என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gujarat Assembly Elections"
- குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அகதாபாத்:
குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் முடிந்து சுமார் 1 மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் வாக்குகள் அனைத்தும் இந்த மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவினர் இங்கும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் வரிந்து கட்டியிருந்தன.
மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எனினும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க முடியும் என பா.ஜனதா நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அதேநேரம் இழந்த ஆட்சியை கைப்பற்றுவோம் என காங்கிரசும் நம்பிக்கையுடன் இருக்கிறது.
இதில் யாருடைய கனவு பலிக்கும்? என்பது இன்று தெரிந்து விடும்.
இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
- நாளை குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி குஜராத் வந்தடைந்தார்.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு நாளை (5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது.
குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
93 தொகுதிகளிலும் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். ஆனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.
குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜக கடுமையாக போராடியது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதிக்கும் நாளைதான் தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ம் தேதி (வியாழன்) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
நாளை குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி குஜராத் வந்தடைந்தார். தொடர்ந்து, காந்தி நகரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கு அவரது தாயிடம் ஆசீர்வாதம் பெற்ற பிரதமர் மோடி சிறிது நேரம் உரையாடினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்