பின் முகுருஜா சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
கடந்த ஆண்டில் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்த கார்பின் முகுருஜா அதன் பிறகு வென்ற முதல் பட்டம் இதுவாகும். 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சர்வதேச போட்டியின் இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்த அஸரென்கா பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து நடையை கட்டினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அஸரென்கா தரவரிசையில் 7 இடம் முன்னேறி 60-வது இடத்தை பிடித்துள்ளார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Cincinnati #GarbineMuguruza #LesiaTsurenko
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக விளையாட வாய்ப்பு பெற்ற நடப்பு சாம்பியனும், 2 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), 44-ம் நிலை வீராங்கனையான லிசி சுரென்கோவை (உக்ரைன்) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கார்பின் முகுருஜா 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் லிசி சுரென்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), விம்பிள்டன் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஆஷ்லே பார்ட்டி (ஆஸ்திரேலியா), மகரோவா (ரஷியா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), அரினா சபலென்கா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 55-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ் 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோவை தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார். incinnati #GarbineMuguruza #LesiaTsurenko

பாரிசில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் முகுருசாவை வீழ்த்திய சிமோனா ஹாலெப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றினார். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், 3-ம் நிலை வீராங்கனையான கேப்ரின் முகுருசாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஹாலெப் அதிரடியாக விளையாடினார்.
முதல் செட்டை ஹாலெப் 6-1 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடிய ஹாலெப் அந்த செட்டை 6-4 என கைப்பற்றினார். இதன்மூலம், 6-1, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அறையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் கீஸ், சக நாட்டு வீராங்கனையாக ஸ்டீபென்ஸ் உடன் பலப்பரீட்சை செய்து வருகிறார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக ஹாலெப் உடன் மோத உள்ளார். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
பாரிசில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முகுருசா, ஹாலெப் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேற்றியுள்ளனர். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் காலிறுதி சுற்றை எட்டியுள்ளன.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், 12-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை கெர்பர் 7-6 என்று போராடி கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை ஹாலெப், 6-3 என கைப்பற்றி போட்டியை சமனாக்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹாலெப் மூன்றாவது செட்டையும் 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம், 6-7 (7-2), 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
மற்றொரு காலிறுதி சுற்று ஆட்டத்தில், 3-ம் நிலை வீராங்கனையான கேப்ரின் முகுருசா, ரஷியாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில், அதிரடியாக விளையாடிய முகுருசா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், ஹாலெப் - முகுருசா, கீஸ் - ஸ்டீபென்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
×

X