என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » gold captured
நீங்கள் தேடியது "gold captured"
மியான்மர் நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட இருந்த 64 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆந்திராவில் கைப்பற்றியுள்ளனர். #Myanmar #Chennai #GoldCaptured
ஐதராபாத்:
இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனை தடுக்க சிறப்பு பிரிவு அதிகாரிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய் நுண்ணறிவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், தனது கைப்பை மற்றும் கிட்டாரில் மறைத்து தங்கம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து சுமார் 64 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் தொடர்பான விசாரணையில், அவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், மியான்மரில் இருந்து இந்த தங்கத்தை சென்னையில் உள்ள ஒரு நபரிடம் ஒப்படைக்க அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Myanmar #Chennai #GoldCaptured
இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனை தடுக்க சிறப்பு பிரிவு அதிகாரிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய் நுண்ணறிவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், தனது கைப்பை மற்றும் கிட்டாரில் மறைத்து தங்கம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Myanmar #Chennai #GoldCaptured
×

X