search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hyderabad venkatachalapathi Temple"

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வெங்கடாசலபதி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகிற 13-ந்தேதி நடக்கிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற இடத்தில் வெங்கடசாலபதி கோவில் கட்டப்பட்டு வந்தது.

    கோவில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று கோவிலில் அங்குரார்பணம் நடந்தது. மகாகும்பாபிஷேக விழாவையொட்டி 13-ந்தேதி நள்ளிரவு 2.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை சுப்ரபாத சேவை, கும்பாராதனை நைவேத்தியம், மகா பூர்ணாஹுதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு உற்சவர்களான சீனிவாசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோவிலில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின்னர் மூலவர் சன்னதியில் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

    பிரம்மகோஷா பூஜைகள், வேத சாத்து முறையை தொடர்ந்து 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது உற்சவர்களான சீனிவாசபெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    பின்னர் உற்சவர்கள் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மாலை 7.30 மணி அளவில் கொடியிறக்கம் செய்யப்பட்டு கோவில் நடைசாத்தப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை 5 மணி அளவில் மீண்டும் கோவில் நடைதிறக்கப்படும்.

    இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி லட்சுமிகாந்தம் தெவித்துள்ளார்.
    ×