search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "imran khan party"

    தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் மந்திரி டேனியஸ் அஜீஸை இம்ரான்கான் கட்சியின் முக்கிய தலைவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ‘ஜியோ’ நியூஸ் சேனல் சமீபத்தில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தியது. அதில் தனியார்மய துறை மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் நீமுல் ஹக், பாகிஸ்தான் மக்கள் கட்சி நபீசா ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கான் கட்சி தலைவர் நீமுல் ஹக்கை ‘திருடன்’ என தெரிவித்தார்.

    அதனால் ஆத்திரம் அடைந்த ஹக் மந்திரி டேனியல் அஜீஸை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அஜீஸ் நிலை குலைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் நபீசா ஷா, மற்றொரு சிறப்பு அழைப்பாளர் ஒருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து டி.வி. நிகழ்ச்சியும் பாதியில் முடிக்கப்பட்டது.

    நடந்த சம்பவத்துக்கு மந்திரி அஜீஸ் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “இது பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய சதி. ராணுவம் மற்றும் நீதித்துறையின் பின்னணியில் இருந்து கொண்டு இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கு அழிந்து விடுகிறது என்றார்.

    இதுகுறித்து, இம்ரான் கான் கட்சி தலைவர் ஹக் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அஜீஸ் ராணுவ தளபதிகள் குறித்தும், இம்ரான்கான் குறித்தும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசினார். அவர் தனது போக்கை மாற்றிக் கொண்டு உண்மையை பேசுவார்” என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு இவர் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஜமீல் எஸ்.காம்ரோ மீது தண்ணீர் டம்ளரை வீசியுள்ளார். #Tamilnews
    ×