search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Arts And Science Colleges"

    • 2 கட்ட கலந்தாய்வு முடிவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
    • அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையில் முதற்கட்டமாகவும், கடந்த 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்டமாகவும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த 2 கட்ட கலந்தாய்வு முடிவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்தது.

    இதனைத் தொடர்ந்து மீதமுள்ள இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் ஏற்கனவே வெளியிட்டு இருந்த கலந்தாய்வு குறித்த அட்டவணையில் அரசு கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 22-ந்தேதி (இன்று) முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று உயர்கல்வித் துறை அந்த தேதியை மாற்றம் செய்து, புதிய தேதியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 30-ந்தேதி வரை இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • போட்டித்தேர்வை எதிர்கொள்ள வசதியாக கலை அறிவியல் பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்தனர்.
    • மாணவர்களை செல்போன் மூலம் நேரில் அழைத்து இடங்களை ஒதுக்க கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் மொத்தம் உள்ளன. இதற்கு 3 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் 29-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெற்றது. 2-வது கட்ட கலந்தாய்வு 12-ந்தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த வருடமும் பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கு அதிக தேவை ஏற்பட்டது. போட்டித்தேர்வை எதிர்கொள்ள வசதியாக கலை அறிவியல் பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்தனர்.

    நேற்று வரை 72 ஆயிரம் பேருக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டன. இன்று 3 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. 2 கட்ட கலந்தாய்வு மூலம் 75 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 30 ஆயிரம் காலி இடங்களுக்கு உடனே கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் நிரம்பினாலும் சில பாடப்பிரிவுகள் காலியாக உள்ளன. மேலும் இடஒதுக்கீடு அடிப்படையில் சில கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அதனால் 3-வது கட்ட கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) இடங்கள் காலியாக உள்ள அரசு கல்லூரிகளில் நடக்கிறது. அதிக மதிப்பெண் பெற்று இடங்கள் கிடைக்காத மாணவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து அவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாணவர்களை செல்போன் மூலம் நேரில் அழைத்து இடங்களை ஒதுக்க கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. இன ஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்கள் மற்றும் இதர காலி இடங்கள் அனைத்தையும் நிரப்ப அரசு கல்லூரி முதல்வர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து கல்லூரி கல்வி அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படுகிறது. காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு கட்-ஆப் மார்க் அதிகம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அனைத்து இடங்களை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கேட்டால் 20 சதவீதம் அதிகரித்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும் என்றனர்.

    அனைத்து கலை அறிவியில் கல்லூரிகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    ×