search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ignis Radiance Edition"

    • புதிய இருக்கை கவர்கள், குஷன்கள், டோர் கிளாடிங் மற்றும் டோர் வைசர்கள் ஆகியவை அடங்கும்.
    • 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி.

    சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் எக்ஸ்- ஷோரூமில் ரூ.5.49 லட்சத்தில் இக்னிஸ் ரேடியன்ஸ் மாடல் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் உள்ளேயும், வெளியேயும் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது Sigma, Zeta மற்றும் Alpha வேரியன்ட்டுகளில் கிடைக்கிறது.

    எண்ட்ரி லெவல் வேரியன்ட்:

    Sigma வேரியன்ட்டை வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.3,650-ஐ செலுத்தினால் வீல் கவர்கள், டோர் விசர்கள் மற்றும் குரோம் டிரிம் ஆகியவை பெறலாம்.


    மிட் மற்றும் டாப்-எண்ட் வேரியன்ட்:

    Zeta மற்றும் Alpha வகைகளின் வாடிக்கையாளர்கள் ரூ. 9,500 மதிப்புள்ள பாகங்களை பெறலாம். இதில் புதிய இருக்கை கவர்கள், குஷன்கள், டோர் கிளாடிங் மற்றும் டோர் வைசர்கள் ஆகியவை அடங்கும்.

    மாருதி இக்னிஸ் ரேடியன்ஸ் எடிஷன் எஞ்சின் ஆப்ஷன்கள்

    இக்னிஸ் ரேடியன்ஸ் எடிஷன் நிலையான ஹேட்ச்பேக்கில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 82bhp மற்றும் 113Nm இழுவிசையை உற்பத்தி செய்கிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ×