என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » gold abuse case
நீங்கள் தேடியது "Gold abuse case"
காஞ்சிபுரம் கோவில் தங்கசிலை மோசடி தொடர்பாக அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முக மணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். #EkambaranatharTemple
சென்னை:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை சேதம் அடைந்ததையொட்டி புதிய சிலை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது.
இப்படி பெறப்பட்ட 8.7 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இந்த சிலை மோசடியில் அறநிலையத்துறை முன்னாள் கமிஷனரான வீரசண்முக மணிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இருப்பினும் அவரை உடனடியாக கைது செய்யாத போலீசார் அதற்கான ஆவணங்களை திரட்டி வந்தனர்.
இதனையடுத்து நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீரசண்முக மணியை கைது செய்தனர். அவரிடம் சோமஸ்கந்தர் சிலை மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிகாரி வீரசண்முக மணி அறநிலையத்துறையில் பணியாற்றியபோது அனைவருக்கும் நன்கு அறிமுகமானவராக இருந்தார்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் அவர் பணி புரிந்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறநிலையத்துறையில் பணியாற்றிய 2 பெண் அதிகாரிகளை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரியான வீரசண்முகமணி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #EkambaranatharTemple

×

X