search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guduvancherry"

    கூடுவாஞ்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மீட்டெடுத்ததாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரியில் உள்ள மீனாட்சி நகர், இந்திராநகர், நேரு தெரு வீதிகளில் 25 அடி அகலம் கொண்ட கால்வாய் வழியாக கூடுவாஞ்சேரி ஏரியில் மழை நீர் சென்றடையும்.

    மழைக் காலங்களில் மீனாட்சி நகர், இந்திராநகர், நேரு தெருவில் குடியிருக்கும் மக்கள் மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதையடுத்து மழைநீர் தங்கு தடையின்றி ஏரி, குளங்களை சென்றடையும் வகையில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் மழை நீர் கால்வாய், வருவாய் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி, கால்வாய்களை அகலப்படுத்தி வருகின்றனர்.

    நேரு தெருவில் மழை நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து தனியார் பள்ளி சுற்றுசுவர் அமைத்து இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டு வட்டாட்சியர் பாக்கிய லட்சுமி, வருவாய் துறை நில அளவையர் நாகராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிருஷ்சா பிரபு மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், பொதுப் பணித்துறை ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுற்று சுவர், பள்ளியால் அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்றவற்றை அகற்றினர். 30 கோடி மதிப்பிலான 3 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மீட்டெடுத்ததாகவும் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
    ×