என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » hussainiwala
நீங்கள் தேடியது "Hussainiwala"
பாகிஸ்தான் எல்லை அருகே சட்லஜ் நதியின் குறுக்கே பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். #NirmalaSitharaman #Hussainiwala
பெரோஸ்பூர்:
பஞ்சாப்பின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி உசைனிவாலா கிராமம் உள்ளது. சட்லஜ் நதிக்கு அந்த கரையில் அமைந்திருக்கும் இந்த பகுதியை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் நதியின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.
கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது, எதிரி நாட்டுப்படைகள் முன்னேறாமல் இருப்பதற்காக இந்த பாலம் தகர்க்கப்பட்டது. பின்னர் போர் முடிவடைந்ததும் அங்கு 280 அடி தூரத்துக்கு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த தற்காலிக பாலத்தை மாற்றிவிட்டு 82.40 மீட்டர் தொலைவுக்கு நிரந்தர பாலம் அமைக்கும் பணிகளை எல்லையோர சாலை அமைப்பிடம் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இந்த பாலப்பணிகள் தொடங்கி முடிவடைந்தது.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சுதந்திர போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருடன் தொடர்புடைய பூமியாகும், உசைனிவாலா. இந்த புனித பூமியில் பணியாற்றும் அரிய வாய்ப்பு பெற்றிருப்பதை, இங்கு பணியமர்த்தப்பட்டு உள்ள ராணுவ வீரர்கள் மனதில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார். #NirmalaSitharaman #Hussainiwala #tamilnews

×

X