search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hetmyer"

    ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. கார்லஸ் பிராத்வைட்டை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா ஏலம் எடுத்தது. #IPL2019 #IPLAuction2019
    ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுவராஜ் சிங்கிற்கு அடிப்படை விலையாக 1 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அவரை எந்த அணி உரிமையாளர்களும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. இதனால் அவர் ஏலம் போகவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி கேப்டனான கார்லஸ் பிராத்வைட்டை எடுக்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியில் கொல்கத்தா அணி ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஹென்ரிக்ஸை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    ஐபிஎல் ஏலத்தில் ஹனுமா விஹாரி 2 கோடி ரூபாய்க்கும், ஹெட்மையர் 4.20 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டார்கள். #IPL2019 #IPLAuction2019
    2019 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் வீரராக மனோஜ் திவாரி ஏலம் விடப்பட்டார். இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல் புஜாரா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் ஏலம் போகவில்லை.

    அடுத்து ஹனுமா விஹாரி ஏலத்திற்கு வந்தார். இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன், டெல்லி கேப்பிட்டல், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஹெட்மையர் ஏலத்திற்கு வந்தார். இவருக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×