search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gateway To Haryana"

    பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோவின் 3-வது கட்ட பச்சை வழித்தட ரெயில் சேவையை காணொளி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்தார். #PMModi #DelhiMetro #GreenLine

    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து குருகிராம், ஃபரீதாபாத் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் ஏற்கனவே மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், டெல்லியின் முந்கா பகுதியில் இருந்து அரியானாவின் பகதூர்கர் பகுதி வரை புதிய மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தர்லோக் - முண்ட்கா வரையிலான பச்சை வழித்தடம் இப்போது முண்ட்கா முதல் பகதூர்கர் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

    சுமார் 11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த பச்சை வழித்தட மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தனது அலுவலகத்தில் இருந்தபடி காணொளிகாட்சி வழியே பிரதமர் மோடி அத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.



    இந்நிகழ்ச்சியில், மத்திய மந்திரி ஹர்தீப் பூரி மற்றும் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இன்று மாலை 4 மணியில் இருந்து பொதுமக்களுக்காக இந்த புதிய மெட்ரோ ரெயில் சேவை செயல்பட தொடங்கியது.

    இந்த திட்டத்தினை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, பகதூர்கர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. அங்கு பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து மாணவர்கள் டெல்லிக்கு கூட சென்று பயில்கின்றனர். அரியானாவிற்கு நுழைவு வாயிலாக உள்ள இந்த பகுதியில் தொடங்கவுள்ள மெட்ரோ சேவை மிக பயனுள்ள வகையில் இருக்கும் என கூறினார்.  #PMModi #DelhiMetro #GreenLine
    ×