search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy wind"

    • கடமலை, மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • லேசான காற்றுக்கே மின்வினியோகம் தடைபட்டு விடுகிறது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 3 நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கின்றன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களை உள்ளடக்கி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

    கடமலைக்குண்டு துணைமின்நிலையத்தில் இருந்து மேற்படி கிரா மங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணி என்ற பெயரில் மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பா ர்மர், மின்கம்பிகளில் ஏற்பட்டுள்ள பழுதை அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர்.

    இருந்தபோதும் முறை யான பராமரிப்பு இல்லாத தால் லேசான காற்றுக்கே மின்வினியோகம் தடைபட்டு விடுகிறது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 3 நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கின்றன. அவ்வப்போது விட்டுவிட்டு மின்தடை ஏற்படும் போது ஊழியர்கள் அதனை சரிசெய்து விடுகின்றனர்.

    ஆனால் இரவு 7 மணிக்குமேல் மின்தடை ஏற்பட்டால் ஊழியர்கள் வருவதில்லை. இதன் காரணமாக 3 நாட்களாக அனைத்து கிராமங்களும் இருளில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காலையில் விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடி யாமலும், கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியா மலும் விவசாயிகள் சிரமம் அடைந்து வரு கின்றனர்.

    எனவே மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் இருபோக நெல் விவசாயமும், மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடலை, தட்டைபயறு, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும் தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை உள்பட பணப்பயிர் வகைகளும் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.

    கடந்த சில வருடங்களாக கூடலூர் பகுதியில் தென்னை மரங்களை அழித்துவிட்டு அதிகளவில் ஒட்டு ரக திசு வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக செவ்வாழை, நாழிபூவன், ரஸ்தாலி, பச்சை பழம் வகைகளை பயிரிட்டுள்ளனர். வாழை மரங்களில் தார்கள் நன்கு விளைந்து உள்ள நிலையில் தற்போது எதிர்பாராமல் பலத்த சூறவாளிகாற்று வீசியதால் கூடலூர் பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களில் வாழை மரங்கள் முறிந்து தார்களுடன் கீழே விழுந்துள்ளது. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    ×