என் மலர்
நீங்கள் தேடியது "government school"
- பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் பிளஸ்-1 மாணவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
- படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.
அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களிடம் பெயிண்ட்டை கொடுத்து சுவரில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.
மேலும் சாதி பாகுபாட்டுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
- திருமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வட்டார கல்வி மையத்தில் நேரில் சென்று குறைகளை கேட்டார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் கூடுதலாக 2 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர்கள் திருமங்கலம் வட்டார கல்வி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர்.
இதுபற்றி அறிந்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வட்டார கல்வி மையத்தில் நேரில் சென்று இது தொடர்பாக கேட்டார். இதைத்தொடர்ந்து உடனடியாக புதிய ஆசிரியர்களை நியமிக்க ஆணையை பெற்று திருமங்கலம் அருகே சித்திரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஆணையை வழங்கினர்.
தொடர்ந்து ஆசிரியர்கள் 6,7,8-ம் வகுப்பிற்கு நிரந்தர பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான கட்டிடங்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதற்கு இடையே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட அ.வலையப்பட்டி கிராமத்தில் மழைக்கு சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்றார். அப்போது வலையபட்டி உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மழையால் வீடு இழந்த வர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அரிசி மற்றும் காய்கறி, உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, யூனியன் சேர்மன்லதா, ஜெகன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சிங்கராஜ்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
- பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொம்பேறிப்பட்டி மலை கிராமப் பகுதியான செம்மணாம் பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை பல்வேறு கிராமங்களில் இருந்து குழந்தைகள் கல்வி பயில வருகின்றனர்.
இப்பள்ளியில் சுமார் 70 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மற்ற தனியார் பள்ளிகள் எதுவும் இல்லாததாலும், பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்களே உள்ளதாலும் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கே ஆரம்ப கல்விக்காக அனுப்பி வந்தனர்.
ஆனால் பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிக ஏற்பாடாக அங்குள்ள கலையரங்கத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அதே கலையரங்கில் கடந்த சில மாதங்களாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது கன மழை பெய்து வரும் சமயங்களில் கூட மாணவர்கள் வகுப்பறை வசதியின்றி திறந்தவெளி கலையரங்கில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கலெக்டர் இப்பிரச்சினையில் தலையிட்டு பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கவும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- தொண்டியில் அரசு பள்ளியில் உணவுத்திருவிழா நடந்தது.
- நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர்.
தொண்டி
தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உணவுத் திருவிழா தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தெற்கு தெரு ஜமாத்தார்கள், நண்பர்கள் அறக்கட்டளை, தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரிய பயிற்றுனர் தனலெட்சுமி, சுரேஷ்குமார் உட்பட பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் துரித உணவுகளின் தீமைகள், கலப்படமற்ற பாரம்பரிய இயற்கை உணவின் நன்மைகளை பற்றிய விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும் வகையில் பெற்றோர்கள் தானியங்களில் உணவுகளை தயார் செய்து கொண்டு வந்தனர். சிறந்த இயற்கை உணவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- அலங்காநல்லூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மணியஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தலுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர்கள் ஜோசப் சகாயம், சுபா ஆகியோர் தலைமை தாங்கினர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் தேவி, மைவிழிசெல்வி, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியின் போது பொதுமக்களிடம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
- பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 1-ம்வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை உள்ளது. 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
வகுப்பறை கட்டிடம் : இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை.இதையறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளியில் படித்தமுன்னாள் மாணவர்கள் பலரும் நிதி உதவி அளித்தனர். இதன் மூலம் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இது குறித்து முன்னாள் மாணவரும் பள்ளி வளர்ச்சி குழு தலைவருமான ரத்தினசாமி கூறியதாவது:- 1950ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியின் வளர்ச்சியை எங்களின் வளர்ச்சியாகவே கருதுகிறோம். ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை ,அதைத்தொடர்ந்து உயர் நிலை என்று இன்றைக்கு மேல்நிலையாக வளர்ந்து ள்ளது. இந்த பள்ளியோடு சுற்று வட்டாரத்தில் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்னும் அதே நிலையில் உள்ளதுடன், சில பள்ளிகள் மூட வும் செய்யப்பட்டு விட்டன.
பொதுத்தேர்வில் தேர்ச்சி : ஆனால் பொல்லிக்காளிபாளையம் பள்ளி ஆலமரத்தின் விழுது களாக வளர்ந்து நிற்கிறது. நாங்கள் படித்த காலத்தில் சராசரியாக 300 பேர் படித்தார்கள். தற்போது தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பிளஸ்-2வகுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் சூழல் தொடர்கிறது என்றார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை அனிதா கூறுகையில், பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு பக்க பலமாக உள்ளனர் என்றார்.
- மேலச் செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.
- மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.
செங்கோட்டை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் மேலச் செங்கோட்டை, அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதற்காக தலைமையாசிரியர் ராஜன், ஆசிரியர் பிரதிநிதிகள் ஜெஸிகலா, வேலம்மாள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இசக்கித்துரைபாண்டியன், சந்திரா ஆகியோர் உள்ளடக்கிய விழாக்குழு அமைக்கப்பட்டு பல்வேறு போட்டிகளுக்கான நடுவர்களும் நியமிக்கப்பட்டு பள்ளி அளவில் போட்டிகள் கடந்த 23-ந் தேதி முதல் 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. பள்ளி அளவில் இறுதி போட்டி 28-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் முதலிடம் பெறுபவர்கள் வட்டார அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். வட்டார அளவில் வெற்றிபெற்றவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொள்வார்கள்.மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். மாநில அளவில் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்ப டவுள்ளது. தரவரிசையில் முதல் 20 பேர் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
- ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள, அரசு தொடக்கப்பள்ளி மதில் சுவரானது, ஒரு பக்கத்தில் விரிசல் ஏற்பட்டு மற்றொரு பக்கம் சுவர் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், பள்ளிக்கு புதியதாக மதில் சுவர் அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
- அமைச்சரின் தீவிர முயற்சியால் புதிய மதில் சுவர் அமைக்கும் பணியானது ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள, அரசு தொடக்கப்பள்ளி மதில் சுவரானது, ஒரு பக்கத்தில் விரிசல் ஏற்பட்டு மற்றொரு பக்கம் சுவர் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், பள்ளிக்கு புதியதாக மதில் சுவர் அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியரும் பொதுமக்களும், ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும், குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ. சரவணன்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அமைச்சரின் தீவிர முயற்சியால் புதிய மதில் சுவர் அமைக்கும் பணியானது ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை சிறப்பு கட்டிட கோட்டம் செயற்பொ றியாளர் மாணிக்கவாசகம், கல்வித்துறை முதன்மை அதிகாரி தனச்செல்வன் நேரு, கல்வித்துறை துணை ஆய்வாளர் (வட்டம்-5) ராபர்ட் கென்னடி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கஜலட்சுமி, இளநிலை பொறியாளர் சுந்தர்ராஜு, பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், பள்ளி ஆசிரியர்கள், கட்டிட ஒப்பந்ததாரர் சபாஸ்டின் மார்ஷல், ஊர் பொதுமக்கள், பா.ஜனதா தொகுதி தலைவர் சாய் தியாகராஜன், கட்சி நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- கலை ஆர்வத்தை வெளிப்ப டுத்தும் மொழித்திறன், வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், இசைக் கருவிகள் இசைத்தல், கவின் கலை, நுண்கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
- அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவையாறு:
திருவையாறு ஒருங்கி ணைத்த பள்ளி கல்வித்துறை மற்றும் வட்டார வள மையம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் கலைத்திருவிழா நடந்தது.
அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா, வட்டார கல்வி அலுவலர்கள் விர்ஜின் ஜோனா, தங்கதுரை ஆகியோர் கலை திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதில் மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிப்ப டுத்தும் மொழித்திறன், வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், இசைக் கருவிகள் இசைத்தல், கவின் கலை, நுண்கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
திருவையாறு ஒன்றியத்துக்குட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள விசாலை யன்கோட்டை, கீழக்கோட்டை, சொக்கநாதபுரம், பாகனேரி, நகரம்பட்டி, பனங்காடி, மல்லல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 13 பள்ளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறையும், பல்வேறு பள்ளிகளுக்கு ரூ.90ஆயிரம் மதிப்பில் உபகரணங்களை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருகிற அரையாண்டு தேர்வில் 1 முதல் 12 வகுப்பு வரை முதலிடம் பிடிக்கும் மாணவர்களை தனது சொந்த செலவில் ஆசிரியர்களுடன் கல்வி சுற்றுலாவாக சட்டமன்றத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன்அருள்ராஜ், பழனிசாமி, சிவாஜி, கோபி, காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேசுவரி கோவிந்தராஜன், கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ், தேவதாஸ், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சதீஸ்பாலு, மாவட்ட பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
- முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சஹானா, ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் மாதவன் ஆகியோா் முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அந்த பள்ளிகளின் பராமரிப்பு செலவுக்காக தலா ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினாா்.
இதனை அப்பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஆயக்காரன்புலம் பழனியப்பன், தாணிக்கோட்டகம் தமிழ்ச்செல்வன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
- புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டை முன்னேற்ற உதவும் சிறந்த பாதை கல்வி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் விஸ்வை ஆனந்தன் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
புளியங்குடி:
புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டை முன்னேற்ற உதவும் சிறந்த பாதை கல்வி என்ற தலைப்பில் பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் விஸ்வை ஆனந்தன் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது மாணவிகள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும், செய்திகளை உள்ளார்ந்து உற்று நோக்கும் திறனை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எழுத்து பயிற்சியையும், ஏன் எப்படி என்ற சிந்தனை அனைத்திலும் புதுமையான முயற்சிகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இடையே அடிப்படை எண் மற்றும் எழுத்து அறிவை மேம்படுத்த மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மழலைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பொறுப்பு பாலாம்பிகா மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்