என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » honda cb300r
நீங்கள் தேடியது "Honda CB300R"
ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் CB300R மோட்டார்சைக்கிளை இரண்டே மாதங்களில் 500க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. #HondaCB300R
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளை இந்தியாவில் இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஹோன்டா CB300R விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமான இரண்டே மாதங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளை இரண்டே மாதங்களில் சுமார் 500-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். மோட்டார்சைக்கிள்கள் விற்று தீர்ந்திருந்தாலும், இவற்றுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெறும் என ஹோன்டா அறிவித்துள்ளது.
புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
சமீபத்தில் ஹோன்டா CB300R இந்திய விநியோகம் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள்கள் டெல்லி, சண்டிகர், ஜெய்பூர் மற்றும் ஹரியானா உள்ளிட்ட இடங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. தற்சமயம் இந்த மோட்டார்சைக்கிள் முன்பதிவு செய்வோர் மூன்று மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளின் விநியோக பணிகள் துவங்கியிருக்கின்றன. #HondaCB300R
ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் CB300R மோட்டார்சைக்கிளின் விநியோகம் செய்ய துவங்கியிருக்கிறது.
ஹோன்டா CB300R நியூ கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் மோட்டார்சைக்கிளின் முதற்கட்ட விநியோகம் சண்டிகர், டெல்லி, ஜெய்பூர் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய CB300R மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஹோன்டாவின் முதல் 300 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 400க்கும் அதிகமானோர் இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்திருக்கின்றனர்.
புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
ஹோன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த CB300R மோட்டார்சைக்கிளை இதுவரை 400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCB300R #Motorcycle
ஹோன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட CB300R மோட்டார்சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஹோன்டா மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஜனவரி மாத துவக்கத்தில் துவங்கியது.
புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் ஜப்பான் நிறுவன பிராண்டின் முதல் நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே மோட்டார்சைக்கிள் ஆகும். பெயருக்கு ஏற்றார்போல் புதிய மோட்டார்சைக்கிள் முற்றிலும் வித்தியாச வடிவமைப்பை கொண்டிருக்கிறது.
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளை வாங்க இதுவரை சுமார் 400 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிள் முதல் மூன்று மாதங்களுக்கு விற்றுத் தீர்நதுள்ளது. இதனால் ஹோன்டா CB300R வாங்க விரும்புவோர் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
இத்துடன் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட் சேர்க்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை பின்புறம் மோனோஷாக் மற்றும் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க்கள் வழங்கப்பட்டிருக்கிறது. பிரேக்கிங் வழங்க இரு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
ஹோன்டா நிறுவனத்தின் CB300R மோட்டார்சைக்கிளின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #HondaCB300R #Motorcycle
ஹோன்டா நிறுவனத்தின் CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக ஹோன்டா நிறுவனம் தனது CB300R விலை ரூ.2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் புதிய CB300R விளம்பரம் செய்வதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. படப்பிடிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோன்டா CB300R புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிளின் பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.
இந்தியாவில் ஹோன்டா CB300R என்ட்ரி-பிரீமியம் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிளாக இருக்கும். புதிய மோட்டார்சைக்கிள் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஹோன்டா CB300R வடிவமைப்பு CB1000R மாடலை தழுவி அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் நன்றி: Rushlane
ஹோன்டா CB300R மாடலில் 286சிசி, 4-வால்வ், DOHC, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். பவர், 27.5 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடலில் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலும் இதேபோன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இவற்றுடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்டரூமென்ட் கிளஸ்டர், IMU மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படலாம். மேலும் 41 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க் மற்றும் பிரீலோடு-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
×

X