என் மலர்
நீங்கள் தேடியது "Gun"
- படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
- துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்தனர்.
கணவன்-மனைவி இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் அமெரிக்கா வந்திருக்கின்றனர். அவர்களது 3 வயது மகன் டேவிட் கோட்டயத்தில் தனது தாத்தா-பாட்டி பராமரிப்பில் வளர்ந்திருக்கிறான். அவனை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு மீரா அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் மீரா மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர், தனது சகோதரியுடன் செவிலியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு மீரா தனது கணவர் அமலுடன் காரில் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவன்-மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அமல் ரெஜி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மீராவை துப்பாக்கியால் சுட்டார். சுமார் 10-க்கும் மேற்பட்ட முறை அவர் சரமாரியாக சுட்டிருக்கிறார்.
இதில் படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆத்திரத்தில் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல் ரெஜி, சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த தேவாலய பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தினார்.
பின்பு அங்கிருந்தவர்களிடம் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக கூறிய அவர், அதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மீராவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல்ரெஜியை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது.
அமல் மீது கொலை முயற்சி மற்றும் பிறக்காத குழந்தையை வேண்டு மேன்றெ கொன்றதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமைடைந்த மீரா கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
- பயத்தில் சிறுமி அலறவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கீழக்கம்பலம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் காரில் சென்றார். தாமரச்சல் பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சிறுமியின் தந்தை அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு முகக்கவசம் மற்றும் தலைக் கவசம் அணிந்து வந்த அல்பின் தாமஸ்(வயது33) என்ற வாலிபர், காரில் தனியாக அமர்ந்திருந்த சிறுமியிடம் பொம்மை துப்பாக்கியை உண்மையான துப்பாக்கி போன்று காண்பித்து மிரட்டியுள்ளார்.
பயத்தில் சிறுமி அலறவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அதுபற்றி கடையில் இருந்து திரும்பிவந்த தந்தையிடம் சிறுமி தெரிவித்தார். அதுபற்றி அவர் போலீசில் புகார்செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராக காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து சிறுமியை மிரட்டிய அல்பின் தாமசை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
- சோதனையில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் நெக்கினி மலை கிராமம் அருகே உள்ள ஏரிக்கொள்ளை கிராமத்தில் வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்தி ருப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 40) என்பவரின் வீட்டில் சோதனை செய்த போது அங்கு உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகள் வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.
- விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
- பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பிரஜீஷ்(வயது36). விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு அவற்றிற்கு புல் அறுப்பதற்கு சென்ற போது, புலி அவரை அடித்துக் கொன்று சாப்பிட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விவசாயியை வேட்டையாடிய புலியை சுட்டுக்கொல்ல கேரள அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து விவசாயியை கொன்ற புலியை தேடும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விவசாயி கொல்லப்பட்ட பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் புலியை தேடினர். மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.
இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதனை தள்ளுபடி செய்தது. மனிதனை கொன்ற புலியை சுட்டுக்கொல்லுவது தவறு இல்லை என்று கருத்து கூறிய ஐகோர்ட்டு, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்நிலையில் விவசாயியை கொன்ற புலியை பிடிக்க 80 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். வனத்துறையைச் சேர்ந்த அவர்கள் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட இடங்க ளில் 5-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புலி சிக்குவதற்காக பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதனையும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி வருகின்றனர்.
- காவல்துறையினர், தங்களது துப்பாக்கி ஆயுதங்களை கீழே வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
- கடத்தப்பட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கையும், அவரது பாதுகாவலரையும் காவல்துறையினர் மீட்டனர்.
மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் பகுதியில் நேற்று ஆயுதங்களுடன் வந்த 200 பேர் கொண்ட கும்பல், போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கின் வீட்டை சூறையாடி, அவரையும் அவரது பாதுகாவலரை கடத்திச் சென்றுள்ளது.
இதனால் கோபமடைந்த காவல்துறையினர், இதனைக் கண்டித்து, தங்களது துப்பாக்கி ஆயுதங்களை கீழே வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் கடத்தப்பட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கையும், அவரது பாதுகாவலரையும் காவல்துறையினர் மீட்டனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீஸ், தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Firing incident at the residence of Addl SP, IW, Moirangthem Amit, MPS On 27th February, 2024. Armed miscreants numbering about 200 coming in vehicles stormed at the residence of the Additional Superintendent of Police, Shri Moirangthem Amit Singh, MPS, s/o Dr. M. Kulla Singh of…
— Manipur Police (@manipur_police) February 28, 2024
- உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஏட்டு ராம்குமார் சேதுபதி மற்றும் போலீசார் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக இதனை பதுக்கி வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'.
- துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
துப்பாக்கி' படத்தில் விஜய்யின் வாழைப்பழ காமெடி.. வைரலாகும் வீடியோ
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'. விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகவும் துப்பாக்கி அமைந்தது. விடுமுறையில் ஊருக்கு வரும் ராணுவ வீரன் மும்பை நகருக்குள் ஸ்லீப்பர் செல்களாக இயங்கும் தீவிரவாதிகளுடன் மோதும் கதைக்களத்தை கொண்ட இப்படம் எந்த இடத்திலும் லேக் ஆகாமல் விறுவிறுப்பாக செல்லும்.

விஜய்க்கும் கதாநாயகி காஜல் அகர்வாலுக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தியிருக்கும். சீரியஸான கதைக்களம் என்றாலும் விஜய்யின் சிறு சிறு மேனரிசம்களும் டயலாக்களும் அவ்வப்போது மெல்லிய சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் கிளாசிக் படமான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி செந்திலின் பல காமெடி காட்சிகள் டிரெண்ட்செட்டர்களாக மாறின. அதில் ஒன்று வாழைப்பழ காமெடி. பணம் கொடுத்து செந்திலை 2 வாழைப்பழம் வாங்கி வர சொல்வார் கவுண்டமணி. ஆனால் செந்தில் 2 பழத்தை வாங்கி அதில் ஒன்றை வரும் வழியிலேயே சாப்பிட்டு விடுவார். கவுண்டமணி 1 பழம் மட்டுமே இருப்பதை பார்த்துவிட்டு மற்றோரு பழம் எங்கே என கேட்பார். அதற்கு செந்தில் அது தான் அண்ணே இது என கூற அங்கு களேபரமே ஏற்பட்டுவிடும்.

தற்போது வெளியாகி உள்ள துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் இந்த காமெடியை கதைப்படி மும்பையில் தனது நண்பன் வேலை பார்க்கும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு ஹிந்தியில் மிமிக்கிரி செய்து சிரிக்க வைக்கிறார் ஜெக்தீஷ். அதாவது கதைப்படி ஜெக்தீஷாக நடிக்கும் விஜய். இந்த டேலிட்டட் காட்சிகள் வைரலான நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில் ஜூன் 22 விஜய் பிறந்தநாள் வர உள்ள நிலையில் ஜூன் 21 ஆம் தேதி துப்பாக்கி படம் ரீரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பெருமபாலானோரிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனராம்.
- துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து , தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் வேகமெடுத்து வரும் நிலையில் அவ்வப்போது பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் சட்டப்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என்று ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் மற்றொரு சாரார் தங்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி இன்றியமையாதது என்று கருதுகின்றனர். இந்த துப்பாக்கி விவாதம் அமெரிக்க அரசியலிலும் எதிரொலிக்காமலில்லை. இந்நிலையில் ஏற்பகுறைய அமேரிக்காவில் பெருமபாலானோரிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனராம்.

எனவே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதை போல துப்பாக்கிக் குண்டுகளை உடனுக்குடன் வெண்டிங் இயந்திரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி மாளிகைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து , தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏஐ தொழிநுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட இந்த இயந்திரத்தில் பாசில் ரெகக்னிஷன் மூலமும் வாடிக்கையாளர் தங்களின் அடையாளத்தை உறுதி செய்து பணம் செலுத்தி தோட்டாக்களை பெற்றுக்கொள்ளலாம்.


முதற்கட்டமாக டெக்சாஸ், அலபாமா மற்றும் ஒக்லாஹோமா ஆகிய மாகாணங்களில் உள்ள மளிகைக் கடைகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வசதியை மேலும் பல்வேறு மாகாணங்களுக்கு விரிவு படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இந்த ரைஃபிள்காளானது 1500 மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது ஆகும்.
- சுமார் ரூ.413 கோடி மதிப்புடைய துப்பாக்கி குண்டுகளும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவுள்ளன.
இந்தியாவில் இருந்து முதல் முதலாக ஸ்னைப்பர் ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்ய பெங்களூரைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனமான SSS DEFENCE நிறுவனம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி மிகப்பெரிய அளவில் .338 லாபுவா மேக்னம் கேலிபர் ரக துப்பாக்கிகள் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளன.
இந்த ரைஃபிள்காளானது 1500 மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது ஆகும். இதுமட்டுமின்றி சுமார் ரூ.413 கோடி மதிப்புடைய துப்பாக்கி குண்டுகளும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவுள்ளன. ஆயுத ஏற்றுமதி தற்போது தொடங்கியுள்ள நிலையில் மேலும் பல நாடுகளுடனும் பேசுவார்த்தை நடந்து வருகிறது.

முன்னதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பெங்களூருக்கு வந்து ஆயுதங்களை பரிசோதித்து அதன் திறனில் திருப்தி அடைத்துள்ளனர். சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிசைல்கள் வரை இந்திய இதுவரை இறக்குமதி மட்டுமே செய்து வந்த நிலையில் தற்போது ஏற்றுமதியும் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் பெருமிதம் தெரிவித்துள்ளன.
மேலும் .338 லாபுவா மேக்னம் கேலிபர் ரக துப்பாக்கிகளை சுமார் 30 நாடுகளுக்கும் மேல் அதிக அளவில் உபயோகித்து வருவதால், இந்தியாவில் ஆயுத வியாபாரம் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது ரஷியா சென்றுள்ள மோடி அதிபர் புதினுடன் இந்தியா- ரஷியாவின் ஒருங்கிணைந்த ஆயுத உற்பத்தி தொடர்பான பேசுவார்த்தையில் ஈடுபட்டு உடன்பாட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போருக்கு மத்தியில் நடந்த இந்த பேசுவார்த்தை சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் அஹிம்சயை உலகுக்கு சொல்லித் தந்த ஒரு தேசம், உயிர்களைக் கொள்ளும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது முரணான ஒன்றாக பார்க்கப்டுகிறது.

- பெற்றோர்கள் வெளியில் சென்று நிலையில் 16 வயது பெண் தனியாக இருந்துள்ளார்.
- பெண்ணை 5வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.
இந்தியத் தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டு கட்டிடத்தின் 5 வது மாடியில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகா நகரில் உள்ள குடியிருப்பில் கடந்த திங்கள்கிழமை பெற்றோர்கள் வெளியில் செல்லவே 16 வயது சிறுமி தனியாக இருந்துள்ளார்.
இதையறிந்து வீட்டின் உள்ளே நுழைந்த பக்கத்து வீட்டு நபர் சிறுமியை துப்பாக்கியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக பிடித்து அருகில் இருந்த கட்டடத்துக்கு அழைத்துசென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதனபின், சிறுமியை 5வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். கீழே விழுந்ததில் சிறுமியின் காலில் எலும்புமுறிவு ஏற்ப்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சம்பவம் தொடர்பாக பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்ற காவல்துறையினர் தப்பிசென்ற நபர் மீது வழக்குப் பதிந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் இந்த விபத்து நடந்துள்ளது.
- அவரது காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டது
பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது ரிவால்வர் துப்பாக்கியால் அவரது காலிலேயே தவறுத்தலாக சுட்டுக்கொண்டதால் குண்டடிபட்டு படுகாயம் அடைந்துள்ள்ளார். கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 6 மணி விமானம் ஏறுவதற்கு இன்று அதிகாலை 4.45 மணியளவில் மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
உடனே மருத்துமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கோவிந்தாவின் மேனேஜர் சசி சின்ஹா தெரிவித்துள்ளார்.
லைஸ்சன்ஸ் பெற்று கோவிந்தா வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்ததாக மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். 1990 களில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக கோவிந்தா வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலரை பைக்கில் வந்த இருவர் அவரை சுட முயன்றனர்.
- இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளனர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சுஷாந்தா கோஷை துப்பாக்கியால் சுடமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 15 அன்று இரவு 8 மணியளவில் சுஷாந்தா கோஷ் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் அவரை சுட முயன்றனர். ஆனால் அந்த சமயத்தில் துப்பாக்கி வேலை செய்யவில்லை.
இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக சுஷாந்தா கோஷும் உள்ளூர் மக்களும் சேர்ந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 2 செய்தித்தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முகமது இக்பால் என்ற நபர் தான் கோஷை கொலை செய்ய தன்னை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார்.
இந்த சமபவத்தில் பைக்கில் வந்து தப்பியோடிய இரண்டாவது நபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.