என் மலர்
நீங்கள் தேடியது "Harassment case"
- நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
- சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும், அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.
அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அலகாபாத் நீதிபதி வழங்கிய சர்ச்சை தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறியதாவது:-
போதிய sensitivity இல்லாமல் எழுதப்பட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.
நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.
இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய சம்பவம். உணர்ச்சியற்ற மனநிலையில் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கி உள்ளதை இது காட்டுகிறது. தீர்ப்பை எழுதியவருக்கு உணர்ச்சியே இல்லை. இதை சொல்வதற்கு எங்களுக்கு வேதனையாக உள்ளது.
சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது. அலகாபாத் நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துகிறோம் என்று கூறினர்.
- கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- கடந்த சனிக்கிழமை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).
இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.
இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவானார்.
இந்நிலையில் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட புவியியல் பேராசிரியரை 72 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
- இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
- ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.
திருவனந்தபுரம்:
'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் ஏராளமானோர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதன் மூலம் பலர் பிரபலமாகி விடுகிறார்கள்.
அப்படி பிரபலமான ஒரு வாலிபர், தன்னுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஹபீஸ் சஜீவ். இவர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் கேரளாவில் பிரபலமான நபராக அவர் மாறினார். இந்தநிலையில் அவருக்கு ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண் ஹபீஸ் சஜீவுடன் நட்பாக பழகினார். இதனைத்தொடர்ந்து இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதன் காரணமாக அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. ஹபீஸ் சஜீவ் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.
அங்கு வைத்து தான் 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பாராம், அந்த வீட்டுக்கு இளம்பெண்னை வரவழைத்த ஹபீஸ் சஜீவ் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்துள்ளார். அந்த வீட்டில் வைத்து இளம்பெண்ணை ஹபீஸ் சஜீவ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
திருமணம் செய்வதாக கூறி அவர் பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஹபீஸ் சஜீவ் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹபீஸ் சஜீவ் மீது ஆலப்புழா தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு ஹபீஸ் சஜீவை கைது செய்தனர். அவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 69 (துணிச்சலான வழிகளை பயன்படுத்தி உடலுறவு கொள்ளுதல்), 74 (பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் பெண்ணை தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தை பயன்படுத்துதல் )ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரீல்ஸ் வீடியோ எடுக்க பயன்படுத்திய பெண்ணை வாலிபர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எல்தோஸ் குன்னப்பிள்ளை மீது ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் கூறியது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புகாரின் பேரில் கடந்த 22-ந் தேதி எல்தோஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எல்தோஸ் குன்னப்பிள்ளை.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் மீது ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் கூறியது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் கடந்த 22-ந் தேதி எல்தோஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவுப்படி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என போலீஸ் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில் புகார் கூறிய ஆசிரியையை, எல்தோஸ் எம்.எல்.ஏ. தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணை, அவமரியாதை செய்ததாகவும் போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் எல்தோஸ் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கேரள நீர்பாசன துறை மந்திரியின் முதன்மை செயலாளரின் கார் டிரைவர் சந்தோஷ் என்பவர் தான் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் என தெரியவந்தது.
- பெண் டாக்டர் அடையாளம் காட்டியதை தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மியூசியம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் டாக்டர் ஒருவர் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி அந்த பெண் டாக்டர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கேரள நீர்பாசன துறை மந்திரியின் முதன்மை செயலாளரின் கார் டிரைவர் சந்தோஷ் என்பவர் தான் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் என தெரியவந்தது. அவரை பெண் டாக்டர் அடையாளம் காட்டியதை தொடர்ந்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது வேறு சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தலைமறைவாக உள்ள சபரியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
- வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி, அந்த நபரிடம் பேசியுள்ளார்.
இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சபரியுடன் பேசுவை நிறுத்தி விடு, இல்லையென்றால் கல்லூரி படிப்பு பாதிக்கப்படும் என பெற்றோர் மகளுக்கு அறிவுரை கூறினர். இதன் பிறகு சபரியுடன் பேசுவதை மாணவி நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். இதில் போலீசாருக்கு பகீர் தகவல் கிடைத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரி, அந்த மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது என்னை காதலிக்க வேண்டும். இல்லையென்றால் நீ என்னுடன் பேசி பழகிய படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும், மாணவியின் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் சத்தம் போடுவார்கள் என பயந்தார். மனம் உடைந்த மாணவி ஒரு கட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்த சபரி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் துரிதமாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக சபரி முயற்சித்து வருகிறார். போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
தலைமறைவாக உள்ள அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
- மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார்.
- வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார்.
இரணியல்:
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.
கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்சில் வந்தார். ஊரிலிருந்து பஸ்சில் வடசேரிக்கு வந்த போது பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார். இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர். அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.
உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவி கடந்த சில நாட்களாக வாலிபர் சியாஹியுடனான பழக்கத்தை குறைத்து கொண்டார்.
- மாணவி வேறு ஒருவரை காதலிக்கிறார் என எண்ணிய சியாஹி, மாணவியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டினார்.
குழித்துறை:
குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சியாஹி (வயது 22).
சியாஹிக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருடன் சியாஹிக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் மாணவியும், வாலிபரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இந்த நிலையில் அந்த மாணவி கடந்த சில நாட்களாக வாலிபர் சியாஹியுடனான பழக்கத்தை குறைத்து கொண்டார். இதனால் மாணவி வேறு ஒருவரை காதலிக்கிறார் என எண்ணிய சியாஹி, மாணவியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டினார்.
இதனால் பயந்து போன மாணவி, வாலிபர் சியாஹியிடம் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தந்து விடும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் குழித்துறை பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற மாணவிக்கு சியாஹி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது பற்றி மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சியாஹி மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
இதுபற்றி தெரியவந்ததும் சியாஹி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.பரிந்துரை செய்துள்ளார்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அம்பலவயல் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர், தன்னை 2 பேர் ஊட்டிக்கு கடத்தி சென்று லாட்ஜில் அடைத்து பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார்.
சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அம்பலவயல் போலீசார் சிறுமியை தொடர்பு கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஊட்டிக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துள்ளனர். சிறுமியும் வந்தார்.
பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபின், சப்-இன்ஸ்பெக்டர் பாபு, பெண் போலீஸ் பிரஷி ஆகியோர் சிறுமியை அழைத்து கொண்டு போலீஸ் வாகனத்தில் ஊட்டிக்கு வந்தனர்.
ஊட்டியில் சிறுமி சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட லாட்ஜூக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் அம்பலவயல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
செல்லும் வழியில் வாகனம் ஒரு இடத்தில் திடீரென நிறுத்தப்பட்டது.
அப்போது ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீசார் இறங்கி வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது. ஜீப்பில் சிறுமியும், சப்-இன்ஸ்பெக்டர் பாபுவும் மட்டும் தனியாக இருந்தனர்.
அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தொடக்கூடாத இடங்களில் தொட்டதுடன், அதனை தனது செல்போனில் புகைப்படமும் எடுத்து வைத்து கொண்டார். இதனை அவர்களுடன் வந்த இன்ஸ்பெக்டரோ, பெண் போலீசோ கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.
இதனால் மன வேதனை அடைந்த சிறுமி சம்பவம் குறித்து கண்ணூர் டி.ஐ.ஜி ராகுல் ஆர்.நாயரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனை இன்ஸ்பெக்டர் கண்டு கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாபுவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.பரிந்துரை செய்துள்ளார்.
- முடிவெட்ட சென்ற 3¾ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனை கைது செய்தனர்.
- மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த 32 வயது பெண். இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், 3¾ வயதில் ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.
சம்பவத்தன்று நான் எனது மகன், மகளுக்கு முடி வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்து சென்றேன். அங்கு கிணத்துக்கடவு லட்சுமி நகரை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மணிகண்டன் (வயது 53) என்பவர் முடி வெட்டிக்கொண்டு இருந்தார்.
முதலில் எனது மகனுக்கு முடி வெட்டினார். பின்னர் எனது மகளுக்கு மணிகண்டன் முடி வெட்டினார். அப்போது நான் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றேன். அப்போது மணிகண்டன் எனது மகளுக்கு தொல்லை கொடுத்தார். நான் திரும்பி வந்து பார்த்த போது எனது மகள் அழுது கொண்டு இருந்தாள். நான் என்ன என்று கேட்டபோது மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.
எனவே எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் முடிவெட்ட சென்ற 3¾ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ஆசிரியர் தொடர்ந்து தொல்லை கொடுத்த காரணத்தால் மாணவி ஆசிரியரிடம் எதையோ சொல்லி சமாளிக்க முயல்கிறார்.
- செல்போன் ஆடியோவை மாணவி தனது பெற்றோர் மூலம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் உள்ளூர் மற்றும், வெளியூரில் இருந்து மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவிகளுக்கு விடுதி வசதியும் உள்ளது.
இந்த நிலையில் அந்த கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசுகிறார்.
அதில், உன் மீது புகார் வந்துள்ளது. உன்னிடம் விசாரணை நடத்த வேண்டும். அதனால் எனது வீட்டிற்கு வரவேண்டும் என செல்போனில் கூறுகிறார். அதற்கு அந்த மாணவி, நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறுகிறார்.
அதற்கு அந்த ஆசிரியர், வீட்டிற்குத்தான் வரவேண்டும் என கட்டாயப்படுத்தி அழைப்பு விடுக்கிறார். ஆசிரியர் தொடர்ந்து தொல்லை கொடுத்த காரணத்தால் அந்த மாணவி ஆசிரியரிடம் எதையோ சொல்லி சமாளிக்க முயல்கிறார்.
ஆனால் அந்த ஆசிரியர் விடாமல் அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுப்பது போல பேசி தனது வீட்டிற்கு அழைக்கும் செல்போன் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த செல்போன் ஆடியோவை மாணவி தனது பெற்றோர் மூலம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் அருண்தம்புராஜ் சம்மந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை நடத்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலர் தமிமுன்சா தலைமையில் சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு வந்தனர்.
அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கினர். சுமார் 1 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் சமூகலநத்துறை அதிகாரிகள் கல்லூரியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
மாணவிகளிடம் பெறப்பட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். அதே நேரத்தில் விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்பிக்கப்படும். அதன் பின்னர் இது தொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நாகை தனியார் நர்சிங் கல்லூரி ஆசிரியர், அங்கு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போல செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார்.
- அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
பாலியல் சீண்டல், தொல்லைகளில் இருந்து பெண்களை, குழந்தைகளை, மாணவிகளை பாதுகாப்பது என்பது தற்போது பெரும் சவாலாகவே மாறியுள்ளது. பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம் என அனைத்திலும் வியாபித்துள்ள இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு எந்திரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தினமும் ஆங்காங்கே அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேறத் தான் செய்கிறது. அப்படி ஒரு கொடுமை நாகையிலும் நடந்துள்ளது.
நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறு இயல் ஆசிரியராக பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த உரையாடல் விபரம் வருமாறு:-
ஆசிரியர்: ஹலோ, நான் பேசுறது கேட்குதா?
ஆசிரியர்: நீ என் வீட்டுக்கு வா...
மாணவி: இல்ல சார், என்னால வர முடியாது. எனக்கு மென்சஸ் சார், வலி அதிகமா இருக்கு
ஆசிரியர்: பரவாயில்ல வா, நான் பாத்துக்கிறேன், இன்னிக்கு எத்தனாவது நாள்
ஆசிரியர்: வாடா தங்கம், என்ன புரிஞ்சிக்க மாட்டியா. ஒண்ணும் பிரச்சினையில்ல வா...
மாணவி: இந்த ஒரு தடவ என்ன மன்னிச்சு விட்ருங்க சார், இனி என்மேல எந்த புகாரும் வராம பாத்துக்கிறேன் சார்.
ஆசிரியர்: பிரச்சினை பெரிசாயிக்கிட்டே இருக்கு, அதனாலதான் உன்ன கூப்பிட்டு வார்ன் பண்ண வீட்டுக்கு கூப்பிடுறேன், வா
மாணவி: (அழுது கொண்டே) இல்ல சார், எனக்கு பயமா இருக்கு
ஆசிரியர்: என்னடா பயம், அழாத உடனே கிளம்பி வா...
மாணவி: இந்த பிரச்சினையை இதோட விட்ருங்க சார்
இவ்வாறு உரையாடல் நீளுகிறது.
இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளை அருகில் அழைத்து தொடுவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த வகையில்தான் எல்லை மீறிய ஆசிரியர் சதீஷ், மாணவியை வலுக்கட்டாயமாகவும், மிரட்டும் தொணியிலும் தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பது, அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயபடுத்துவதுமான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லியும், அதனை புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார். அப்போது அங்கு புகார் கூறப்பட்ட ஆசிரியர் சதீஷ் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆசிரியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த புகார் கலெக்டர் அருண்தம்புராஜூக்கு சென்ற நிலையில் சமூக நலத்துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர். அதனை கலெக்டரிடமும் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து நாகை டவுன் போலீசார் பாலியல் சீண்டல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த ஆசிரியர் சதீஷ் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதற்குள் தனது காம லீலைகளை மாணவிகளிடம் வக்கிரத்துடன் காட்டி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.