என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "groom"

    • எனது தோழி ஒரு மருத்துவர். அவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
    • ரூ.50 கோடி என்பது எனது தோழியின் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு.

    அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) முதலிடம் பெற்ற ஒருவர் திருமணத்திற்காக தனது தோழியிடம் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டுள்ளார் என்று பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டாக்டர் பீனிக்ஸ் என்ற ஐடியில் இருந்து இந்த பதிவு இடப்பட்டுள்ளது. அந்த பதிவில், "சிறுநீரக மருத்துவ படிப்பிற்கான எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் முதல் இடத்தை பெற்ற ஒருவருடன் எனது தோழிக்கு திருமண வரன் பார்க்கப்பட்டது. எனது தோழியும் ஒரு மருத்துவர் தான். அவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

    எய்ம்ஸ் தரவரிசையில் முதல் இடம் பிடித்தவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற எனது தோழியின் குடும்பத்தினரிடம் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டுள்ளார். ஒரு மருத்துவருக்குத் தன் சொந்தக் காலில் நிற்க கூட துணிவு இல்லையென்றால் இந்தக் கல்வியால் என்ன பயன்?

    ரூ.50 கோடி என்பது எனது தோழியின் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு. தெலுங்கு சமூகத்தில் அவளை திருமணம் செய்து வைப்பதற்கு வரதட்சணை மற்றும் தங்களின் ஓய்வுக்கால சேமிப்பு முழுவதுமாக தேவை என்று அவளது பெற்றோர்கள் கூறுவதால் எனது தோழி காலையிலிருந்தே அழுது கொண்டிருக்கிறாள். எனது தோழியின் தங்கைக்கு திருமணம் செய்துவைக்கும் போதும் அவளது பெற்றோர்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவு இணையத்தில் வைரலாக வரதட்சணை முறைக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • மணமகன் மீது பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
    • மணமகனின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.71,500 பணமும் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வரதட்சணை தடைச் சட்டம் 1961 ஆண்டு மே 1 முதல் அமலில் உள்ளது. அதன்படி இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

    வரதட்சணை தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவில் வரதட்சணை கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

    இந்நிலையில், தான் கேட்காமலேயே தனக்கு வரதட்சணை கொடுத்ததாக தனது மனைவியின் குடும்பத்தினர் மீது மணமகனே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கின் விசாரணையில், மணமகன் மீது ஏற்கனவே பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாக அக்டோபர் 5 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தது தெரியவந்தது.

    மணமகனின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.71,500 பணமும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரூ.25,000 காசோலையாகவும், ரூ.46,500-யை அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர்

    இதனால் தன் மீது சுமத்துப்பட்டுள்ள புகாரை திசை திருப்பவே மணமகன் இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளாரா என்ற சந்தேகம் வரவே, இரு தரப்பினரும் புகார் தொடர்பான ஆதாரத்தை சமர்ப்பித்த பிறகே இது தொடர்பாக முடிவு எடுக்க முடியும் என்று என நீதிமன்றம் தெரிவித்தது.

    • மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு மணமகள் கிராமத்துக்கு வருகை தந்தனர்.
    • காரை ஏற்றிய நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

    ராஜஸ்தானில் திருமணத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பான சண்டையில் மணமகன் வீட்டை சேர்ந்த நபர் பெண் வீட்டை சேர்ந்த 7 பேர் மீது வண்டியை ஏற்றியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தௌசா[Dausa] வில் மணமகள் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதால் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அங்கு வருகை தந்துள்ளனர்.

    மாப்பிளை வீட்டாரோடு தனது காரில் அவர்களின் உறவினர் ஒருவரும் வந்துள்ளார். இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு வெளியே பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அங்கு தனது காரை மாப்பிளை வீட்டாரோடு வந்தவர் பார்க்கிங் செய்ய முயன்றுள்ளார்.

    இதனால் அவருக்கும் பெண் வீட்டு ஆட்கள் 7 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நபர் கோபத்தில் தனது காரை இயங்கி முன்னாள் நின்ற அந்த 7 பேர் மீதும் ஏற்றியுள்ளார். இதனால் அந்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில்  வெளியாகி உள்ளது.

    ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 பேரில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது காரை ஏற்றிய நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார்.
    • குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    உத்தரப்பிரதேசத்தில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நவம்பர் 17 ஆம் தேதி சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கும் 30 வயது இளைஞருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மணப்பெண் மறுத்துள்ளார்.

    மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார். ஆகவே 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் கறாராக தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மணமகளிடம் பல மணிநேரம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடுமபத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.

    • திருமணத்துக்கு முந்தைய இரவு நிகழ்ச்சியில் சாப்பிடும்போது ரொட்டிகள் சுட்டு வழங்க தாமதமானது
    • மணமகன் உடனே தனது உறவினரின் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    திருமணத்தில் உணவு வழங்க தாமதமானதால் மணமகன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில் கடந்த டிசம்பர் 22 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணத்துக்கு முந்தைய இரவு நிகழ்ச்சியில் சாப்பிடும்போது ரொட்டிகள் சுட்டு வழங்க தாமதமானதாக  கூறி மணமகன் மெஹ்தாப் மற்றும் அவரது உறவினர்கள் திருமணத்தையே நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

    அவர்களை தடுக்க மணமகள் வீட்டார் முயன்றபோதும் அவர்கள் விடாப்பிடியாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின் அந்த மணமகன் உடனே தனது உறவினரின் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    இதனை அறிந்த மணமகளின் குடும்பத்தினர் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் டிசம்பர் 24 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

    அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் செலவிட்டதாகவும், அதில் ரூ.1.5 லட்சம் வரதட்சணையாக மணமகன் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் மணமகள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

    • நண்பர்கள் வற்புறுத்தியதால் 'சோலி கே பீச்சே..' என்ற பாடலுக்கு மணமகன் நடனமாடியுள்ளார்.
    • மணமகனின் இந்த செயல் மணமகளின் தந்தைக்கு பிடிக்கவில்லை.

    டெல்லியில் திருமணத்தின்போது 'சோலி கே பீச்சே..' என்ற பிரபல பாலிவுட் பாடலுக்கு மணமகன் நடனமாடியதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகளின் தந்தை திருமணத்தை பாதியில் நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நண்பர்கள் வற்புறுத்தியதால் 'சோலி கே பீச்சே..' என்ற பாடலுக்கு மணமகன் நடனமாடியுள்ளார். மணமகனின் இந்த செயல் மணமகளின் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து அவர் உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    மணமகன் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் பலனில்லை. திருமணம் பாதியில் நின்றதால் மணமகள் கண்ணீருடன் அரங்கத்தை விட்டு வெளியேறினார்.

    தனது குடும்ப மரபுகளை அவர் உதாசீனம் செய்துவிட்டதாக மணமகளின் தந்தை காட்டமாக தெரிவித்தார்.

    • கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார்.
    • அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்று கேட்டார்.

    சிபில் [CIBIL] ஸ்கோர் என்பது நபரின் கடன் பின்னணியைக் குறிக்கும் எண் முறை ஆகும். அவர் கடன் பெறுவதற்குத் தகுதியானவரா என்பதை அவரின் சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் முடிவு செய்யும்.

    இந்நிலையில் சிபில் ஸ்கோர் காரணமாக மகாராஷ்டிராவில் திருமணம் ஒன்று கடைசி நேரத்தில் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் முர்திசாபூரை சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மணப்பெண்ணின் தாய் மாமா, மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார். இதன்மூலம் மணமகன் பல கடன் வாங்கி உள்ளதும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதும் தெரியவந்தது.

    ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள ஒருவருக்கு ஏன் தங்கள் குடும்ப பெண்ணை தர வேண்டும் என்றும் அவரால் மனைவியின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? என்றும் உறவினர் கேள்வி எழுப்பினார்.

    இதனை பெண் வீட்டார் அனைவரும் ஏற்றுக்கொண்டு தங்கள் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக திருமணத்தை நிறுத்தினர்.

    ஜாதக பொருத்தம், மன பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கும் காலம் மாறி சிபில் [CIBIL] ஸ்கோரை பார்த்து பெண் தரும் காலம் வந்துவிட்டதாக நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர். 

    • பிரதீப் (26) என்று இளைஞருக்கு திருமணம் ஊர்வலம் நடைபெற்றது.
    • குதிரையில் வந்த மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார்.

    மத்திய பிரதேசத்தில் திருமணத்தை ஒட்டி குதிரையில் ஊர்வலமாக வந்த மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சியோபூர் மாவட்டத்தில் பிரதீப் (26) என்று இளைஞருக்கு திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குதிரையில் வந்த மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    திண்டுக்கல் அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் மர்மமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் லோகேஸ்வரன் (வயது 32). இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள தம்பிதோட்டம் காந்தி கிராம குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பிறகு மறு வீடு சம்பிரதாயத்துக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். இன்று காலை குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    திண்டுக்கல் அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 60). இவர் திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த அவர் இன்று காலையில் கேட் அருகே சுயநினைவின்றி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு, தூத்துக்குடியில் நடந்த விபத்தில் புதுமாப்பிள்ளை மற்றும் உப்பள தொழிலாளி பலியாகினர். #Accident
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்த பூல்பாண்டி என்பவரது மகன் சின்னராஜா (வயது 28). கயத்தாறில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதம் தான் ஆகிறது. புதுமண தம்பதியான இவர்கள் நேற்று தலைதீபாவளி கொண்டாட கயத்தாறு அருகே சவலாப்பேரியில் உள்ள சீதாலட்சுமியின் உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சின்னராஜா மட்டும் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் பருத்தி குளத்துக்கு சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சின்னராஜா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலை தீபாவளி கொண்டாடிய புதுமாப்பிள்ளை திருமணமான 2 மாதத்திலேயே பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மற்றொரு சம்பவம்...

    தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடையை சேர்ந்தவர் ராமர்பாண்டி மகன் ராஜா (35). குளத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜா (27). இவர்கள் இருவரும் வேப்பலோடை பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் இருவரும் வேலைக்கு செல்லவில்லை. மதியம் விஜய் நடித்து நேற்று வெளியான ‘சர்கார்’ படம் பார்க்க தூத்துக்குடிக்கு சென்றனர். படம் பார்த்து விட்டு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இரவு 8 மணியளவில் தருவைகுளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வந்தபோது அவ்வழியாக சென்ற ஒரு லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராமர்பாண்டி மகன் ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த மற்றொரு ராஜா காயத்துடன் உயிர் தப்பினார்.

    அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குபதிந்து விபத்துக்கு காரணமான லாரியை தேடி வருகின்றனர்.  #Accident




    திருவண்ணாமலையில் 2 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மணமகன்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #childmarriage
    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    திருமண ஏற்பாடு நடந்துவந்த வேளையில், சமூக பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். திருமண ஏற்பாட்டையும் தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில், திருமண ஏற்பாடு நடந்த இடைப்பட்ட பகுதியில் ஆசைவார்த்தை கூறி மணமகன் உல்லாசம் அனுபவித்ததாக அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்டது.

    மணமகன் அறிவழகன், இவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 4பேர் மீதும் பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், கீழ்பென்னாத்தூர் மேக்களூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு சிறுமிக்கும், செஞ்சி தாலுகா அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவருக்கும் திருமணம் செய்துவைக்க இருத்தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

    சமூகநல பாதுகாப்புதுறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்த சிறுமியும், மணமகன் குருமூர்த்தி மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.

    மணமகன் மற்றும் அவரது தந்தை, சிறுமியின் தாய் மற்றும் உறவினர் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #childmarriage
    திருவெறும்பூர் அருகே மாப்பிள்ளை வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் நாளை நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
    மணப்பாறை:

    இதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி ராவுத்தான்மேட்டை சோந்தவர் சரவணன். இவரது மகன் மகேந்திரன். திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் கொள்முதல் பிரிவு அதிகாரியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் நடைபெற இருந்தது. மாப்பிள்ளை வீட்டினர் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் காருக்கு பதில் ரூ. 5 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் நாளை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மகேந்திரன் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் . அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதராணி இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினார்.

    ஆனால் மகேந்திரன் தரப்பினர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் வரதட்சணை, பெண் வன்கொடுமை மற்றும் மிரட்டியது என 3 பிரிவின் கீழ் மகேந்திரன், அவரது தாய் பாப்பாத்தி, தந்தை சரவணன், தங்கை மகாலட்சுமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மகேந்திரனை கைது செய்தனர். மேலும் பாப்பாத்தி, சரவணன், மகாலட்சுமி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    ×