என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hooch"
- குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. சுமார் 30 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனைகளில் இன்னும் சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொடாட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை உறுதிப்படுத்தியுள்ளது.
அண்டை மாவட்டமான அகமதாபாத்தின் தண்டுகா தாலுகாவைச் சேர்ந்த ஐந்து பேர் நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.
பாவ்நகர், பொடாட், பர்வாலா மற்றும் தண்டுகாவில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இன்னும் சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா கூறுகையில், " போலி நாட்டு மதுபானம் தயாரித்து விற்பனை செய்த பொடாட் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளோம்.
நேற்று அதிகாலை பர்வாலா தாலுகாவின் ரோஜித் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற கிராமங்களில் வசிக்கும் சிலரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பர்வாலா மற்றும் பொடாட் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது" என்றார்.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், போலி மது விற்பனை செய்பவர்களை பிடிக்கவும் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பாவ்நகர் ரேஞ்ச்) அசோக் குமார் யாதவ் தெரிவித்தார்.
குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் சமீபத்தில் துல்கான் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற நாட்டு சாராயக் கடையில் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டு நேற்று வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடை உரிமையாளரை கைது செய்யும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ராம் ஷ்வராப் சிங் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது பேரன்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரை தொடர்ந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். #liquorkills
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் நேற்று இரவு துல்கான் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற நாட்டு சாராய கடையில் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டு நேற்று இரவே 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் மேலும் 5 பேர் அடுத்தடுத்து பலியாகினர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மேலும், விஷ சாராயம் அருந்திய பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடை உரிமையாளரை கைது செய்யும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மது வியாபாரியும், ஒப்பந்ததாரரும் தலை மறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கடையில் உள்ள சாராயம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். #poisonoushooch
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்