என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl babies"
- பெண்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது மிக ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.
- குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
திருப்பூர்:
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடத்தப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார், பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆணையர் நந்தினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெண்களை இரு கண்களாக பார்த்து கொள்ள வேண்டும். பெண்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது மிக ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். பெண் கல்வி உயர்ந்தால் நாடு வளம்பெறும். சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம் தினந்தோறும் பேசவேண்டும். குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் . குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார். பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் எனது செயல்பாடுகளால் எந்த குழந்தையும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன் என்ற உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.