என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » governor anandiben patel
நீங்கள் தேடியது "Governor Anandiben Patel"
பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேச பெண் கவர்னர் ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர். #AnandibenPatel
போபால்:
மத்தியபிரதேச மாநில கவர்னராக ஆனந்திபென் படேல் பதவி வகிக்கிறார். இவர் விந்தியா பகுதியில் 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது ரேவா மாவட்டத்தில் உள்ள குர்க் பகுதியில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை பார்வையிட்டார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சூரிய ஒளி மின்சார திட்டத்தில் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைதொடர்ந்து வேலைவாய்ப்பு கேட்கும் இளைஞர்களின் பெயர்களை குறித்துக்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு கிராம மக்களை நோக்கி திரும்பிய ஆனந்திபென் படேல், ‘‘எதிர்காலத்தில் நீங்கள் இத்தகைய நல்ல திட்டங்களை பெற வேண்டும் என்றால் பிரதமர் மோடியை மறந்துவிடாதீர்கள் அவரை கவனத்தில் கொள்ளுங்கள்’’ என்றார். அப்போது அவருடன் பா.ஜனதா தலைவர்கள் ராஜேந்திர சுக்லா (சிவராஜ் சவுகான் அரசியல் மந்திரியாக இருந்தவர்) மற்றும் கே.பி. திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதற்கிடையே அவரது இந்த சர்ச்சை பேச்சு 2.30 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக வெளியாகியது.
இதை பார்த்த காங்கிரசார் படேல் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அவர் அரசியல் சட்ட விதிகளுக்குட்பட்ட கவர்னர் பதவியில் இருக்கிறார் எனவே அவர் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்க கூடாது.
ஆனந்திபென் படேல் இத்தகைய சர்ச்சை கருத்தை பேசுவது முதல் முறையல்ல, கடந்த ஆண்டு ஏப்ரலில் பா.ஜனதா கட்சி தொண்டர்களிடம் பேசும்போது மக்களிடம் ஓட்டு வாங்குவது குறித்து ஆலோசனை வழங்கினார். மக்களிடம் இருந்து ஓட்டுகளை பெற வீடு வீடாக சென்று குழந்தைகளை சந்திக்க வேண்டும். அதுவே ஓட்டுகளை பெறும் வழியாகும் என்றார்.
சட்டசபை தேர்தலின் போது நடைபெற்ற விழாவில் பேசிய அவர் விவசாய கடன் குறித்த கருத்துக்களை பா.ஜனதாவிற்கு ஆதரவாக வெளியிட்டார். அது அவரது உரையில் இடம் பெறாதவை. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரதமர் ஆனதும் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி பதவி விலகினார். அவருக்கு பதிலாக ஆனந்திபென் படேல் முதல்- மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AnandibenPatel

அவர் பா.ஜனதா ஊழியராக விரும்பினால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பாராளுமற தேர்தல் பொறுப்பாளர் ஷோபா ஓஜா தெரிவித்துள்ளார்.
ஷோபா ஓஜா
ஆனந்திபென் படேல் இத்தகைய சர்ச்சை கருத்தை பேசுவது முதல் முறையல்ல, கடந்த ஆண்டு ஏப்ரலில் பா.ஜனதா கட்சி தொண்டர்களிடம் பேசும்போது மக்களிடம் ஓட்டு வாங்குவது குறித்து ஆலோசனை வழங்கினார். மக்களிடம் இருந்து ஓட்டுகளை பெற வீடு வீடாக சென்று குழந்தைகளை சந்திக்க வேண்டும். அதுவே ஓட்டுகளை பெறும் வழியாகும் என்றார்.
சட்டசபை தேர்தலின் போது நடைபெற்ற விழாவில் பேசிய அவர் விவசாய கடன் குறித்த கருத்துக்களை பா.ஜனதாவிற்கு ஆதரவாக வெளியிட்டார். அது அவரது உரையில் இடம் பெறாதவை. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரதமர் ஆனதும் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி பதவி விலகினார். அவருக்கு பதிலாக ஆனந்திபென் படேல் முதல்- மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AnandibenPatel
என் கணவர் தான் எனக்கு ராமர் என்று கவர்னர் ஆனந்திபென்னின் தவறான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் மோடி மனைவி சமூக வலைத்தளம் மூலம் பதில் அளித்துள்ளார். #PMModi #Jashodaben #AnandibenPatel
ஆமதாபாத்:
மத்திய பிரதேச கவர்னர் ஆனந்திபென் சமீபத்தில் ஒரு விழாவில் பேசும் போது, ‘‘பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்’’ என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்டுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.
கவர்னர் ஆனந்திபென் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தவர். அவரது பேச்சு மோடியின் மனைவி ஜசோதா பென்னுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது ஜசோதா பென் வடக்கு குஜராத்தில் உன் சாணும் மாரில் தன் சகோதரர் அசோக் மோடி வீட்டில் வசித்து வருகிறார். கவர்னர் ஆனந்திபென்னுக்கு மறுப்பு தெரிவித்து சமூக வலைத்தளம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நன்கு படித்த, பொறுப்புள்ள நபர் (ஆனந்திபென்) சாதாரண ஒரு ஆசிரியையான என்னைப் போன்று பேசுவதை ஏற்க இயலாது. அவரது இந்த பேச்சால் பிரதமரின் இமேஜ்க்கு களங்கம் ஏற்பட்டு இருக்கிறது.
அவர் (மோடி) எனக்கு மிகவும் மரியாதைக்குரியவர். எனக்கு அவர் ராமர்.
இவ்வாறு மோடியின் மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார். #PMModi #Jashodaben #AnandibenPatel
மத்திய பிரதேச கவர்னர் ஆனந்திபென் சமீபத்தில் ஒரு விழாவில் பேசும் போது, ‘‘பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்’’ என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்டுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.
கவர்னர் ஆனந்திபென் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தவர். அவரது பேச்சு மோடியின் மனைவி ஜசோதா பென்னுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது ஜசோதா பென் வடக்கு குஜராத்தில் உன் சாணும் மாரில் தன் சகோதரர் அசோக் மோடி வீட்டில் வசித்து வருகிறார். கவர்னர் ஆனந்திபென்னுக்கு மறுப்பு தெரிவித்து சமூக வலைத்தளம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர் என்று ஆனந்திபென் பேசியதாக வந்த தகவலை பார்த்ததும் நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, வேட்பு மனுவில் அவர் தான் திருமணம் ஆனவர் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் மனைவி பெயர் என்ற இடத்தில் எனது பெயரையும் அவர் எழுதியுள்ளார்.
அவர் (மோடி) எனக்கு மிகவும் மரியாதைக்குரியவர். எனக்கு அவர் ராமர்.
இவ்வாறு மோடியின் மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார். #PMModi #Jashodaben #AnandibenPatel
பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #PMModi
போபால்:
நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்து பின்னர் பிரதமர் ஆனார். அவர், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதும் ஆனந்தி பென் பட்டேல் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
அவர், தற்போது மத்திய பிரதேச மாநில கவர்னராக இருந்து வருகிறார். அங்குள்ள கர்தா மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.
திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து புகழ்ந்து பேசிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று கூறினார்.
அவர், தனது பேச்சில் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்தவர்.
பிரதமர் மோடி ஜசோதா பென் என்பவரை இளம் வயதில் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர்.
மோடி திருமணம் ஆகாதவர் என்றே முதலில் கருதப்பட்டது. 2014 பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் ஜசோதா பென் தனது மனைவி என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், ஆனந்தி பென் பட்டேல் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியவற்றை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். #PMModi
நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்து பின்னர் பிரதமர் ஆனார். அவர், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதும் ஆனந்தி பென் பட்டேல் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
அவர், தற்போது மத்திய பிரதேச மாநில கவர்னராக இருந்து வருகிறார். அங்குள்ள கர்தா மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.
திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து புகழ்ந்து பேசிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று கூறினார்.
அவர், தனது பேச்சில் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்தவர்.
குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பிறகும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் தெரிந்தவர் என்று குறிப்பிட்டார்.
மோடி திருமணம் ஆகாதவர் என்றே முதலில் கருதப்பட்டது. 2014 பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் ஜசோதா பென் தனது மனைவி என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், ஆனந்தி பென் பட்டேல் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியவற்றை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். #PMModi
×

X