என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gay marriage not allowed"
கோலாலம்பூர்:
மலேசிய பிரதமர் மகாதிர் முகமது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மலேசியாவில் ஓரினசேர்க்கை திருமணத்துக்கு அனுமதி வழங்கப்படுமா? என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் மலேசியாவில் ஓரின சேர்கையாளர்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோன்று உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் ஆணாகவும், பெண்ணாகவும் மாறியவர்கள் திருமணத்துக்கு அனுமதி இல்லை.
மலேசியாவில் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கத்திய நாடுகள் வேண்டுமானால் அதை மனித உரிமைகள் என்று கூறிக்கொள்ளலாம்’’ என்றார்.
அவரின் இத்தகைய கருத்து மலேசியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்களும், ஓரினசேர்க்கையாளர்களும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் போதைபொருள் கடத்தல், கொலை, கொள்ளை, ஓரினச்சேர்க்கை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக 2 பெண்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. #MahathirMohamad