என் மலர்
நீங்கள் தேடியது "heavy fog"
- எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்
- வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது கடந்த இரு தினங்களாக மழை இல்லாமல் லேசான பனிபொழிவு காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சுமார் 10 மீட்டர் தொலைவில் உள்ள வாகனங்கள் கூட சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி இயக்கி செல்கின்றனர்.
இதனால் நெடுஞ்சாலையில் அதிக அளவில் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி கோத்தகிரியில் மூடுபனியுடன் சாரல் மழை பெய்ததால் குளிா்ந்த காலநிலை நிலவி வருகிறது. சாலைகளில் அடா்ந்த பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.ஊட்டி மற்றும் கோத்தகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மாலை முதல் மூடு பனியும், சாரல் மழையும் காணப்பட்டது. ஊட்டி நகரம், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடா்ந்த மூடுபனி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
- டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
- கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 விமானங்கள் தாமதமாக சென்றன.
புதுடெல்லி:
வட மாநிலங்களில் குளிர் காலங்களில் வழக்கமாக அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து 9-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் தற்போது குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு வரும் 15-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச அளவில் பதிவாகி உள்ள நிலையில், டெல்லி அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 விமானங்கள் தாமதமாக சென்றன.
- வாகன ஓட்டிகள் சிரமம்
- சாலைகளை சீரமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இரவு முதல் குளிர்ந்த காற்று வீசியது. இன்று அதிகாலை முதல் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான பனிபொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேபோல் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றன.
சேரும் சகதியுமான சாலைகள்
காட்பாடி பாரதி நகர், வி.ஜி.ராவ் நகர், வேலூர் வேலப்பாடி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. இதனால் தற்போது மழையின் காரணமாக சாலைகள் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கிக் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்த கூட செல்ல முடியாத அளவு சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.
பணிகள் முடிவடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மலைப்பாதைகளில் காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
- தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நீர்ப்பனி காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன்படி சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் மழை பெய்கிறது.
இதனால் ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலை மற்றும் ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா செல்லும் மலைப்பாதைகளில் காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் மலைப்பாதையில் செல்லும் சுற்றுலா வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலும் தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிந்தது.
ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் காலைமுதலே சாரல் மழை மற்றும் மேகமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. இதனால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்களின் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கொலக்கம்பை ஆகிய பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் கடும் குளிரும் நிலவிதால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிர்கால ஆடைகள் அணிந்து வெளியிடங்களுக்கு சென்று வந்தனர்.
அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் குளிர் அதிகளவில் இருந்ததால் தொழிலாளர்கள் மாலை 4 மணிக்கே அந்த பகுதியில் தீமூட்டி உடலை கதகதப்பாக வைத்துக்கொண்டனர்.
மேலும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதால்மலை மாவட்டத்திலும் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
- விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
- பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விமான பயணிகள் மற்றும் ரெயில் பயணிகள் கடந்த சில நாட்களாகவே கடும் கவதி அடைந்து வருகிறார்கள்.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 564 விமானங்கள் தாமதமாக வந்து தரையிறங்கின. மேலும் 95 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் டெல்லி யில் இன்றும் கடும் பனி மூட்டம் நீடித்தது. இதன் காரணமாக இன்றும் விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக் கப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணிவரை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக டெல்லிக்கு வந்தன.
- சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
- சாரல் மழை பெய்த நேரங்களில் மட்டும் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலில் தினந்தோறும் சீதோஷ்ண நிலை மாறி வரக்கூடிய நிலையில் டிசம்பர் 2-வது வாரத்தில் இருந்து பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் உறை பனியுடன் கூடிய கடுங்குளிரும் நிலவும். ஆனால் இந்த ஆண்டில் சீதோஷ்ண நிலை முற்றிலுமாக மாறுபட்டுள்ளது.
இந்நிலையில் பகல் நேரங்களில் கடுங்குளிர் நிலவிவரக்கூடிய நிலையில் அவ்வப்போது சாரல் மழையும், கடும் பனிமூட்டமும் காணப்படுகிறது. நேற்று இரவு முதல் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நகர் பகுதிகளான ஏரிச்சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் மற்றும் அனைத்து மலைச்சாலைகளிலும் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
மேலும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
ஏரி சாலையில் இன்றும் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பனிமூட்டத்திற்கிடையே படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்த நேரங்களில் மட்டும் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை தொடங்கிய மிதமான மழை இன்று பலத்த மழையாக பெய்து வருகிறது.
விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் அதிகமாக விடுதிகளில் நிரம்பி வழிந்த நிலையிலும் விடாது கொட்டும் மழையினால் சுற்றுலா இடங்களை காண முடியாமல் தங்கள் அறையிலேயே முடங்கினர்.
பழனியிலும் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் காணப்பட்டது. அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. இந்நிலையில் நேற்று மாலை சாரல் மழையாக பெய்து பின்னர் கன மழையாக கொட்டித் தீர்த்தது.
பழனியை நோக்கி தற்போது பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் தங்கள் பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஆங்காங்கு உள்ள மண்டபங்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர்.
நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பெய்த மழையினால் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை பக்தர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். ஒரு சில இடங்களில் ஒதுங்க இடமில்லாமல் ஆங்காங்கு கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. சிறுமலை, அடியனூத்து மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
- எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
- சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் குறைந்து காணப்பட்டது. மதிய நேரத்தில் குளிர் குறைந்து வெயில் காணப்பட்டது. ஆனால் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பனிமூட்டத்தால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக வழக்கமான நேர அட்டவணையைக் காட்டிலும் 15 நிமிடம் வரை தாமதமாக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மழை பெய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை மட்டுமே கைகொடுத்து வந்துள்ளது. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த விவசாயிகள், மழை பொய்த்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பருவமழை காலங்களில் பனி பொழிந்தால், மழை குறைந்துவிடும். சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. பருவம் தவறி மழை பெய்தாலும் நிலத்தடி நீராவது பெறுகும்.
பருவம் தப்பினால் புயல் சின்னம் உருவானால் மட்டுமே மழை பெய்யும். பனி குறைந்து மழை பெய்ய வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதம் சராசரி மழை பெய்யாததால், மானாவாரி பயிர் சாகுபடியும், மகசூலும் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் விவசாயம் இல்லாமல், கடன் வாங்கியதை திருப்பி கொடுக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மானாவாரி பயிருக்கு 10 நாட்களுக்கு இடைவெளியில் மழை பெய்தால் மட்டுமே, மகசூல் கிடைக்கும். கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு தவிர்க்கப்படும். குறிப்பாக ராமேசுவரம் தீவு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் மாவட்ட முழுவதும் பரவலாக சராசரி மழை கிடைக்கவில்லை.
சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு உள்ளதால், இனியும் மழை பெய்யுமா என்ற கேள்விக்குறியுடன் விவசாயிகள் வருணபகவானின் கருணைக்கு காத்து இருக்கின்றனர்.