search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy rain issue"

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளது. இது தமிழகத்தை நோக்கி புயலாக மாறுமா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தகவல் தெரிவித்தார். #NortheastMonsoon #Rain
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் கடந்த மாதம் உருவான ‘கஜா’ புயலால், டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்தன. தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது.

    இது வலுப்பெற்று வருகிற 12-ந்தேதி புயலாக மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் 13-ந்தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை நோக்கி நகரும் என்றும், 16-ந்தேதி மதியம் சென்னைக்கும்-விசாகப்பட்டினத்துக்கும் இடையே நெல்லூரில் புயல் கரையை கடக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

    இவ்வாறு புதிய புயல் உருவாக்கும் பட்சத்தில் அந்த புயலுக்கு தாய்லாந்து நாடு ‘பெய்ட்டி’ என்று பெயர் சூட்டி இருக்கிறது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.பாலச்சந்திரனிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-



    இந்திய பெருங்கடலை ஓட்டி உள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மத்திய பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மதியம் 5.30 மணி நிலவரப்படி(நேற்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.

    இது அடுத்த 48 மணி நேரத்தில் (12-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே, அது புயலாக மாறுமா? என்பது தான் தெரிய வரும். தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் பட்சத்தில் 12-ந்தேதி முதல் சென்னை உள்பட வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. #NortheastMonsoon #Rain
    தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. #chennairain #schoolholiday
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சமீபத்தில் ‘கஜா’ புயல் டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் நல்ல மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த 18-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும், தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 23-ந்தேதி வரை(இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது.

    சென்னையின் முக்கிய இடமான கோடம்பாக்கம், சென்ட்ரல், எழும்பூர், அடையாறு, தரமண உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.

    இதுபோல் தாம்பரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

    மேலும் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் எனவும், வட தமிழகத்தில், அதாவது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.

    தொடர் மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதுபோல காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்ததந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

    மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. #chennairain #schoolholiday
    தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருப்பதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.#chennairain #schoolholiday
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சமீபத்தில் ‘கஜா’ புயல் டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் நல்ல மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த 18-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும், தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-



    வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 23-ந்தேதி வரை(இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.

    அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். வட தமிழகத்தில், அதாவது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்றும்) மழை தொடரும்.

    காற்றின் வேகம் அதிகமாகி மேகக்கூட்டங்கள் கலைந்து சென்ற காரணத்தினால் வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை. அது தற்போது வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து தமிழக பகுதிகளில் மெதுவாக நகரும்.

    வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் வழியாக உள்ளே வந்து, உள் தமிழகத்தில் கடந்து செல்ல இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 22-ந்தேதி (இன்று) பரவலாகவும், 23-ந்தேதி (நாளை) மிதமாகவும் மழை பெய்யும். கஜா புயல்-2 என்று வரும் தகவல் புரளி. கஜா-2, கஜா-3 என்று எதுவும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்தது. வீராணம், வாலாஜா, பெருமாள் ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கனமழை எச்சரிக்கையால் கடலூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. விழுப்புரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. கனமழை எச்சரிக்கையால் இரு மாவட்டங்களிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

    தொடர் மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை(இன்று) மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுபோல காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்ததந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

    புதுச்சேரியிலும் மழை பெய்தது. மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    காரைக்கால்(புதுச்சேரி), தரங்கம்பாடி தலா 7 செ.மீ., வேதாரண்யம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, வலங்கைமான், அதிராம்பட்டினம், சென்னை விமானநிலையம், கும்பகோணம், செம்பரம்பாக்கம் தலா 5 செ.மீ., திருவாரூர், ஆணைக்காரன்சத்திரம், மதுராந்தகம், சீர்காழி, மாமல்லபுரம், திண்டிவனம், மரக்காணம் தலா 4 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

    நன்னிலம், தக்கலை, காட்டுமன்னார் கோவில், சத்யபாமா பல்கலைக்கழகம், ராமேசுவரம், பெருங்களூர், பூந்தமல்லி, தாம்பரம், செங்குன்றம், தரமணி, நாகப்பட்டினம், ஜெயம்கொண்டம், புழல், கேளம்பாக்கம், கடவூர், மணிமுத்தாறு, கே.வி.கே. காட்டுக்குப்பம், மதுக்கூர், தாமரைப்பாக்கம், செங்கல்பட்டு, மாதவரம், மயிலம் தலா 3 செ.மீ., காஞ்சீபுரம், இரணியல், நுங்கம்பாக்கம், ஒரத்தநாடு, திருப்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பாபநாசம்(தஞ்சாவூர்), செங்கோட்டை, சோழவரம், பரமக்குடி, திருத்துறைப்பூண்டி, திருமயம், உத்திரமேரூர், மன்னார்குடி, செய்யூர், மயிலாடுதுறை, ஆடுதுறை தலா 2 செ.மீ. உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து உள்ளது.
    தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். #chennairain #schoolholiday
    சென்னை:

    சென்னையில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. இன்றிரவு கனமழை பெய்யும் என்று வானிமை மையம் அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் இரண்டு மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

    இதனால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதேபோல் திருவாரூர், நாகை விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #chennairain #schoolholiday
    ×