search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income tax exemption limit"

    தனிநபர் வருமானவரி உச்சவரம்பை வரும் பட்ஜெட்டில் ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Budget2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    அன்றைய தினம் காலை 11 மணியளவில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பிப்ரவரி 1-ந்தேதி இந்த ஆண்டுக்கான (2019-2020) இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்.

    இந்த பட்ஜெட் பிரதமர் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் பாராளுமன்ற தேர்தல் வருவதாலும் பல்வேறு சலுகைகள் இடம் பெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.



    குறிப்பாக தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது ரூ.2.5 லட்சம் வரையில் ஈட்டப்படும் தனிநபர் வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

    ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதமும் ரூ.5லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும் ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக இந்திய தொழிற்கூட்டமைப்பு பட்ஜெட்டுக்கு முந்தைய தனது பரிந்துரைகளில் ஒன்றாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வரி செலுத்தும் வரம்புக்குள் அதிகமான மக்களை கொண்டு வரவும், பாரபட்சமில்லாத வரி விதிப்பு அமைப்பை மாற்றுவதற்கும் அரசு முயற்சித்து வருகிறது.

    வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்கள் ஆதரவைப்பெறும் வகையில் பா.ஜனதா அரசு தனது பொருளாதார தொலை நோக்கு கொள்கைகளை குறிப்பிட்டு காட்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #Budget2019
    ×