search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haryana woman IAS officer"

    அரியானா மாநிலத்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தன்னை பலவந்தப்படுத்த முயற்சித்ததாக தலைமை செயலாளர் மீது புகார் கூறியுள்ளார்.
    சண்டிகார்:

    அரியானா மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வாகி அரியானா மாநில ஒதுக்கீட்டில் அதிகாரி ஆனார்.

    இவர், அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலாளர் மீது செக்ஸ் புகார் கூறி உள்ளார். இது சம்பந்தமாக அவர் ஜனாதிபதி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பி உள்ளார்.

    மேலும் இந்த புகார் பற்றிய விவரங்களை சமூக வலைத்தளம் மூலமும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அந்த அதிகாரி எவ்வாரெல்லாம் செக்ஸ் தொல்லை கொடுத்தார் என்ற விவரங்கள் உள்ளன. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மே 22-ந்தேதி நான் அனுப்பிய கோப்பில் சில எதிர்ப்பு கருத்துக்களை குறிப்பிட்டு இருந்தது பற்றி கூடுதல் தலைமை செயலாளர் என்னை அழைத்து மிரட்டல் விடுத்தார்.

    அப்போது செக்ஸ் ரீதியாக தனக்கு உடன்படவில்லை என்றால் வேறு இடத்துக்கு மாற்றம் செய்து விடுவேன் என்று கூறினார். மேலும் வருடாந்திர ரகசிய குறிப்பில் (ஏ.சி.ஆர்.) உன்னை பற்றி மோசமாக எழுதி உனது வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன் என்று கூறினார்.

    ரோக்தக்கில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் கலந்து கொண்ட கூடுதல் தலைமை செயலாளர் சம்பந்தமே இல்லாமல் என்னை கட்டாயப்படுத்தி தன்னுடன் நிகழ்ச்சிக்கு வருமாறு கூறினார்.

    கடந்த 6-ந்தேதி தனது அறைக்கு அழைத்து மாலை 7.39 மணி வரை கட்டாயமாக அமர வைத்தார். நான் அவரது மேஜைக்கு எதிர்த்த நாற்காலியில் அமர்ந்திருந்தேன். என்னை தன் அருகே வந்து அமரும்படி கூறினார். நான் அவர் அருகே சென்றேன். எனக்கு கம்ப்யூட்டர் சொல்லி கொடுப்பது போல் பாசாங்கு செய்து தவறாக நடக்க முயன்றார். கோப்பில் உள்ள பேப்பர்களை என் அருகே போட்டு விட்டு எடுப்பது போல் நடித்து தவறான செயலில் ஈடுபட்டார்.

    அவரது செயல்பாடுகள் பற்றி நான் மற்ற உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த போது அவர்களும் என்னை மிரட்டுவது போல் நடந்து கொண்டார்கள். எனது மூத்த பெண் அதிகாரி ஒருவர் எனக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விலக்கி விடுவோம் என்று மிரட்டினார்.

    இவ்வாறு அந்த பெண் அதிகாரி புகாரில் கூறி உள்ளார்.
    ×