என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Group 4"
- தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
- தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி மூலம நிரப்பப்படும் பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்காம் தொகுதி (குரூப் - 4) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 16 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதிய நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி கடந்த 11ம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை 480 மட்டுமே உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது.
இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. ஒரு தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்தி முடித்தது.
- குரூப்-4 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.
சென்னை:
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு, அதற்கான தேர்வை கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ம் தேதி நடத்தி முடித்தது.
இந்தத் தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வை எழுதிய தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஆனாலும் தேர்வு முடிவு வெளியிடப்பட இல்லை. 4-வது முறையாக மார்ச் மாதத்துக்குள் (இந்த மாதம்) வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குரூப்-4 தேர்வு முடிவை வெளியிடக் கோரி டுவிட்டரில் ஹேஷ்டேக் செய்தனர்.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நேற்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப்-4-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.7.2022 அன்று நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.2.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி, தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
- கேள்வித்தாளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டி ருந்தன. ஒரு வினாவுக்கு 1½ மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
- குரூப்-4 பேர் தேர்வில் வெற்றி பெற்றதும் , சான்றிதழ் சரிபார்ப்புக்காக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள்.
சேலம்:
தமிழகத்தில் 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-4 தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.
சேலம், நாமக்கல்...
சேலம் மாவட்டத்தில் 291 மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 885 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 191 மையங்களில் 47 ஆயிரத்து 608 பேரும் குரூப்-4 தேர்வு எழுதினர்.
இதில் சேலம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 678 பேர் பங்கேற்கவில்லை. அதுபோல் நாமக்கல் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 615 பேர் தேர்வு எழுதவரவில்லை.
கேள்வித்தாளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டி ருந்தன. ஒரு வினாவுக்கு 1½ மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதில் அரசியல் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இது கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
ஹால்டிக்கெட்
நேற்று தேர்வர்கள் தங்களுடைய தேர்வு மையத்துக்கு எடுத்துச் சென்ற குரூப்-4 ஹால்டிக்கெட் சரிபார்க்கப்பட்டு அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொரு பேருடைய ஹால்டிக்கெட்டி லும் தேர்வு அறை அதிகாரி கையெழுத்து போட்டு, தேர்வு எழுதுவது தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஹால்டிக்கெட்டை தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஏனெனில் தேர்வர்கள் குரூப்-4 பேர் தேர்வில் வெற்றி பெற்றதும் , சான்றிதழ் சரிபார்ப்புக்காக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள்.
அப்போது, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டை கேட்பார்கள். அதில், தேர்வு அறை அதிகாரி யால் கையெழுத்து போடப்பட்டுள்ளதா? அந்த கையெழுத்து சரியான கையெழுத்தா? என ஆய்வு செய்வார்கள். மேலும் ஹால்டிக்கெட்டில் இடம் பெற்ற புகைப்படம் தேர்வர்களுடையது தானா? என ஒப்பிட்டு பார்ப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா்.
- குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.
ஊட்டி:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.
ஊட்டியில் சி.எஸ்.ஐ.சி. எம்.எம். உயா்நிலைப் பள்ளி, பிரிக்ஸ் பள்ளி, சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, யுனிக் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வினை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், ஊட்டி வட்டத்தில் உள்ள 15 மையங்களில் 4,032 போ், குன்னூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,054 போ், கூடலூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,151 போ், கோத்தகிரி வட்டத்தில் உள்ள 5 மையங்களில் 1,370 போ்,
குந்தா வட்டத்தில் உள்ள 2 மையங்களில் 319 போ், பந்தலூா் வட்டத்தில் உள்ள 4 மையங்களில் 1,225 போ் என 40 மையங்களில் நடைபெற்ற தோ்வில் மொத்தம் 8,763 போ் தோ்வு எழுதினா். இது 78.58 சதவீதம் ஆகும். 2,388 போ் தோ்வு எழுதவில்லை.
இத்தோ்வினை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 பறக்கும் படை அலுவலா்கள், 6 வட்டங்களில் 6 மேற்பா ா்வை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வுக் கூடங்களை கண்காணிக்க சம்பந்த ப்பட்ட கல்லூரி, பள்ளிகள் ஆகியவற்றில் உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் நிலையில் மொத்தம் 40 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, தோ்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தோ்வையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணி யாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ள வழிமு றைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு தோ்வுகள் நடைபெற்றன.
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் கிருஷ்ணகுமாா் தோ்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குரூப்-4 தேர்வு எழுத காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
- விதிமுறைகளை பின்பற்றி காலம் கடந்து வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.
நெல்லை:
குரூப்-4 தேர்வு எழுத காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் நெல்லை மாநகரில் உள்ள பல்வேறு மையங்களுக்கு காலை 9 மணிக்கு பலர் தேர்வு எழுத வந்தனர்.
அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாருக்கும் தேர்வர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை ஆய்வு செய்வதற்காக நெல்லை சப்-கலெக்டர் சந்திரசேகர் வந்தார். அப்போது 8.30 மணியை கடந்து வந்த தேர்வர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சப்-கலெக்டர் சந்திரசேகரை பார்த்ததும் அவரிடம் தங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
ஆனால் விதிமுறைகளை பின்பற்றி காலம் கடந்து வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பாளை ராஜகோபால நகரை சேர்ந்த டாக்டர் சிவராஜா மனைவி ஜெனிபர் என்பவர் பாளை தனியார் கல்லூரியில் அமைக்கபட்டிருந்த மையத்தில் தேர்வு எழுத தனது 10 மாத கைக்குழந்தையுடன் வந்தார்.
பின்னர் தனது கணவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தேர்வு அறைக்குச்சென்றார். அப்போது தனது குழந்தைக்கு உணவு ஊட்டி அக்கரையுடன் சிவராஜா கவனித்துக்கொண்டார்.
- மதுரை மாவட்டத்தில் இன்று 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்.
- முன்னதாக தேர்வர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மதுரை
தமிழகத்தில் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 7,301 காலி யாக உள்ளன. இதற்கான தேர்வை நடத்துவது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து மாநில அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு இன்று (24-ந்தேதி) தேர்வு நடந்தது.
இதையொட்டி மதுரை மாவட்டத்தில் மதுரை, கள்ளிக்குடி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மேலூர், பேரையூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 419 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 569 பேர் தேர்வு எழுதினர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வை 419 அதிகாரிகள் கண்காணித்தனர். இது தவிர 96 கண்காணிப்பு குழுவினர், 14 பறக்கும் படை குழுவினர் ஆகியோர் பணியில் தீவிர மாக ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாகவே விண்ணப்பதாரர்கள் மையத்துக்கு வந்து விட்டனர். அப்போது அவர்களுக்கு கொரோனா முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக கவசம் அணிந்து தேர்வு எழுதும் அறைக்கு சென்ற னர்.
அங்கு அவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
முன்னதாக தேர்வர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களின் கூட்டம் அலைமோதியது. இந்த தேர்வு மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.
- தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 7,689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
- சென்னையில் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை:
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்தே ஆர்வமுடன் பலர் விண்ணப்பித்தனர்.
அந்த வகையில் 9.35 லட்சம் ஆண்கள், 12.67 லட்சம் பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு நாளை நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகா மையங்களில் வரும் 7,689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 7 ஆயிரத்து 689 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7,689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை போக்குவரத்துறை இயக்குகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அறிவுறுத்தல்படி, மையங்களின் எண்ணிக்கை ஏற்ப நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு மையங்கள் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சிறப்பு பஸ்கள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வினை 56,223 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
- 191 தேர்வு மையங்களில் 56 ஆயிரம்பேர் எழுதுகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வினை 56,223 தேர்வர்கள் எழுத உள்ளனர். அறை ஒன்றுக்கு 20 தேர்வர்கள் வீதம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக நாமக்கல் வட்டத்தில் 43 தேர்வு மையங்களில் 13,722 தேர்வர்களும், ராசி புரம் வட்டத்தில் 47 தேர்வு மையங்களில் 13,978 தேர்வர்களும், மோகனூர் வட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 2,239 தேர்வர்களும், சேந்தமங்கலம் வட்டத்தில் 17 தேர்வு மையங்களில் 4,318 தேர்வர்களும், திருச்செங்கோடு வட்டத்தில் 42 தேர்வு மையங்களில் 12,048 தேர்வர்களும், பரமத்திவேலூர் வட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 6,612 தேர்வர்களும், குமாரபாளையம் வட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 3,306 தேர்வர்களும் என மொத்தம் 132 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 191 தேர்வு மையங்களில் 56,223 தேர்வர்களும் போட்டித்தேர்வினை எழுதுகின்றனர்.
இந்த தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கு தவறாமல் வந்து விடவேண்டும். தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வின்போது அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த குறும்பட விளக்க காட்சி ஒளிபரப்பப்பட்டது.
- மொபைல் போன், எலெக்டிரானிக் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வர்கள் தேர்வுக்கு கொண்டு செல்ல அனுமதிக் கப்படமாட்டாது.
- விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிறம் கொண்ட பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கோவை:
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் (குரூப்-4) தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 77,020 பேர் எழுதுகிறார்கள்.
தேர்வாளர்கள் நுழைவு சீட்டை அரசு பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்தை தெரிந்துகொள்ள வேண்டும். தேர்வு மையத்துக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தேர்வை சிறப்பாக நடத்துவதற்காக 24 மொபைல் அலுவலர்கள், 247 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள், துணை கலெக்டர் அந்தஸ்தில் 12 கண்காணிப்பு அதிகாரிகள், 17 பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது.
காலை 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுகூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்கள். காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூ டத்திற்கு சென்றடைய வேண்டும். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளுக்கு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.
விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிறம் கொண்ட பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற பேனாக்களை பயன்படுத்தக்கூடாது. விடைத்தாளில் உரிய இடங்களில் (இரு இடங்களில்) கையொப்பமிட்டு, இடதுகை பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மைபடாமலும், விடைத்தாள் எந்தவகையிலும் சேதமடை யாமலும் கவனமுடன் செயல்பட வேண்டும். வினாத்தாளில் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியா விட்டால் ஓ.எம்.ஆர். வட்டத்தில் இ என்ற வட்டத்தை கருமை யாக்கப்பட வேண்டும்.
ஓ.எம்.ஆர். வட்டத்தில் ஏ.பி.சி.டி மற்றும் இ என்ற ஒவ்வொரு விடைக்கும் வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்கப்பட வேண்டும்.
தேர்வர்கள் இதனை பிழையில்லாமல் உரிய கட்டங்களில் கருமை யாக்கப்பட வேண்டும். தேர்வர்கள் இதனை சரியாக செய்துள்ளனரா? என்று உறுதி செய்து கொள்ளவேண்டும். இதற்காக ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு முடிந்த பின்னர் 15 நிமிடங்கள் கூடுதல்லாக வழங்கப்படும்.
அதாவது 12.30 மணி முதல் 12.45 மணி வரை இந்த செயல்பாட்டை முடித்து விடைத்தாளை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கவேண்டும். மொபைல் போன், எலெக்டிரானிக் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வர்கள் தேர்வுக்கு கொண்டு செல்ல அனுமதிக் கப்படமாட்டாது.
- 9 பறக்கும் படை அலுவலர்கள், 6 மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- குரூப் 4 தேர்வு எழுதுவோருக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இருந்து குரூப் 4 தேர்வு எழுதுவோருக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் 40 தேர்வு மையங்களில் மொத்தம் 11,151 பேர் குரூப்-4 தேர்வில் பங்கேற்க உள்ளனர். 9 பறக்கும் படை அலுவலர்கள், 6 மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுக் கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை வட்டாட்சியர் நிலையில் மொத்தம் 21 மொபைல் யூனிட் உட்பட 40 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தேர்வுக்கு செல்வதற்காக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் காலை 7 மணியில் இருந்தும், பந்தலூர் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணியில் இருந்தும் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பே தேர்வு அறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். வெப்பநிலை அதிகமாக உள்ள நபர்கள், தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பார்வையற்ற தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4ல் அடங்கியுள்ள பதவிக்கான போட்டித்தேர்வு (தேர்வுநாள்: 24.07.2022 முற்பகல்) எழுதும் தேர்வர்களின் அனுமதிச்சீட்டில் ராஜபாளையம் வட்டம் ஹால் எண்:29 சத்யாவித்யாலயா, (சி,பி.எஸ்.இ.) பிள்ளையார்குளம், கே.ஆர் நகர் அஞ்சல் (பெருமாள் தேவன்பட்டி கோவில் அருகில்) - 626137 என உள்ள தேர்வர்கள் ஹால் எண்:29 சத்யாவித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராஜீவ் காந்தி நகர், கே.ஆர் நகர் அஞ்சல், ராஜபாளையம் வட்டம்- 626108 (வேட்டைப்பெருமாள் திருக்கோவில் அருகில்) என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் திருச்சுழி வட்டம் ஹால் எண் - 005 மருது பாண்டியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (எம்.டி.ஜி.எச்.எஸ்.எஸ். நரிக்குடி) மதுரைரோடு திருச்சுழி வட்டம் என உள்ள தேர்வர்கள் ஹால் எண்:005 மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, நரிக்குடி, மதுரை ரோடு, திருச்சுழி வட்டம் என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேர்வர்கள் குரூப்-4 இலவச மாதிரி தேர்வு எழுதி பயன்பெறலாம்.
- ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.
விருதுநகர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 7,301 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 4) வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், மாநில அளவிலான இலவச குரூப்-4 மாதிரி தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நாளை (23-ந் தேதி) வரை இணையதளம் வாயிலாக மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் தேர்வு மேற்கொள்ளலாம். இம்மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் (www.tncareerservices.tn.gov.in) என்ற இணையதளத்தில் நுழைந்து தேர்வு எழுதி பயன் பெறலாம். ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.
மேலும் இவ்வலைத ளத்தில் பல்வேறு தேர்வுக ளும் இடம் பெற்றுள்ளன. TNPSC குரூப்-4 தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறுமாறு கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தகவலுக்கு 04562-293613 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்