search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Googledoodle"

    இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்து, மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ராஜா ராம் மோகன் ராயின் 246-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #Googledoodle #RajaRamMohanRoy
    புதுடெல்லி:

    இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய்  மே 22, 1772 -ம் ஆண்டு வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்ம சமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.

    அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராக குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது.



    அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார். தனது விடா முயற்சியால் சதி என்னும் மூட நம்பிக்கையை ஒழித்தார். மேலும், குழந்தைகள் திருமணம், ஜாதி முறை, பலமணம், கொத்தடிமை முறை மற்றும் கல்வியறிவின்மைக்கு எதிராக போராடினார்.

    இந்தியாவில் மேற்கத்திய கல்வியை புகுத்துதில் ராஜாராம் ஆர்வமாக இருந்தார். இந்திய மறுமலர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் வேதாந்தா கல்லூரி, இந்து கல்லூரி மற்றும் ஆங்கிலோ இந்து பள்ளியை தொடக்கினார்.

    இந்நிலையில், இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்து, மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ராஜா ராம் மோகன் ராயின் 246-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் இன்று டூடுலாக கொண்டாடி வருகிறது. #Googledoodle #RajaRamMohanRoy

    இந்திய நடனக்கலைஞர் மிருணாளினி சாராபாயின் 100-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #MrinaliniSarabhai
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல நடனக் கலைஞரும், பயிற்றுனரும் ஆன மிருணாளினி சாராபாய் 1918 மே 11 அன்று கேரளாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அம்மு சுவாமிநாதன் என்பவருக்குப் பிறந்தார். அகமதாபாத் நகரில் இவர் கலைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் இவர் 18,000 மேற்பட்டவருக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார். பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

    இளம் வயதில் இவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். அங்கு டால்குரோசு பள்ளியில் மேற்கத்தைய நடனம் பயின்றார். இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலில் சாந்தி நிகேதனில் கல்வி பயின்ற மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும், தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றார்.



    இவர் உடல்நலக் குறைவின் காரணமாக 21 ஜனவரி 2016 அன்று அகமதாபாத்தில் காலமானார். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பத்மஸ்ரீ மிருணாளினி சாராபாயின் 100-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #MrinaliniSarabhai
    ×