search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HP OMEN X 2S"

    ஹெச்.பி. நிறுவனம் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்.பி. நிறுவனம் பெய்ஜிங் கேமிங் நிகழ்வில் ஒமன் மற்றும் ஹெச்.பி. பெவிலியன் கேமிங் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. இவற்றில் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் மாடலும் அடங்கும். இது லிக்விட் மெட்டல் காம்பவுன்ட் கூல்டு சி.பி.யு. கொண்ட முதல் லேப்டாப் ஆகும். இதன் விற்பனை இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்குகிறது.

    ஹெச்.பி. ஒமன் எக்ஸ் 2எஸ் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் ஆகும். இதில் 15-இன்ச் 1080 பிக்சல் அல்லது 4K டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் இரண்டாவது ஸ்கிரீன் 6-இன்ச் தொடுதிரை வசதி கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 144Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 240Hz  ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே இந்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த லேப்டாப் 9 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ9 பிராசஸர், NVIDIA GeForce RTX 2080 கிராஃபிக்ஸ், பி.சி.ஐ. எஸ்.எஸ்.டி. மற்றும் இன்டெல் ஆப்டேன் மெமரி மற்றும் எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 3 யு.எஸ்.பி. 3.1 டைப் ஏ போர்ட்கள், ஒரு தண்டர்போல்ட் 3 யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஒரு ஹெச்.டி.எம்.ஐ. 2.0 போர்ட், ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய ஒமன் எக்ஸ் 2எஸ் லேப்டாப்பில் ஒமன் டெம்பெஸ்ட் கூலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதில் மூன்று பக்கங்களில் வென்டிங் மற்றும் 5 வழிகளில் காற்றோட்டம் புகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 வோல்ட் ஃபேன் மாட்யூல் ஒன்றும் 3-ஃபேஸ் மோட்டார் மற்றும் ஃபுளுயிட் டைனமிக் பேரிங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் பயனர்களுக்கு ரியல்-டைம் ஸ்கிரீன் மிரரிங், ஆர்.ஜி.பி. லைட்டிங்கை கஸ்டமைஸ் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஒமன் எக்ஸ் 2எஸ் லேப்டாப் மாடலுடன் ஹெச்.பி. நிறுவனம் ஒமன் 15 மற்றும் ஒமன் 17 லேப்டாப்களை அறிமுகம் செய்தது. இவை முந்தைய மாடல்களை விட 20 மற்றும் 18 சதவிகிதம் வரை மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்களிலும் ஒமன் டெம்பெஸ்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
     
    ஹெச்.பி. நிறுவனம் பெவிலியன் கேமிங் 15 மற்றும் புதிய ஹெச்.பி. பெவிலியன் கேமிங் 17 லேப்டாப்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்களில் 9 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 / ஐ7 பிராசஸர், NVIDIA GeForce GTX 1660 டி.ஐ. கிராஃபிக்ஸ் மற்றும் மேக்ஸ் கியூ டிசைன் கொண்டிருக்கிறது.
    ×