search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "icc women world t20"

    மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியின் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. #WomenWorldT20
    கயானா:

    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 34 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    3-வது ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை நாளை (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.

    பலவீனமான அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. கேப்டன் கவூர் 2 ஆட்டத்தில் 117 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தார். பந்துவீச்சில் பூனம் யாதவ், ஹேமலதா தலா 5 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    அயர்லாந்து அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்க்க அந்த அணி கடுமையாக போராடும். நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இன்று நடைபெறும் ‘ஏ’ பிரிவு ஆட்டங்களில் இலங்கை- வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. #WomenWorldT20
    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன. #WomenWorldT20
    அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய அயர்லாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்னே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 17.3 ஓவரில் 120 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா 3-வது வெற்றியை பெற்றது. நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. #WomenWorldT20
    வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஹர்மன்ப்ரீத் நியமிக்கப்பட்டுள்ளார். #WWT20
    வெஸ்ட் இண்டீஸில் வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக டி20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



    உலகக்கோப்பைக்கான பெண்கள் அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

    1. ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), 2. ஸ்மிரிதி மந்தனா, 3. மிதாலி ராஜ், 4. ஜெமிமா ரோட்ரிக்ஸ், 5. வேதா கிருஷ்ணமூர்த்தி, 6. தீப்தி ஷர்மா, 7. தன்யா பதியா (விக்கெட் கீப்பர்). 8. பூணம் யாதவ், 9. ராதா யாதவ், 10. அனுஜா பாட்டீல், 11. ஏக்தா பிஸ்ட், 12. ஹேம்லதா, 13. மன்சி ஜோஷி, 14. பூஜா வாஸ்ட்ராகர், 15. அருந்ததி ரெட்டி.
    ×