search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hesitate"

    தேச பாதுகாப்புக்காக கடுமையான முடிவுகளை எடுக்க தயங்க மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார். #NationalSecurity #PMModi #India
    புதுடெல்லி:

    டெல்லியில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின முகாமில் என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பிறகு, என்.சி.சி. மாணவர்களிடையே மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்தியா, அமைதியை வலியுறுத்தும் நாடு. இருப்பினும், தேச பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்துள்ளது.



    இனிவரும் நாட்களிலும், தேச பாதுகாப்புக்காக கடுமையான, பெரிய முடிவுகளை எடுக்க அரசு தயங்காது. ஏனென்றால், தேச பாதுகாப்புக்குத்தான் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

    போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பான பாதுகாப்பு திட்டங்கள், கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன. இந்த ஆட்சியில்தான் அத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அதன்படி, போர் விமானங்கள், ஏவுகணைகள், டாங்கிகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன.

    நிலத்திலும், நீரிலும், வானிலும் இருந்து அணு ஆயுதங்களை ஏவக்கூடிய சக்தி படைத்த ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இருந்தாலும், “நாங்களாக போரை தூண்ட மாட்டோம். போரை தூண்டினால், எதிரியை விடமாட்டோம்” என்று நமது படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

    புதிய இந்தியாவில் ஊழலுக்கு இடமில்லை. ஊழலில் ஈடுபடுபவர்களை விடமாட்டோம். பணியில் சிரத்தை கொண்டவர்களுக்கு ‘புதிய இந்தியா’ நிறைய வாய்ப்புகளை அளிக்கும்.

    நீங்கள் பிறந்த குடும்பமோ, பொருளாதார சூழ்நிலையோ உங்களது எதிர்காலத்தை தீர்மானிக்காது. உங்கள் திறமை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவைதான் தீர்மானிக்கும். இந்த அரசு, முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.) கலாசாரத்துக்கு முடிவு கட்டி, ‘எல்லோரும் முக்கியம்’ என்ற கலாசாரத்தை அறிமுகப்படுத்தும்.

    கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த எத்தனையோ முடிவுகளை இளைஞர்கள் ஆதரித்தனர். அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்கள் பரப்புவதுடன், எல்லோரும் வாக்களிக்குமாறு செய்ய வேண்டும்.

    இவ்வாறு மோடி பேசினார். #NationalSecurity #PMModi #India
    ×