search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helmets"

    • மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் உள்ளனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் பொருட்கள் வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் செல்கின்றனர். இதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மயிலாடுதுறை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகன் மற்றும் போலீசார் கிட்டப்பா அங்காடி பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.

    அப்போது விளம்பர வாகனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களையும் போக்குவரத்து போலீசார் வழங்கி கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் உத்தரவின்படி அதிராம்பட்டினம் இராஜமடம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் கடற்கரை சாலையில் ஜார்ஜ்ராஜ், குணசேகரன், ஐயப்பன், விமல், மதி ஆகிய போலீசார் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்ட விடக்கூடாது என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.

    • புதுவை - கடலூர் சாலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
    • போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை - கடலூர் சாலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இதனால் தினந்தோறும் சாலை விபத்துகளில் பலர் காயமடைந்தும், உறுப்புகளையும், உயிரையும் இழந்து வருகின்றனர். இந்நிலையில், குண்டும் குழியுமான சாலையை செப்பனிட தவறிய புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், ஆட்சியாளர்களை கண்டித்தும், அவர்களின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு பெருமாள் கண்டன உரையாற்றினார். மாநில குழு கலியன், கொம்யூன் குழு வடிவேலு, கவுசிகன் கன்னியக்கோவில் கிளை செயலாளர் வீரப்பன், வெங்கடேசன், சண்முகம், கல்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், புதுவை-கடலூர் சாலை மற்றும் பாகூர் கொம்யூனுக்கு உட்பட சாலைகள் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குண்டும் குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். சாலையில் சீரமைக்கப்படாமல் இரு சக்கர வாகனத்தில் வருப வர்களிடம் ஹெல்மெட் கட்டாயம் என்று அபராதம் விதிப்பது ஏன்?

    குண்டும், குழியுமான சாலையால், வாகன ஓட்டிகளுக்கு, உடல் நலக் கோளாறு, விபத்து ஏற்படுகிறது.

    இதற்கு காரணமான புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி புகார் மனுவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோரிடம் அளித்தனர்.

    ஹெல்மெட் அணியாததால் வாகன விபத்துக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதம் குறித்து நாமக்கல்லில் ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    நாமக்கல்:

    ஹெல்மெட் அணியாததால் வாகன விபத்துக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் நாமக்கல் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில் மற்றும் சுஜாதா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நாமக்கல்லில் ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மணிக்கூண்டு அருகே தொடங்கிய ஊர்வலம் பரமத்தி ரோடு, கோட்டை ரோடு, சேலம் ரோடு, கடைவீதி உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நாமக்கல் பஸ் நிலையம் வந்தடைந்தது.

    இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர். அதில் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விபத்துக்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்ட வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஹெல்மெட் அணிந்தபடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். #Hyderabad
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஓஸ்மானியா என்ற மிகப்பழமையான மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும், அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மீதும் விழுந்து காயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மேற்கூரை இடிந்து விழுந்து காயம் ஏற்படாமல் இருக்கும்வண்ணம் தலைகளில் ஹெல்மெட் அணிந்தபடி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தை மேற்கொண்டனர்.



    ஐதராபாத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டிடத்தைப் புதுப்பிக்கக் கோரி மருத்துவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி சிகிச்சை அளித்து வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக வெளி நோயாளிகளை மரத்தடியில் வைத்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள், கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #Hyderabad
    கும்மிடிப்பூண்டி பஜாரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வழங்கினார்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பஜாரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வழங்கினார்.

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை போலீசார் பல்வேறு வகையில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி பஜாரில் ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி வைத்து அவர்களுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி கலந்து கொண்டு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அவர் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது இருசக்கர வாகன பயணத்தின்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிவதாக வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் நேற்று போக்குவரத்துத்துறை மற்றும் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மது அருந்திவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ, அதிக வேகமாகவோ வாகனங்களை ஓட்டிச்செல்லக்கூடாது.

    போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், செல்லதுரை, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    ×