search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Google Birthday"

    • 26-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.
    • உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேடுதளமாக விளங்குகிறது.

    இந்த தொழில் நுட்ப உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை யாருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் முதலில் தேடக்கூடிய தளமாக இருப்பது கூகுள் தேடுதளம். அது தனது 26-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

    1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஸ்டான்போர்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களான செர்ஜே பிரின் மற்றும் லாரன்ஸ் பேஜ் ஆகியோர் இணைந்து உருவாக்கியது தான் கூகுள் எனப்படும் தேடுதளம். இது உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேடுதளமாக விளங்குகிறது.

    ஒன்றுக்கு பின் வரும் நூறு பூஜ்ஜியங்களை குறிக்கும் 'கூகல்' என்ற பெயரிலேயே இது முதலில் அழைக்கப்பட்டது. பின்னர் இது கூகுள் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    'தீமைகள் செய்ய வேண்டாம்' என்பதைக் குறிக்கும் 'டோண்ட் பீ ஈவில்' என்பதையே கூகுள் நிறுவனம் தங்களது இலக்காகக் கொண்டுள்ளது.

    'கூகுள்' என்ற வார்த்தை, ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தகவல்களைத் தேடுதல் என்பது பொருளாக அமைகிறது.

    இந்த தேடுதளம் ஆரம்பிக்கப்பட்டதில்இருந்து கூகுள் டூடுலும் ஒரு பகுதியாக இருக்கிறது. கூகுள் நிறுவனம், தேடுதளத்தையும் கடந்து கூகுள் சீட், கூகுள் டிரைவ், கூகுள் டாக்குமென்ட், கூகுள் மீட் என பல வடிவங்களில் தொழில் நுட்ப சேவைகளை அளித்து வருகிறது.

    ×