search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hariyana"

    அரியானா மாநிலம் ரெவாரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்ட ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். #RewariGangRape
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் சி.பி.எஸ்.இ. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம்  விருது பெற்றவர்.

    அவர், கடந்த 15-ம் தேதி சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது வழிமறித்த மூன்று வாலிபர்கள் ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அங்கு வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை  பலாத்காரம் செய்துள்ளனர்.

    அப்போது அந்த பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். 

    இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து விழிப்படைந்த காவல்துறை குற்றவாளிகளை தேடும் பணியில் இறங்கியது. பங்கஜ், மணிஷ், நிஷ்ஷு ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இதில் பங்கஜ் என்ற முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் என தெரியவந்து உள்ளது.  

    இதனை அடுத்து, நிஷ்ஷு மற்றும் அவருக்கு உதவி செய்ததாக சஞ்சிவ் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பங்கஜ் மற்றும் மணிஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர். 
    ஜம்மு காஷ்மீர், பீகார், அரியானா, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #Governors #PresidentKovind
    புதுடெல்லி:

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நரிந்தர்நாத் வோஹ்ரா கவர்னராக இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டே வந்தது. சமீபத்தில் அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இதனால், வோஹ்ரா கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

    பீகார் மாநிலத்தின் கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக முன்னாள் எம்.பி லால் ஜி டாண்டன் பீகாரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா கவர்னராக இருந்த கங்கா பிரசாத் சிக்கிம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திரிபுரா கவர்னராக இருந்த டதாகடா ராய் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக இருந்த காப்தன் சிங் சோலாங்கி திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக சத்யதேவ் நாராயன் ஆர்யா, உத்தரகாண்ட் மாநில கவர்னராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டுள்ளனர். 
    சமீபத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய ஷு டாக்டர் நர்ஸி ராமின், மேலாண்மை திறனை கண்டு வியந்த ஆனந்த் மஹிந்திரா புது கடையை அமைத்து கொடுத்துள்ளார். #AnandMahindra
    சண்டிகர்:

    சமீபத்தில் அரியானாவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கும் இந்த படம் வந்திருந்தது. இந்த படத்தை பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியத்தில் மூழ்கினார். காரணம், அந்த புகைப்படத்தில் தொழிலாளி  அவரின் கடையில் எழுதியிருந்த வசனம்.

    ‘செருப்புகளின் காயங்களை போக்கும் மருத்துவமனை .. டாக்டர் நர்ஸி ராம்’. இதை பார்த்த ஆனந்த் இந்தப் படத்தில் இருக்கும் தொழிலாளி இந்திய மேலாண்மை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டு,  அவரின் முழு விவரம் குறித்து யாருக்கேனும் தெரிந்திருந்தால் தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.



    சில மாத தேடலுக்கு பின்னர் செருப்பு தொழிலாளி நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.பின்பு அவர்கள் நரசிம்மனிடம்  பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ  உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பணியிடத்தின் வடிவமைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவியதற்காக பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
    ×