search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GUTKA GOODS SEIZURE"

    • 262 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காவல் சூப்பிரெண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். சோதனையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானாவில் இருச்சக்கர வாகனத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதற்காக ராஜகோபாலபுரம் பூங்கா நகரை ேசர்ந்த சண்முகலிங்கம் மகன் வசந்த்குமார் (வயது33) 262 கிலோ தடை செய்ய ப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்தார்.இதனை பார்த்த போலீசார் அவரை கைது செய்து, 262 கிலோ குட்கா பொருட்களையும், ரொக்கம் ரூ.1,180ம், இருசக்கர வாகனம் மற்றும் ஒரு மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், இவர் பெங்களூரி லிருந்து வாங்கி வந்து புதுக்கோட்டையில் சில்லரையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வசந்த்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதே போல் கீரனூரில் மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த சையது இப்ராகிம்(42), அரிமளம் அருகே வடக்கு நல்லிப்பட்டியில் மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த பாண்டித்துரை(60), ராயவரத்தில் வினாயகர் ஸ்டோரில் விற்பனை செய்த உலகப்பன்(40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அரிமளம் அருகே ஆயிங்குடியில் கண்ணன் டீ கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த கண்ணன் மனைவி காளியம்மாள் மீது போலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
    • புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (41)ராப்பூசல் சேர்ந்த பன்னீர்செல்வம் (48) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கிறார்கள்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இலுப்பூர் மேட்டு சாலை பகுதியில் தனியார் பேக்கரி முன்பாக நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்டதில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட 4.273 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை இலுப்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குட்கா கடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (41)ராப்பூசல் சேர்ந்த பன்னீர்செல்வம் (48) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தில் இருந்து இலுப்பூர் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    ×