search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himalayan 650"

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #royalenfield #Himalayan650



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய சக்திவாய்ந்த ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தைக்கென உருவாக்கி வருகிறது. புதிய சக்திவாய்ந்த ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் 650சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே என்ஜின் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 உள்ளிட்ட மாடல்களில் வழங்கியிருந்தது.

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மாடலில் முற்றிலும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் சேசிஸ் இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மாடலின் சஸ்பென்ஷன் மேம்படுத்தப்படுகிறது. எனினும் இதன் முன்புறம் மற்றும் பின்புறங்களில் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

    புதிய ஹிமாலயன் 650 மாடலில் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ். பிரேக்கிங் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற அம்சம் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 உள்ளிட்ட மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.



    649சிசி ஏர்/ஆயில்-கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 52என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. 

    தற்போதைய ஹிமாலயன் மாடலில் 411சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.5 பி.ஹெச்.பி. பவர், 32 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் துவக்க விலை முறையே ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.2.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 
    ×