என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl Farmers"
- பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி மையம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
- சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்கும் அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
உடுமலை:
தற்போது உணவு வகையில், காளான் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஊட்டச்சத்து நன்மைகளுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் சந்தையில் இறைச்சிக்கு மாற்றாக காளான்கள் கருதப்படுவதால் தமிழக அளவில், காளான் உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் உறுதி செய்கிறது. அதன் அடிப்படையில் பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி மையம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன ரம்யா கூறியதாவது:-
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில், தமிழக அரசு, தோட்டக்கலைத்துறை சார்பில் பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.காளான் உற்பத்தி மையம் அமைக்கும் போது தினசரி வருமானம் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
காளான் உற்பத்தி அலகு நிறுவுவதற்கு போதுமான சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்கும் அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், செயல்படுத்தப்படும் ஊராட்சியில் வசிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.