என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » google duplex
நீங்கள் தேடியது "Google Duplex"
கூகுள் டூப்லெக்ஸ் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் கால் சென்டர் மையங்களில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் IO 2018 நிகழ்வில் கூகுள் டூப்லெக்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்யும் மென்பொருள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த மென்பொருள் பயன்படுத்துவோரின் சார்பாக மற்றவர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்யும்.
மென்பொருளின் பொது டெஸ்டிங் முறை இந்த ஆண்டு கோடை காலத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருள் கால் சென்டர்களிலும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
பெயருக்கு ஏற்றார்போல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் உதவியோடு டூப்லெக்ஸ் தகவல் பரிமாற்றம் செய்கிறது. மே மாதம் நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் டூப்லெக்ஸ் எவ்வாறு முன்பதிவுகளை செய்யும் என்பது விளக்கப்பட்டது. இதில் மென்பொருள் அதன் பயனருக்கு பதி்ல் அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்து அனைவரையும் வியப்படைய செய்தது. அறிமுகத்தின் போது சர்ச்சைக்குரியதாக தெரிந்தாலும், பயனர்களை கவர தவறவில்லை என்றே கூற முடியும்.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில பெரிய நிறுவனங்கள் தங்களது அலுவலகங்கள் (கால் சென்டர்) கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருளை சோதனை செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் கால் சென்டர்களில் மனிதர்கள் செய்யும் பணியை முழுமையாக எடுத்துச் செய்ய முடியும்.
கூகுள் IO 2018 நிகழ்வில் டூப்லெக்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட போது பயனரின் நேரத்தை மிச்சப்படுத்தும் என எளிமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மென்பொருள் பெரும் நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றே தெரிகிறது. கால் சென்டர்களில் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியானதும், கூகுள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் பயனர் சார்ந்த செயலிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் கூகுள் அசிஸ்டண்ட் அப்டேட் இருந்தது.
கலிஃபோர்னியா:
கூகுளின் I/O 2018 நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கூகுள் அசிஸ்டண்ட் அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்தது.
டூப்லெக்ஸ் என அழைக்கப்படும் புதிய சேவை அறிமுகமானது முதல் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. விரைவில் டர்னிங் டெஸ்ட் தேர்ச்சி பெற இருக்கும் டூப்லெக்ஸ் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும். டர்னிங் டெஸ்ட் என்பது இயந்திரங்கள் மனிதர்களுக்கு இணையாக அவர்களுடன் பேசும் திறனை பெற்றிருப்பதை சோதனை செய்வதாகும்.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிமுகம் செய்த டூப்லெக்ஸ் அம்சம் மருத்துவமனை, முடி திருத்தும் நிலையம் போன்ற இடங்களுக்கு உங்கள் சார்பில் அழைப்புகளை மேற்கொண்டு முன்பதிவுகளை உறுதி செய்யும் வசதியை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்த அம்சம் மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போன்றே கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.
முன்பதிவுகளுக்கு நீங்கள் பேச வேண்டிய இடத்தில் உங்களுக்கு பதில் உங்களின் குரலாக செயற்கை நுண்ணறிவு அம்சம் இயங்குகிறது. மறுமுனையில் பேசுவோர் டூப்லெக்ஸ் தானாக அறிவிக்கும் வரை மனிதர்கள் தான் பேசுகின்றனர் என்று எண்ணும் வகையில் மிக நேர்த்தியாக இந்த அம்சம் வேலை செய்கிறது.
கூகுள் I/O விழாவில் அறிமுகமானதும், இந்தளவு நேர்த்தியாக பேசும் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு சில சூழல்களில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்ற வகையில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூகுள் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பொதுமக்களுக்கு கூகுள் டூப்லெக்ஸ் அம்சம் வழங்கப்படும் போது, அழைப்பை மேற்கொள்வது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் என்பதை டூப்லெக்ஸ் தெரியப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கூகுள் டூப்லெக்ஸ் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று - தொழில்நுட்பத்தில் வெளிப்படத்தன்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். டூப்லெக்ஸ் சிஸ்டத்தில் இயந்திரம் தான் பேசுகிறது என்பதை தெரியப்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டு, அனைவரும் மிக எளிமையாக இதனை அறிந்து கொள்ளும் வகையில் இது இருக்கும். கூகுள் I/O 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது முதற்கட்ட டெமோ தான், பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் போது டூப்லெக்ஸ் சிஸ்டத்தில் முறையான பதில் வழங்கும் அம்சங்கள் சேர்க்கப்படும்," என கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இயந்திரங்கள் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் அறிமுகமாகிவிட்ட நிலையில், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வரும் அப்டேட்களில் மனித குரலில் இருந்து இயந்திர குரல் முற்றிலும் வித்தியாசப்படுத்தப்படும் என்றும் டூப்லெக்ஸ் சிஸ்டம் மூலம் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்க அனைத்து வழிமுறைகளையும் கூகுள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் I/O 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட டூப்லெக்ஸ் அம்சம் துவக்க நிலையில் தான் இருக்கிறது. பெருமளவு அம்சங்கள் சேர்க்கப்பட்டும், மாற்றப்பட்டு முதற்கட்டமாக டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டு அதன் பின் தான் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் டூப்லெக்ஸ் வழங்கப்படும்.
கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வின் கீநோட் வீடியோவை கீழே காணலாம்..,
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X