search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hydrocarbons project stop"

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித்திருப்பது நெடுவாசல் மக்களுக்கு கிடைத்த வெற்றி என வைகோ, சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடப் போவதாகவும், மாற்று இடம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

    ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். மக்களைத் திரட்டி கடுமையான போராட்டத்தை மேற்கொள்வோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கிறேன். நெடுவாசல் வெற்றிக்கு மக்கள் போராட்டமே காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேறு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என ஜெம் நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளதாலும், தமிழக அரசின் காலதாமதத்தால் இழப்பு ஏற்பட்டதாலும் ஜெம் நிறுவனம் இத்தகைய முடிவு எடுத்திருப்பது பலவிதமான போராட்டங்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் கிடைத்த முதல் வெற்றி” என்று தெரிவித்துள்ளார். 
    ×