search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Gaming Zone"

    • விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்.

    குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

    இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், தீ விபத்திற்கு விளையாட்டு மைதானத்தில் மேற்கொண்ட வெல்டிங் பணி காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் சிசிடிவி காட்சி சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வளாகத்தின் மேற்கூரையில் வெல்டிங் செய்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் தீப்பிடித்ததைக் காட்டுகிறது.

    தீப்பொறிகள் அருகில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களில் விழுந்து தீப்பிடித்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் தீ மளமளவென பரவியது. மேலும், நுழைவாயில் அருகில் இருந்த தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் சிக்கினர். இதுவும் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனவும் கூறப்படுகிறது.

    இருப்பினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×