என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl"

    மகளை பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி திருநகரை சேர்ந்தவர் சின்னையன் மகள் பிரியா (வயது26). இவர் பி.எஸ்.சி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனியாக வீட்டில் இருந்த போது திடீரென்று காணவில்லை. இதனை கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக அவரது தந்தை சின்னையன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில்இ ன்ஸ்பெக்டர்(பொ) நந்தகுமார் மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி தனது காரில் 7 கிலோ கஞ்சாவை திருச்செங்கோடு வழியாக கடத்த முயன்ற போது, போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினார்.
    • திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஷர்மிளா பேகமை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    நாமக்கல்:

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளா பேகம். இவர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி தனது காரில் 7 கிலோ கஞ்சாவை திருச்செங்கோடு வழியாக கடத்த முயன்ற போது, போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினார்.

    திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஷர்மிளா பேகமை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் கலெக்டருக்கு மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர்.

    இந்த பரிந்துரையை கலெக்டர் ஏற்றார். இதை அடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அதற்கான உத்தரவை சேலம் சிறையில் உள்ள ஷர்மிளாவிடம் வழங்கினர். தொடர்ந்து அவரை கோவை சிறைக்கும் மாற்றினர்.

    • திருச்செங்கோடு கூட்டப்பள்ளி கொட்டாங்காடு காட்டுப்பகுதியில் ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • கடந்த 5 நாட்களாக தேன்மொழியை காணவில்லை என அவரது வீட்டினர் தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் தேன்மொழியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு கூட்டப்பள்ளி கொட்டாங்காடு காட்டுப்பகுதியில் ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பராமரிக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பீட்டர் செல்வராஜ் உடனடியாக இல்ல பணியாளர்கள் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டார்.

    அந்த பெண் காய்ச்சல் அறிகுறியுடன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க செய்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு உணவளித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அவரது பெயர் தேன்மொழி எனவும், அவரது வீட்டு முகவரியும் தெரிவித்தார். கடந்த 5 நாட்களாக தேன்மொழியை காணவில்லை என அவரது வீட்டினர் தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் தேன்மொழியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மனிதாபிமான அடிப்படையில் உயிரைக் காப்பாற்றிய போலீசார் மற்றும் பராமரிக்கும் கரங்கள் இல்லத்தினரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • ராமநாதபுரத்தில் இளம்பெண் திடீர் மாயமானார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் யசோதா (வயது 43). இவர் ராமநாதபுரம் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் அபிநயா (வயது21).

    தினந்தோறும் வேலைக்குச் சென்று விடுவதால் மகள் அபிநயா வீட்டில் தனியாக இருப்பதை யசோதா விரும்பவில்லை. இதனால் பாரதிநகரில் இருக்கும் தனது தாய் வீட்டில் மகளை விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    நேற்று காலையிலும் வழக்கம் போல் தனது தாய் வீட்டில் மகளை விட்டுவிட்டு யசோதா வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த அபிநயாவை காணவில்லை என்று யாசோதாவுக்கு அவரது தாய் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தில் பல இடங்களில் மகளை தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    • காங்கயம் அருகே சடையபாளையம்-தாளக்கரை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
    • ஊதியூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே காடையூா் கிராமம், தாளக்கரை பகுதியைச் சோ்ந்தவா் நித்யா (வயது 25). தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவா், காங்கயம் அருகே சடையபாளையம்-தாளக்கரை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது நித்யாவை பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் 2 நபா்கள் வந்துள்ளனா். சடையபாளையம், புளியங்காட்டு தோட்டம் அருகே வந்தபோது அந்த 2 நபா்களும் திடீரென நித்யா வாகனத்தை வழிமறித்து அவரை கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த 4 1/2 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனா்.இது குறித்து ஊதியூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

    • பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் மன அழுத்தம்.
    • சிறுமியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு தரணியா என்ற 12 வயது மகள் உள்ளார்.

    இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரவணகுமார் பிரிந்து சென்று விட்டார். சுசீலா பாம்பு கடித்து இறந்தார். இதனால் பவித்திரமாணிக்கத்தில் உள்ள பாட்டியான சீதாலட்சுமியுடன் (94) தரணிகா வசித்து வந்தார். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகியு ள்ளார்.

    இந்நிலையில் இடைநின்ற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்க்கும் முயற்சியினை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரடாச்சேரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் விமலா மற்றும் சுமதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, பவித்திர மாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, இடைநன்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் காவல்துறை ஆய்வாளர் மணிமேகலை உள்ளிட்ட குழுவினர் தரண்யாவின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியை மீட்டனர். சிறுமிக்கு மனநல ஆலோசனையும் வழங்க ப்பட்டது. பராமரிப்பின்றி குப்பை மேடாக கிடந்த அந்த வீட்டையும் தூய்மைப்படுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து தரண்யாவை திருவாரூரில் உள்ள பாத்திமா ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து அங்குள்ள பள்ளியிலேயே படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவாக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், உள்ளூர் பிரமுகர்கள் சந்துரு மற்றும் சங்கர் ஆகியோர் இருந்தனர்.

    சிறுமி மீட்கப்பட்ட தகவல் அறிந்த பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிக்கு ஆறுதல் கூறி படிப்பதற்கு ஊக்கமளித்தார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள வக்கனாங்குண்டு பகுதியை சேர்ந்தவர் காளிசெல்வி (28). இவர் பட்டமேற் படிப்பு முடித்து கோவையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார்.

    6 மாதங்களுக்கு முன்பு விருதுநகர் அய்யனார் நகர் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்து அங்கு தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுக்க சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிசெல்வியை தேடி வருகின்றனர்.

    பாறைப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி நாயக்கர் (95). இவர் அப்பகுதியில் உள்ள ஜக்கம்மாள் கோவிலுக்கு தினசரி சென்று வருவது வழக்கம். கடந்த 21-ந் தேதி கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் சக்கையா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமாட்சி (37). இவருக்கு திருமாணமாகிவிட்டது. ஒரே வீட்டில் இருந்த போதும் மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு முன்பு வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை தந்தையிடம் கொடுத்துள்ளார். தற்போது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்ட போது அவர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி மூலம் முத்துகாமாட்சியை காணவில்லை.பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என மனைவி உமாமகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே விஷம் குடித்து பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் கவுண்டம்மாள் (வயது55). தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்பத்துபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (54). ஆவின் பாலகத்தில் வேலை பார்க்கிறார். டாஸ்மாக் கடை அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மகன் வினோத்குமார் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40). இவரது மனைவி மாது (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 6 வருடங்களாக மாதுவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்காக நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல குமார் வேலைக்கு சென்று விட்டார்.

    மதியம் அவரது மகன் செல்போன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, தாயார் மாது, வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

    உடனடியாக குமார் வீட்டுக்கு சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாதுவை மீட்டு பார்த்துள்ளார். ஆனால், அவர் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து, கணவர் குமார் அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் வள்ளாலார் தெருவைச் சேர்ந்தவர் ஷகிம் மனைவி சிவரஞ்சனி(29). இவர் கடந்த சில தினங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் சிவரஞ்சினிக்கு வயிற்றுவலி வந்துள்ளது.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார், சிவரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவசாய நிலத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயக்கம் நிலையில் கிடந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அடுத்த குவாகம் கூத்தாண்டவர் கோவில் அருகில் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் சவுந்தர்யா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தை இருந்து வந்தது. இந்த நிலையில் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் வேலைக்குச் சென்ற போது விவசாய நிலத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயக்கம் நிலையில் கிடந்தார் அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்த னர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த இந்த சம்பவம் குறித்து அரசன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

        

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் குடும்ப பிரச்சினையில் மகனுடன் விஷம் குடித்த பெண் பலியானார்.
    • குடும்ப பிரச்சினை காரண மாக தேவராஜை மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மன முடைந்த தேவராஜ் தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்தது தெரிய வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண வேணி (வயது 65). இவரது மகன் தேவராஜ் (24). இவர்கள் இருவரும் நேற்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணவேணி உயிரி ழந்தார். தேவராஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குடும்ப பிரச்சினை காரண மாக தேவராஜை மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மன முடைந்த தேவராஜ் தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்தது தெரிய வந்தது. இந்த சம்பவம்

    குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.

    ×