search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hackathon 2018. மத்திய அரசு"

    மத்திய அரசு நடத்திய ‘ஹேக்கத்தான்’ போட்டியில் சென்னையை சேர்ந்த கே.சி.ஜே. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது.
    பிலானி:

    இளம் தலைமுறையினரிடையே படைப்பாற்றலை உருவாக்கவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2018’ என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப திறன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே முதல்கட்ட போட்டிகள் முடிந்த நிலையில், 2-ம் கட்ட இறுதிச்சுற்று போட்டிகள், நாடு முழுவதும் 10 மையங்களில் நடைபெற்றன. ஒவ்வொரு மையத்திலும் பங்கேற்ற மாணவர்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.

    இதில், ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில்-மத்திய மின்னியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.-சிஇஇஆர்ஐ) நடைபெற்ற இறுதி போட்டியில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த கே.சி.ஜே. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. அவர்கள் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு வாழ்க்கையை எளிதாக்க உதவும் சாதனத்தை உருவாக்கி உள்ளனர். அதற்காக அவர்கள் முதல் பரிசு பெற்றனர். பெங்களூரு மாணவர்களுக்கு 2-ம் பரிசு கிடைத்தது. 
    ×