என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » guestofhonour
நீங்கள் தேடியது "GuestofHonour"
அபுதாபியில் மார்ச் 1,2 தேதிகளில் நடைபெறும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பையேற்று சுஷ்மா சுவராஜ் இதில் கலந்து கொள்கிறார். #Indiainviteds #GuestofHonour #OICmeet #SushmatoattendOICmeet
புதுடெல்லி:
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் 46-வது மாநாடு மார்ச் 1 மற்றும் 2 தேதிகளில் அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் கூடி சில முக்கிய ஆலோனைகளை நடத்தவுள்ளனர். இந்த மாநாட்டில் ’கவுரவ பார்வையாளராக’ பங்கேற்க வருமாறு முதன்முதலாக இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடைபிடித்துவரும் இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு முதன்முறையாக இந்தியாவுக்கு தற்போது அழைப்பு அனுப்பியுள்ளது இந்திய அரசின் ராஜதந்திர அணுகுமுறைகளுக்கு கிடைத்துள்ள வெற்றியாக கருதப்படும் நிலையில், இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ’சுமார் 1.85 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவுக்கும், இஸ்லாமிய உலகத்துக்கு இந்தியா அளித்துவரும் பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த அனுப்பப்பட்டுள்ள இந்த அழைப்பு மகிழ்ச்சியான செய்தியாகும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. #Indiainviteds #GuestofHonour #OICmeet #SushmatoattendOICmeet
×

X