என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » hwc2018
நீங்கள் தேடியது "HWC2018"
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டி டிரா ஆனதால் இந்திய அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. #HWC2018
பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியா அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெரும். 2 மற்றும் 3 வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெரும். முன்னதாக, இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இதனால் காலிறுதிக்கு தகுதி பெற கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்த்து களமிறங்கியது. இதில் 11-வது நிமிடத்தில் அமெரிக்கா வீராங்கனை மார்கஸ் பவொலினோ முதல் கோலை அடித்தார். இதனால் அமெரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை கோலாக மாற்றினார் இந்திய வீராங்கனை ராணி ரம்பால். இந்த கோல் மூலம் 1-1 என சமநிலை பெற்றது. பின்னர் இரண்டு அணிகளும் கோல் போட எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது. ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் மேற்கொண்டு கோல் போடாததால், ஆட்டம் டிரா ஆனது.
இந்திய அணி வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் டிரா ஆனதால், இந்திய அணி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ‘பிளே ஆப்’ சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெரும்.

×

X